யாத்திரை அனுபவங்கள்~11 நிமிட வாசிப்பு19 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

சீரலைவாய் யாத்திரை - படங்களும் அனுபவங்களும்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 12 நவம்பர் 2006 – 25 நவம்பர் 2007

அன்பு நண்பர்களே, சென்ற வாரம் திருச்செந்தூர் முருகன் அழைக்க பாதயாத்திரையாக சிவகாசியிலிருந்து என்னையும் சேர்த்து பதினோரு பேர் கொண்ட குழுவாக சென்றோம். அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் அடைந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி!

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
--- அருணகிரியார்.

சிவகாசியிலிருந்து மாலை 3 மணியளவில் நடக்க ஆரம்பித்தோம். மாலை 5 மணியளவில் சாத்தூர் அருகே செல்கையில் எங்களை வாழ்த்திய நிலா

இதோ ஆதவன் எங்கள் யாத்திரைக்குத் தன் செங்கரங்களால் தந்த நல்லாசி.

ஆதவன் மறைகிறான்.

13 நவம்பர் 2006

மறுநாள் அதிகாலை கோவில்பட்டி சென்றடைந்தோம். கோவில்பட்டியிலிருந்து 26 கிலோ மீட்டர் தூரமுள்ள பசுவந்தனை என்னும் ஊருக்கு இரவுக்குள் செல்ல வேண்டும். வழியில் தற்போது பெய்த மழையால் பசுமை கொட்டிக் கிடக்கிறது.

பசுவந்தனை செல்லும் வழியில் முதலில் வரும் காமநாயக்கன்பட்டி! இங்குதான் புகழ் பெற்ற பரலோக புனித ஆரோக்ய மாதா கோவில் இருக்கிறது.

புனித மாதா கோவில் வளாகத்தில் வெளியில் இயங்கும் பள்ளி வகுப்பு! இங்கே தான் சிறிது நேரம் இளைப்பாறினோம்.

பரலோக புனித ஆரோக்ய மாதாவின் கோவில்.

கோவிலின் உள் மாதாவைத் தரிசித்து ஆசி பெற்றோம். என்ன மாயம்? 50 கி.மீ. நடந்து வந்த வலியனைத்தும் மறந்தே போனது.

அன்று இரவு பசுவந்தனையில் தங்கினோம். மறுநாள் காலை மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். வீர பாண்டிய கட்ட பொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒட்டப் பிடாரத்தில் இருந்த இந்தக் குளத்தில் ஆனந்தமாக நீராடினோம். களைப்பனைத்தும் மறைந்தது!

அன்று எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது அனைத்தும் பசுமையும், இயற்கை வளமும் தான். அதை உங்களுக்கும் காட்ட வேண்டுமல்லவா?!

இதோ இப்போது தான் பெய்த தூறலில் குளித்திருக்கும் பசும்புல்.

இதோ நேற்றுப் பெய்த மழையால் சாலையில் ஆரம்பித்திருந்த சிற்றருவி!

இன்னுமொரு பசுமைக் கம்பளம் உங்களுக்காக!

மதியம் இரண்டு மணிக்கு நிலா போல் குளிர்ந்திருந்த சூரியன்! நம்பமுடியவில்லை அல்லவா?

இந்தப் பாதையில் வண்டிகள் அதிகம் செல்லாததால் சாவகாசமாக சாலையைக் கடக்கும் நத்தையார்.

மாலை தூத்துக்குடி அருகே இருக்கும் புதுக்கோட்டை என்னும் ஊருக்கு வருக வருக என்றழைக்கும் சந்திரன்.

சந்திரன் மட்டும் தானா? நான் கூடத் தான் வரவேற்பேன் என்று போட்டி போடும் சூரியன்!

அன்று இரவு புதுக்கோட்டையில் தங்கினோம். அதிகாலையே ஆத்தூருக்குப் பயணமாக ஆரம்பித்தோம். ஊர்ப்பெயர் ஆத்தூர் என்று வைத்ததானாலோ என்னவோ எங்கு பார்த்தாலும் நீர் வளம்!

செந்தூருக்கு வரவேற்கும் உதயம்.

ஆத்தூர் அருகே குதூகலமாய்க் காத்திருக்கும் வாழை!

ஆத்தூரில் பெயருக்கேற்ப இரு கரை தொட்டு ஓடும் ஏரல் ஆறு!

திவ்யமாய் ஆற்று நீரில் காலை நீராடினோம்.

இதோ! 18 கி.மீ. தான் திருச்செந்தூர் என்னும் தூரத்தில் சற்றே ஓய்வெடுக்கும் யாத்திரை குழுவினர்.

பாலத்தை மீறிச் செல்லும் நீரோடை.

இதோ! தூரத்தில் செந்தூர்க் கோபுரம் தெரிகிறது!

இதோ யாத்திரைக் குழுவினர், கடற்கரையில்.

செந்தூர்க்கடல்.

திருச்செந்தூர் வேலவனின் கோபுர தரிசனம்.

கடலாடுகிறோம்.

தூரத்தில் காணத் தெரிந்த வானவில்.

செந்தூர்க் கோபுரத்தின் விசேசமான தக்ஷிணாமூர்த்தி!

சமீபத்தில் கோவிலுக்கென்று வழங்கப்பட்ட குமரன், தெய்வானை யானைகளில் ஒருவர். தெய்வானை! குட்டிகள் தாம்! பார்க்க கொள்ளை அழகு.

கோபுர தரிசனம். மற்றொரு கோணத்தில்.

இதோ. உங்களுக்காக மாலையில் குமரனின் தங்க ரத பவனி.

தங்க ரதம் கொஞ்சம் தூரத்தில்.

25 நவம்பர் 2007

இதோ இந்தாண்டு யாத்திரை சென்ற போது எடுத்த படங்கள். உங்கள் பார்வைக்கு. :) இந்த முறை பத்துப் பேர் சேர்ந்து யாத்திரை செய்தோம். பயணம் வழக்கம் போல் சென்ற பாதையில் தான். அதாவது சிவகாசி - சாத்தூர் - ஓடைப்பட்டி (தங்கல்) - கோவில்பட்டி - காமநாயக்கன்பட்டி - பசுவந்தனை (தங்கல்) - ஓட்டப்பிடாரம் - புதியம்புத்தூர் - புதுக்கோட்டை - ஆத்தூர் (தங்கல்) - திருச்செந்தூர். கோவில்பட்டியிலிருந்து பேருந்து செல்லும் பாதையான தூத்துக்குடி மார்க்கம் நாங்கள் செல்வதில்லை. காரணம் பாதையும் தூரம், நடந்து செல்வதைக் கடினமாக்கும் வண்டிகளின் நெரிசல். சிவகாசியில் இருந்து ஞாயிற்றுக் கிழமை (18-11) அன்று கிளம்பினோம் மதியம் போல். நாங்கள் இரவு தங்க நினைத்த ஓடைப்பட்டி 33 கி.மீ. தூரமாகும். சாதாரணமாக நாங்கள் நடக்கும் வேகம் மணிக்கு 4 கி.மீ. ஆகும். ஒரு வேளைக்கு 20 கி.மீ. என்ற கணக்கில் இரு வேளைகள் ஒரு நாளைக்கு என 10 மணி நேரம் நடப்போம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 40 கி.மீ. தூரம். சிவகாசி - திருச்செந்தூர் 140 கி.மீ. தூரம். எனவே சென்று சேர 3 1/2 நாட்கள் நடைபயணம் எங்களுக்கு அவசியமாகும். சொகுசு சாமியார்களாய் இருப்பதால் காலில் செருப்பின்றி வெயிலிலும் தார் சாலையிலும் செல்ல முடிவதில்லை. எனவே காலில் செருப்போடு தான் நடப்போம். வழியெங்கும் இதற்காகவே எங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஞாயிறன்று இரவு மாலை 8 மணி அளவில் ஓடைப்பட்டி சென்றடைந்தோம். ஓடைப்பட்டி சாத்தூர் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் இருக்கின்றது. புகழ்பெற்ற விநாயகர் ஆலயம் அங்குண்டு. ஆலயத்தைச் சுற்றிச் சில கடைகள். ஒரு மண்டபம். அவ்வளவு தான் ஓடைப்பட்டி. சில ஆண்டுகளுக்கு முன் விநாயகர் மட்டும் மரத்தின் கீழ் வீற்றிருந்தார். இப்போது மிகப் பிரபலமாகிவிட்டது. அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு மண்டபத்தில் உறங்கினோம். அதிகாலை 4 மணியளவில் எழுந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பட்டி செல்ல ஆரம்பித்தோம். கோவில்பட்டி சென்று சேர்வதற்கும் விடிவதற்கும் சரியாக இருந்தது. விடியல் உங்கள் கண்களுக்கு. :) மிக அழகான மேகக் கூட்டமும், பின்னால் உதய ஆதவனும்.

2 படங்கள் கிடைக்கவில்லை

கோவில்பட்டி நகருக்கு உள்ளே நுழைகையில் தற்போது பெய்திருந்த மழையால் நிறைந்திருந்த ஏரி. தூரத்தில் ஒரு வாத்து நீந்திச் செல்வது தெரிகின்றதா?

படம் கிடைக்கவில்லை

கோவில்பட்டியிலிருந்து எங்கள் கிராமங்கள் வழியான பயணம் ஆரம்பிக்கின்றது. மிக சுவாரசியமான நிகழ்வுகள், அனுபவங்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியான வயல்வளம், விஞ்ஞான வளர்ச்சி அதிகம் இல்லாத குக்கிராமங்கள், காணக் கிடைக்காத நீர்வளம், வந்து உதவும் மக்கள் என பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. கோவில்பட்டியிலிருந்து காமநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் வயல்.

3 படங்கள் கிடைக்கவில்லை

ஏதோ ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கும் பெண்மணி.

படம் கிடைக்கவில்லை

வழியில் ஒரு அழகான நீர் நிறைந்த கிணறு பார்த்தோம். 15 அடி ஆழத்திலேயே தெளிந்த நீருடன் சுத்தமாக இருந்தது. அதிலேயே அது எத்தனை அழகாகப் பராமரிக்கப் படுகின்றது என்று தெரிந்தது. கிணற்று நீரின் சற்று மேலாக ஐந்து அடி உயரத்திலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக ஊறி சுற்றிலும் ஒழுகியது அந்தப் பகுதியில் நீர்வளத்தைக் காட்டுவதாக அமைந்தது. இதோ படம்.

படம் கிடைக்கவில்லை

நான் ஏற்கனவே சொன்னது போல், பாதையில் நடக்கும் போது எங்கள் எடையையே எங்களால் தூக்க முடிவதில்லை. (அத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்கின்றோம் என்பது தான் உண்மை). எங்கள் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வருவதற்கென்று ஒரு முச்சக்கர வண்டியையும் அமர்த்தி ஏதோ ஒரு படை செல்வது போல் தான் செல்வோம். இதோ குழுவினர்.

படம் கிடைக்கவில்லை

ஒரு வயல்வெளியில் வேப்ப மர நிழலில் இறங்கி சிறிது நேரம் படுத்திருந்தோம். அப்போது தலைக்கு மேல் இருந்த வேப்பிலை. ;)

படம் கிடைக்கவில்லை

செல்லும் வழியில் அழகான மேகக் கூட்டம்.

படம் கிடைக்கவில்லை

காமநாயக்கன்பட்டி ஒரு அழகான ஊர். இங்கிருக்கும் பரலோக மாதா ஆலயம் உலகப்புகழ் பெற்றது என்றால் அது மிகையாகாது. மதநல்லிணக்கத்தின் அடையாளமாய் விளங்குகின்றது இந்த ஆலயம். ஆலயத்தின் வளாகத்திலேயே பள்ளியும் இயங்கி வருகின்றது. நாங்கள் சென்றடையும் போது மதியம் 4 ஆகி இருந்தது. சாப்பிடாமல் நடந்ததில் பயங்கரப் பசியாக இருந்தது. அங்கிருக்கும் மக்களின் உதவும் உள்ளத்தைப் பாருங்கள். அங்கிருந்த உணவு விடுதி ஒன்றில் சாப்பாடு இருக்கின்றதா என்று கேட்டோம். கேட்ட நேரமோ மாலை 4. முடிந்து விட்டதே என்று சொன்னதோடு விடாமல், அரைமணி நேரம் பொறுங்கள், அனைவருக்கும் உணவு தயார் செய்கின்றேன் என்று ஆபத்பாந்தவனாய் அந்த விடுதிக்காரர் உதவ முன் வந்தார். அந்த அரைமணி நேரமும் ஆலய வளாகத்திலேயே (க)இளைப்பாறினோம். அங்கிருக்கும் சிறார்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்ததில் பொழுதும் பசியும் ஓடியே போய்விட்டது.

2 படங்கள் கிடைக்கவில்லை

மாலை 5 மணி போல் உணவருந்தி விட்டு மீண்டும் 10 கி.மீ. தொலைவில் இருக்கும் பசுவந்தனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதோ வழியில் ஆதவனின் ராஜ்ஜியம், மேகங்களின் வண்ணக் கோலம்.

2 படங்கள் கிடைக்கவில்லை

அன்றிரவு பசுவந்தனையில் தங்கினோம். அதிகாலை கிளம்பி ஓட்டப்பிடாரம் வந்து சேர்ந்தோம். அங்கே இந்த அழகிய குளத்தில் நீராடினோம்.

படம் கிடைக்கவில்லை

இது சென்ற ஆண்டு இதே குளத்தில் எடுத்த படம்! போன வருடத்தை விட நீர் அதிகமாய் இருக்கின்றதல்லவா?! இதே திரியில் முன்பிருந்து எடுத்தேன்!

புதியம்புத்தூர் அருகே செல்கையில் நீர் நிரம்பிய அழகிய ஏரி. காலைச் சூரியனில் கதகதக்கின்றது.

படம் கிடைக்கவில்லை

புதியம்புத்தூர் ஊர் சிறிய ஊர் என்றாலும், சிறுவர் சிறுமிகளுக்கான ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்கின்ற ஒரு ஊர். :) நிறைய ஜவுளி நிறுவனங்களின் அதிபர்களுக்கு சொந்த ஊர் இது தான். அங்கிருந்து தூத்துக்குடிக்கு அருகில் வந்து சேரும் புதுக்கோட்டைக்குச் செல்லும் வழி இது.

2 படங்கள் கிடைக்கவில்லை

இதோ, புதுக்கோட்டை சென்று சேர்வதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டது.

படம் கிடைக்கவில்லை

கொஞ்சம் கொஞ்சமாய் அஸ்தமனம்!

படம் கிடைக்கவில்லை

புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆத்தூர் நோக்கிப் பயணம் ஆரம்பித்தோம். ஆத்தூரில் வந்து தான் தூத்துக்குடி வழியும் வந்து சேர்கின்றது. ஆத்தூர் அருகே இருக்கும் புகழ்பெற்ற சுடலைமாடசுவாமி கோவிலிலேயே தங்கினோம். மறுநாள் காலை 3 மணி அளவில் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். ஆத்தூரிலிருந்து 17 கி.மீ. தான் திருச்செந்தூர். 140 கி.மீ. தூரப் பயணத்தை முடிக்கப் போகின்றோம் என்றதுமே நடையில் ஒரு உற்சாகமும், விரைவில் ஆண்டவன் தரிசனம் கிட்டும் ஆவலும் அளவிட முடியாததாய் இருந்தது. அதை ஆமோதிப்பது போல் சூரியன் உதயம்.

2 படங்கள் கிடைக்கவில்லை

காலை 8.30 மணியளவில் செந்திலாதிபன் ஆட்சி செய்யும் திருச்செந்தூர் சென்றடைந்தோம். அங்கே சேர்ந்த மறுவிநாடியே நடந்து வந்த வலியெல்லாம் பறந்து விட்டது என்றால் அது மிகையாகாது. கோவிலில் துள்ளி விளையாடும் வண்ண மயில்.

படம் கிடைக்கவில்லை

செந்தூர்க்கடல்.

படம் கிடைக்கவில்லை

சஷ்டி அப்போது தான் முடிந்திருந்ததால் அதிகக் கூட்டமில்லை என்றாலும், அன்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் நிறையத் திருமணங்கள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் நாங்கள் மட்டும் தான் கோவிலில் எனலாம். ஆனந்தமாய் செந்தூர் கந்தக் கடவுளை கண்ணீர் மல்க தரிசித்தோம். இரவு 8 மணியளவில் கிளம்பி அன்றிரவே 12 மணிக்கெல்லாம் இல்லம் சென்றடைந்தோம். 4 நாட்கள் செய்த இந்த ஆன்மீக நடை பயணம் வாழ்வில் ஒரு நிறைவைத் தந்தது. என்னுடன் பயணித்தமைக்கு நன்றி நண்பர்களே.

திருச்செந்தூர்க்கோவிலில் அகங்காரம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களின் பிரதிநிதிகளாம் சூரபத்ம சகோதரரைச் சீர் செய்து கன்மத்தையும் மாயத்தையும் அழித்து அகங்காரத்தை ஒடுக்கி சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி தன்னுடன் வைத்துக் கொண்ட திருக்குமரன், சிவபூஜை செய்ததாக ஐதீகம். அவ்வாறு சிவபூஜை செய்து விட்டு கையில் ஜபமாலையுடனும் மலருடனும் திரும்பிய படி நிற்கின்ற கோலமாய்த் திருச்செந்தூரில் காட்சியளிக்கின்றார். மிக சாந்தமாகக் காட்சியளிக்கும் திருமுகம். கையில் வேலில்லை. உலகை நான் தான் ஆட்சி செய்கின்றேன் என்று செங்கோல் போன்ற தண்டமேந்திக் காட்சியளிக்கிறார் இங்கே. இவருக்கு உற்சவமூர்த்தியாய் குமரவிடங்கப் பெருமாள் இருக்கின்றார். செந்தூரில் வள்ளி தெய்வானையுடனும், பன்னிருகரங்களுடனும் ஷண்முகராகவும் காட்சியளிக்கின்றார். ஷண்முகரின் உற்சவமூர்த்தியாய் ஜெயந்திநாதர் இருக்கின்றார். இதோ கையில் பூஜைக்கான மலர்களுடனும் ஜபமாலையுடனும் சாந்தமாய்த் தண்டமேந்தி செந்திலாதிபன்.

படம் கிடைக்கவில்லை

உற்சவமூர்த்தி ஜெயந்திநாதர்.

படம் கிடைக்கவில்லை

இது கோவில் பிரகாரத்தில் காட்சியளிக்கும் சூரனை ஆட்கொள்ளும் சத்ரு சம்ஹாரமூர்த்தி.

படம் கிடைக்கவில்லை

இது ஷண்முகர்.

படம் கிடைக்கவில்லை

பழனிக்கு அடுத்தபடியாய் அருணகிரிநாதர் அதிகம் பாடிய திருத்தலம் திருச்செந்தூர் என்பது ஒரு கூடுதல் தகவல். திருவண்ணாமலையில் முருகனால் ஆட்கொண்டபிறகு வயலூர் சென்று கணபதியை பாடி பிறகு தலம் தோறும் சென்று பாடிய பாடல்கள் பலப்பல. அவைகளைத் தொகுத்து கீழ் கண்டவாறு வகைப் படுத்திருக்கின்றனர்

விநாயகர் 6
ஆறு திருப்பதி ( ஆறு படைவீடு என்று
எல்லோறாலும் சொல்லப்படுவது) 317
திருப்பரங்குன்றம் 14
திருச்செந்தூர் 83
பழநி 97
சுவாமிமலை 38
திருத்தணிகை 63
குன்றுதோறாடல் 6
பழமுதிர்சோலை 16
பஞ்சபூதல ஸ்தலங்கள் 207
காஞ்சீபுரம் (ப்ருதிவி ஸ்தலம்) 44
திருவானைக்கா(அப்பு ஸ்தலம்) 14
திருவருணை(அக்னி ஸ்தலம்) 79
திருக்காளத்தி(வாயு ஸ்தலம்) 3
சிதம்பரம்(காச ஸ்தலம்) 67
மற்ற ஸ்தலங்கள் 477
பொது 316
க்ஷேத்திர கோவை 1
திருவெழுகூற்றிருக்கை 1

ஆக 1324 திருப்புகழ் பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கிறது. இன்னும் 16 பாடல்கள் அருணகிரியார் தான் இயற்றியதுதானா என சந்தேகத்தில் இருப்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. ( மொத்த பாட்டு எண்னிக்கையில் சில வித்தியாசங்கள் இருக்கலாம்) நன்றி S Rajan. (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=241922#241922)

மேலும் வாசிக்க

யாத்திரை அனுபவங்கள்

யாத்திரை அனுபவங்கள்

காஞ்சி உலாவும், நினைவுகள் உலாவும்.

17-02-2008. ஞாயிற்றுக்கிழமை. சென்னை. எப்போதும் போலன்றி அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் விழித்து அலைபேசி எழுப்புவதற்குள் அதன் வாயை அடக்கினேன். எழுந்து 6 மணி…

யாத்திரை அனுபவங்கள்

பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கும் மதுரைக்கும்!

நேற்று ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் தமிழ் மென்பொருள் கண்காட்சியைப் பார்க்கும் ஆர்வத்திலும், நம் மன்ற உறுப்பினர் செல்வ முரளியைச் சந்திக்கும் ஆவலிலும், மன…