சிந்தனைகள்~13 நிமிட வாசிப்பு19 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

ஐந்தாவது தூண்

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 2 ஜனவரி 2007 – 6 ஜனவரி 2007

நம் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

  1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (பிரதமர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை)
  2. அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் (தலைமை செயலாளர் முதல் கிராமத்தின் தலையாரி வரை)
  3. நீதித் துறை (தலைமை நீதிபதி முதல் மாவட்ட நீதிபதி வரை)
  4. பத்திரிகைத் துறை (அரசாங்க கெஸட் முதல் பத்திரிகைகள் வரை.
  5. இதெல்லாம் எங்களுக்கே தெரியுமே? சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு முதல்ல என்கிறீர்களா? இதோ ஆரம்பிக்கின்றேன். இதற்கும் சனிக்கிழமை நான் திருச்சி சென்றதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. சிவகாசியில் எக்ஸ்னோரா சேவை அமைப்பு காலூன்றியது பல பேர் மூலமாக. அதில் எனது நெருங்கிய நண்பரான திரு. அபிரூபனும் ஒருவர். அவரும் அவரது மனைவியாரும் தங்களின் சமூக அக்கறை காரணமாக பசுமை, தூய்மை இயக்கத்தில் தங்களின் மதிப்பற்ற நேரத்தையும் செல்வத்தையும் செலவிடுபவர்கள். நானும் அவ்வப்போது அணிலாக அவர்களுக்கு உதவுவதுண்டு. சிவகாசி நகராட்சியில் துப்புரவுப் பணியைத் தனியார் மயமாக்க தீர்மானம் நிறைவேற்றிய போது, அதனால் ஊழல் தான் மலிந்து போகும், பொதுமக்களுக்கு எந்த வித பலனும் இருக்கப் போவதில்லை என்னும் தீர்மானத்திற்கு மக்கள் வந்திருந்தனர். அப்போது தான் திரு. அபிரூபன் அவர்கள் சிவகாசி எக்ஸ்னோரா இன்னொவேட்டர்ஸ் கிளப் என்ற சங்கத்தைத் தொடங்கினார். அதில் அவர் தலைவராயிருக்க, என் பெயரைச் செயலராகப் போட்டுக் கொண்டார். இன்னும் ஒரு நண்பர் (திரு. உமாகாந்த்) துணைத் தலைவரானார். இப்படி மூன்றே பேர் கொண்ட அந்த சங்கம், சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கத்தின் ஆதரவில் அந்த தனியார் மயமாக்கும் ஒப்பந்தத்தை லாப நட்டமில்லா திட்டமாக (No Profit - No Loss) எடுத்துச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, எங்கள் சங்கத்தின் பெயரிலேயே அந்த ஒப்பந்தத்தை ஏல முறையில் எடுத்தோம். ஆர்வமிக்க இளைஞர்களை வேலைக்கமர்த்தி அறிவியல் பூர்வமாக குப்பையை வெளியேற்றும் முறையின் மூலம் ஆறே மாதங்களில் மக்கள் மனத்தைப் பிடித்தோம். நாங்கள் செய்ததெல்லாம் இது தான்:

  6. எங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை கிடையாது. (ஞாயிறானாலும் சரி விழாக்காலம் ஆனாலும் சரி) - சுழற்சி முறையில் வேலைக்கு வருவார்கள்.
  7. 365 நாட்களும் தொழிலாளர்கள் வருவதால், குப்பையை சாலையில் கொட்டுவதோ, சாக்கடையில் கொட்டுவதோ, குப்பைத் தொட்டியில் கொட்டுவதோ கூடாது என்று வலியுறுத்தினோம்.
  8. அனைத்து இல்லங்கள்/கடைகள்/உணவு விடுதிகள் எல்லாவற்றிலிருந்தும் குப்பைக் கூடைகள் மூலம் குப்பை/கழிவுகளைப் பெற்று அதை உடனே கீழே சிந்தாமல் சிதறாமல் வண்டிகளில் ஏற்றி விடுவார்கள் எங்கள் தொழிலாளர்கள்.
  9. இதனால் குப்பைத் தொட்டி தேவையில்லா நிலை ஏற்பட்டது.
  10. மொத்தம் 39 குப்பைத் தொட்டிகளைக் கடந்த 3 ஆண்டுகளில் காலி செய்து அந்த இடங்களைச் சுத்தமாக ஆக்கி இருக்கின்றோம்!
  11. சாக்கடைகளிலும் குப்பைகள் விழாததால் சாக்கடை அடைப்புகள் இல்லாமலும் தவிர்த்தோம்.
  12. சிவகாசி பேருந்து நிலையத்தை தமிழ்நாட்டிலேயே சுத்தமான பேருந்து நிலையம் என்று தினமலர் தன் முதல் பக்கத்தில் சொல்லுமளவுக்கு இன்னும் பராமரித்து வருகின்றோம். இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.
  13. சிவகாசி ரயில் நிலையத்தில் மரங்கள் நட்டு அதை வளரும் வரையில் பராமரித்து அதை ரயில் நிலையத்திடமே ஒப்படைத்தோம்.
  14. புதர் மண்டிக் கிடந்த ஓடைகளைச் சீரமைத்து, மரங்கள் நட்டு வேலி அமைத்து பராமரிக்க ஆரம்பித்தோம்.
  15. முதலில் நான்கு ரத வீதிகள், சில தெருக்கள், பேருந்து நிலையம் என்று ஆரம்பித்த எங்கள் ஒப்பந்தம் இப்போது 13 (கிட்டத்தட்ட 1/3) வார்டுகளில் இயங்கி வருகின்றது.
  16. எங்களிடம் இருக்கும் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை : 45 மீதியிருக்கும் வார்டுகளில் (19) இயங்கும் நகராட்சி தொழிலாளர்களின் எண்ணிக்கை : 147 (தொடர்வேன்)

இப்போது சில "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"களைப் பார்த்து விட்டு கட்டுரையைத் தொடர்வோம்! இது நாங்கள் முதன் முதலில் காலி செய்த குப்பைத் தொட்டி! நாங்கள் காலி செய்வதற்கு முன்:

படம் கிடைக்கவில்லை

நாங்கள் காலி செய்த பின்!

படம் கிடைக்கவில்லை

இது இன்னொரு குப்பைத் தொட்டி காலி செய்வதற்கு முன்:

படம் கிடைக்கவில்லை

பின்:

படம் கிடைக்கவில்லை

இவ்வாறே ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகக் காலி செய்தோம்!

புதரை வெட்டி அப்புறப்படுத்தும் எங்கள் தொழிலாளர்கள்.

படம் கிடைக்கவில்லை

புதரைச் சுத்தம் செய்யும் நவீன இயந்திரங்கள்

படம் கிடைக்கவில்லை

சுத்தம் செய்து வேலி அமைத்த பின், அதே புதர்களும் ஓடையும்!

படம் கிடைக்கவில்லை

சிவகாசி ரயில் நிலையத்தில் மரம் நட்டுப் பராமரிக்கும் எங்கள் தொழிலாளர்கள்.

படம் கிடைக்கவில்லை

இதுவும் ஒரு குப்பைத் தொட்டி தான்!

படம் கிடைக்கவில்லை

அதை அறிவியல் பூர்வமான இலவச சிறுநீர்க் கழிப்பறையாக மாற்றிய பின்!

2 படங்கள் கிடைக்கவில்லை

கட்டிய நாளிலிருந்து என்றுமே தூர் வாராத சாக்கடையிலிருந்து தூர் வாரும் பணியில் எங்கள் தொழிலாளர்கள்.

படம் கிடைக்கவில்லை

சிவகாசி பேருந்து நிலையத்தில் சுத்தப்படுத்தும் இயந்திரம்!

படம் கிடைக்கவில்லை

இந்த வார்டுகளுக்கென முன்பிருந்த ஆண்டுகளில் நகராட்சி செலவழித்த தொகை 3,75,000/- ரூபாயாகும். நாங்கள் எடுத்த ஒப்பந்தத் தொகை ரூ. 1,75,000/- ஆகும். நாங்கள் ஆட்களைக் குறைக்கவில்லை. தேவையான ஆட்கள் அவ்வளவு தான். அவர்களைச் சரியாக வேலை வாங்கினால் போதும். இத்தனைக்கும் நகராட்சி ஆட்களை விட எங்கள் ஆட்கள் குறைந்த நேரமே வேலை செய்வார்கள். ஆனால் திறமையாக வேலை செய்வார்கள். நாங்கள் அவர்களைத் தொழிலாளிகள் என்பதை விட மனிதர்கள் என்று பார்த்தோம்.

  1. அவர்களது கந்து வட்டிக் கடன்களை ஒழித்தோம்.
  2. அவர்களது போதை பழக்கங்களை முடிந்த வரை கண்டித்தோம்.
  3. சாக்கடையில் ரப்பர் பூட்ஸ் இல்லாமல் இறங்கக் கூடாது என்று விதிமுறை வைத்தோம்.
  4. குப்பையைக் கையால் தொடக் கூடத் தேவையில்லை. கூடையில் கொடுப்பதை வாங்கி வண்டியில் கொட்டினால் போதும்.
  5. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் போதே தரம் பிரித்து அதை தினமும் கடைசியில் மறுசுழற்சிக்கு விற்று அந்தப் பணத்தை அவர்களே எடுத்துக் கொள்ளலாம்! இதனால் சுற்றுப் புறக் கேடும் குறையும் அல்லவா?
  6. கடைகளில் கையேந்தி லஞ்சம் வாங்கும் முறையை ஒழித்தோம். இதனால் அவர்களுக்கு வேலையில் நிம்மதியும், ஒரு பெருமிதமும் இருப்பதை உணர்ந்தோம்.
  7. இவ்வளவையும் ஏதோ ஒரு விளம்பரத்திற்காக உங்களிடம் சொல்ல வில்லை. இதற்கும் திருச்சிக்கும் சம்பந்தம் உண்டு. எக்ஸ்னோரா நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் தலைவர் M.b. நிர்மல் பற்றியும் அறிந்திருப்பீர்கள். ஒரு வங்கி அதிகாரியாக இருந்து பின்னர் சமூகத்திற்காக தன் வேலையை உதறி, 65 வயதாகும் அந்த இளைஞர் இன்னும் அயராது பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றார். அவரது வழிகாட்டுதலின் காரணத்தாலேயே எங்களால் இவ்வளவும் சாதிக்க முடிந்ததென்றால் அது மிகையில்லை. தொடர்வேன் ...

அத்தகைய எக்ஸ்னோரா நிறுவனர் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் எக்ஸ்னோரா தலைவர்களையும் அழைத்திருந்தார். திரு. அபிரூபன் தான் விருதுநகர் மாவட்டத்தின் எக்ஸ்னோரா தலைவர். ஆனால் அன்று அவர் ஊரில் இல்லாததால், நான் திருச்சி செல்ல நேர்ந்தது. பல புதிய அனுபவங்கள் கிட்டின (ஏ.ஆர்.ஆர். விருந்து உட்பட!). ஒரு சிறு பள்ளியின் வகுப்பறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மொத்தத்தில் 30 பேர் இருந்திருப்பார்கள். ஆனால், ஒவ்வொருவரும் திரு. நிர்மல் அவர்களின் வார்த்தையில் சொல்லப் போனால் ஒரு பொறிகள். தங்களால் முடிந்த வரை சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் அனைவரும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு துறையை எடுத்துக் கொண்டு சிறந்து விளங்கினர். உதாரணத்துக்கு சில பணிகளைச் சொல்கின்றேன்:

  1. ஒருவர் கிராமப் புறங்களில் அறிவியல் பூர்வமாக கழிப்பிட வசதிகள் கட்டித் தருவதே தன் பணியாய்க் கொண்டிருக்கின்றார். இவரது கழிப்பிட வரைபடத்திற்காக ஜனாதிபதி விருது வாங்கியிருக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மனிதக் கழிவை எரிவாயுவிலிருந்து, உரமாகி மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராவது வரை அனைத்தும் இயற்கையில் நடைபெறும் வண்ணம் வடிவமைக்கின்றார் இவர். முசிறியில் அன்று தான் இப்படி ஒரு சுத்திகரிப்பு அமைப்பையும் 40 கழிப்பறைகளையும் திறந்து வைத்தனர்! செய்திக்கு http://www.hindu.com/2006/12/31/stories/2006123120050300.htm

படம் கிடைக்கவில்லை

  1. ஒருவர் அனாதைப் பிணங்களைச் சடங்குகளுடன் அடக்கம் செய்வதே தன் பணி என்கின்றார்.
  2. ஒருவர் மண்புழு வளர்ப்பே என் முக்கிய திட்டம் என்கின்றார்.
  3. ஒருவர் பனை மரத்தின் விதையை மட்டும் வாங்கி 3 அடி ஆழத்தில் பதித்தால் போதும். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டியதில்லை. எந்த பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. அதை என் கடமையாகச் செய்கின்றேன் என்கின்றார்.
  4. ஒருவர் 3000 மாணவர்களைப் பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து திரட்டி பூஜ்ஜியக் கழிவு முறை மற்றும் திடக் கழிவு மேலாண்மை (Zero Garbage System and Solid Waste Management) பற்றியும் மரங்களின் சிறப்பு பற்றியும் விளக்குவதும், கூட்ட முடிவில் சிறப்பு விருந்தினருக்கு மரக்கன்று கொடுப்பதுவுமே எங்கள் கடமை என்கிறார்.
  5. ஒரு 74 வயது முதியவரும் வந்திருந்தார். மண்ணின் மகத்துவம் அறியா மூடர்கள் ஆகி விட்டோம் என்றும் அதற்கான விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதே வாழ்நாள் முழுதும் தன் கடமையாகச் செய்வதாகச் சொன்னார்.
  6. மது குடித்தலின் சமுதாய, சுகாதார, பொருளாதாரச் சீரழிவை மக்களிடம் பரப்புவதே ஒருவர் வேலையாகக் கொண்டிருக்கின்றார்.
  7. சிவகங்கையிலிருந்து ஒரு பெரியவர் வந்திருந்தார். அவர் சொன்னது மிகவும் மனதை உருக்கியது. அனாதைக் குழந்தைகளை விடுதியில் வளர்த்து, படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, கலியாணம் செய்து வைப்பதே 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்வதாகவும், அப்படி அவருக்கு இப்போது பல மகன்களும், மகள்களும், பேரக்குழந்தைகளும் கூட இருப்பதாகச் சொன்னார்.
  8. அதோடு இன்னொன்றும் சொன்னார். வியப்பாக இருந்தது. அந்தப் பகுதியில் கிராமப் புறப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து மாணவர் பாராளுமன்றம் என்ற ஒன்றை நடத்துகின்றார்களாம். இந்திய பாராளுமன்றம் போலவே இதற்கும் பிரதமர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் தேர்ந்தெடுப்பார்களாம். பாராளுமன்ற நடைமுறைகளை அனுபவபூர்வமாகக் கற்றுத் தருகின்றார்களாம். இவர்கள் வெளிநடப்பு செய்வதில்லை. அந்தக் கிராமத்துப் பிரச்னைகளை மாணவர் பாராளுமன்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை கொண்டு சென்று தீர்த்து வைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

  9. ஒருவர் ஏரிகளையும், குளங்களையும், கோவில் திருக்குளங்களையும் செப்பனிட்டு, பராமரித்து, நீர் வரத்தை மேம்படுத்தி நீராதாரத்தை நிலை நிறுத்துவதே தன் பணியாய் செய்து வருகின்றார்.
  10. தொடர்வேன்...

5 ஜனவரி 2007

இப்படி ஒவ்வொருவரும் தான் செய்யும் சேவைகளைப் பட்டியலிட, மிகவும் பெருமிதமாய் இருந்தது. நிறுவனர், திரு. நிர்மல் தனது உரையில், இங்கிருப்பவர் மட்டும் சேவை செய்து ஒரு பிரயோசனமும் இல்லை. இது கடலில் கரைத்த பெருங்காயம் என்றார். Think Globally, Act Locally என்று ஒரு சொற்றொடர் இப்போது வணிகத்தில் பிரபலமாய் இருக்கின்றது. அதோடு அவர் இரு வார்த்தைகளை இணைத்து நம் முன்னே இருக்கும் அச்சுறுத்துதலுக்கு வழி காணச் செய்தார். Think Globally, Act Locally but start Domestically. அதாவது எந்த ஒரு சமுதாய மாற்றமும் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அது. அதற்கு எளிய வழி நாம் முன் மாதிரியாய் இருப்பது தான். நம்மைப் பார்த்து சுற்றி பத்து வீடுகள் திருந்தினால், அதுவே நமக்குக் கிடைத்த வெற்றி. ஏமாற்றங்களையும், ஏளனப் பார்வைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சமுதாயக் குப்பைகளை அகற்றும் துடைப்பத்தைக் கையில் ஏந்துங்கள். இது தான் இறைவனுக்கும் விருப்பம். சேவையே இறைவன். பேரன்பு இருந்தாலன்றி சேவை செய்ய இயலாது என்று சொல்லிக் கொண்டே சென்றார். அப்போது தான் இந்த ஐந்தாவது தூண் பற்றிய பேச்சு வந்தது. ஒரு கட்டிடத்தின் நான்கு தூண்களும் ஆட்டம் காண ஆரம்பித்தால் அக்கட்டிடத்தைத் தூக்கி நிறுத்த இன்னொரு தூணை முட்டுக் கொடுப்போம் அல்லவா? அது போல் நாட்டில் ஊழல் புரையோடிப் போயிருக்கும் நான்கு தூண்களையும் தாண்டி கட்டிடத்தைத் தூக்கி நிறுத்த வைக்கும் ஐந்தாவது தூணாக இருக்க வேண்டும் என்றார். யாரந்த ஐந்தாவது தூண்? தன்னலமற்ற சேவை மனப்பான்மை உள்ள தரமான குடிமக்கள் தான் அந்த ஐந்தாவது தூண். நீங்கள் நம்பினால் நம்புங்கள். நாங்கள் நான்கு ஆண்டுகளாக நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணி செய்து வருகின்றோம். மாதத்திற்கு ரூ.1,75,000/- எங்களிடம் புழங்குகின்றது. ஆனால் மார் தட்டிச் சொல்கின்றேன். இது வரை நயா பைசா கூட அந்தப் பணத்தை வாங்க நாங்கள் லஞ்சம் கொடுத்ததில்லை! இதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தன. சென்னையிலிருந்து உயரதிகாரிகள் கூட, அட! கொஞ்சம் அனுசரித்துத் தான் போங்களேன் என்றார்கள். ஆனால் நாங்கள் விடவில்லை. நினைத்தால் எதுவும் முடியும்! (தொடர்வேன்)

6 ஜனவரி 2007

லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகவே இந்த ஐந்தாவது தூண் என்னும் அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. நம் நாட்டில் இருக்கும் லஞ்சத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்து "லஞ்சம் வாங்குங்கள் ... வாங்குங்கள்... வாங்கிக் கொண்டே இருங்கள் " என்று ஒரு நூல் எழுதியிருக்கின்றார் நிர்மல். லஞ்சம் வாங்குபவர்களை எப்படியெல்லாம் வரிசைப் படுத்துகின்றார் பாருங்கள்!

  1. நல்லவர் (பணம் வாங்கிக் கொண்டு செய்பவர்) கெட்டவர் (செய்யாதவர்) பைத்தியக்காரர் (பணமே வாங்காதவர்)
  2. நேர்மையானவர் (செய்ய முடியாவிட்டால் பணம் திரும்பக் கிடைக்கும்), நேர்மையற்றவர் (கிடைக்காது)
  3. கீழிருந்து மேல் (பியூன் வாங்குவார், அதிகாரிக்கும் பங்கு போகும்), மேலிருந்து கீழ் (அதிகாரி வாங்குவார், பியூனுக்கும் பங்கு போகும்)
  4. மனித நேயமுள்ள (நன்மைக்காகச் செய்வது), மனித நேயமற்ற (இன்னொருவனுக்குத் தீமை செய்வதற்காக வாங்குவது.
  5. பாதிப்பை உண்டாக்கும், பாதிப்பை உண்டாக்காதது.
  6. நேரான, மறைமுகமான (அவர் வாங்க மாட்டாரு. யார் மூலமாவது...)
  7. அயல்நாட்டு ரகம் (செய்ய முடியாததையும், கூடாததையும் செய்வதற்கு வாங்குவது), நம்நாட்டு ரகம். (சம்பளம்னு இருந்தா கிம்பளம்னும் உண்டு!)
  8. அநாகரிகமான, நாகரிகமான (கன்சல்டன்சி என்ற பெயரில்!).
  9. சம்பிரதாய, மிரட்டும் (கொடுக்காவிட்டால் அவ்ளோ தான்!)
  10. நடைமுறை, ஏல (யார் அதிகமா தர்றாங்களோ அவங்களுக்கு!)
  11. நியாயமான, நியாயமற்ற (பலன் கிடைக்காவிட்டாலும் கொடுக்கனும்)
  12. ஒருவருக்காக அனைவர், அனைவருக்காக ஒருவர் (வாங்குவார்)
  13. உடனடி, தவணை
  14. ஒரே விலை, தள்ளுபடி
  15. நிகழ்காலத்திற்கு, எதிர்காலத்திற்கும் சேர்த்து
  16. அங்கீகரிக்கப்படாதது, அங்கீகரிக்கப்பட்டது (மந்திரி முன்னால் வாங்கிக் கொள்வது!)
  17. நம்பிக்கையான (வரி அதிகாரிகளே ரைடு நடத்தி விட்டு வாங்குவது), நம்பிக்கையற்ற (வரி அதிகாரிகள் தான், ரைடு நடத்தாமலே வாங்குவது), போலி (ஏமாற்று ஆட்கள் - பியூனே நான் தான் கமிசனர் என்று வாங்குவது!)
  18. ஆர்வ, பரிதாப (என் வீட்டில் கல்யாணம்)
  19. கை நீட்டி வாங்கும், கையால் கூட தொடாத
  20. வழக்கமான, இலவச (ரெகுலர் கஸ்டமருக்கு 3 தடவைக்கு 1 தடவை ப்ரீ)
  21. ஒரேயடியாக, படிப்படியாக (அப்ளிகேஷனுக்கு, சரிபார்க்க, அனுமதி வழங்க)
  22. ஒழுங்கான, ஒழுங்கற்ற (ஒரே விலை கிடையாது! ஆளைப் பார்த்து ரேட்)
  23. பணமாய், லாபமாய் (வரும் துட்டில் பங்கு!)
  24. செய்ய, செய்யாமல் இருக்க
  25. நீ மட்டும் தவறு செய்வது தவறு, நீ மட்டும் சரியாய் இருப்பது தவறு
  26. மாற்ற, மாற்றாமல் இருக்க (டிரான்ஸ்பர் தான்)
  27. பதவி உயர்வு தர, தராமல் இருக்க (இப்போ வருவது வராதே!)
  28. வருடம் முழுதும், பருவத்துக்குத் தக்க
  29. மனமுவந்து, வலுக்கட்டாயமான
  30. பாராட்டப் பட வேண்டியது (வரியைக் குறைக்க அமைச்சர் வாங்கும் லஞ்சம்), கண்டனத்துக்குரியது (சாதாரண பியூன் வாங்குவது!)
  31. தருபவர் ஆரம்பிப்பது, வாங்குபவர் ஆரம்பிப்பது
  32. ஒருமுறை மட்டும் வாங்குவது, ஒவ்வொரு முறையும் வாங்குவது
  33. (தொடரும்)

  1. ஆமை (கொடுத்தாலும் வேலை மெதுவாகவே நடக்கும்), முயல் (கொடுத்ததும் சும்மா வேலை ஜரூரா முடியும்)
  2. நீதியான, நீதியற்ற (ஒரே வேலைக்கே பல முறை வாங்குவது!)
  3. சட்டப்படி, சட்டத்தை மீறும்
  4. இரகசிய, வெளிப்படையான
  5. பழக்கமாய், பொழுதுபோக்காய்
  6. என்று பல முறைகளில், பல வகைகளில் இந்தியாவில் புற்று நோயாய் பரவிக் கொண்டிருக்கும் லஞ்சம் என்னும் அரக்கனை தலை முதல் பாதம் வரை அக்குவேறு ஆணி வேறாய்ப் பிரித்து மேய்ந்திருக்கின்றார். ஹும். வருத்தமாய்த் தான் இருக்கிறது. லஞ்சம் வாங்காதவர் இருக்கட்டும். லஞ்சம் கொடுக்காதவர் யாராவது இன்று இந்தியாவில் இருக்கின்றார்களா? என்பது தான் அவரது முதல் கேள்வி! (தொடர்வேன்)

மேலும் வாசிக்க

சிந்தனைகள்

சிந்தனைகள்

இன்றைய சிந்தனை - பாத்திரமா? நீரா?

அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல இறையாசியுடன் இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினந்தோறும் ஏதேனும் மனதில் தோன்றும் சிந்தனை விதைகளை விதைக்கலாம் என்றிருக்க…

சிந்தனைகள்

கரையைத் தொட்ட அலைகள்

அலை - 1 நேற்று வீட்டில் அப்போது தான் நுழைந்து கண்ணாடியைக் கழற்றி விட்டு வண்டிச் சாவியைச் சன்னலில் வைத்து விட்டு அமர்கின்றேன். தொலைக்காட்சியில் ஒரு பாட…

சிந்தனைகள்

என்னுடைய ஆசிரியர்கள்

இதோ பார்த்து விட்டேன். தொடங்குகின்றேன். நான் பிறந்தது 1974 ஆகஸ்டு. ஆனால் 1977 ஆரம்பத்திலேயே அதாவது 3 ஆண்டுகள் நிறைவிலேயே என்னைப் பள்ளியில் சேர்த்தார்க…