விண்கல வடிவமைப்புத் தளம்
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 14 ஜூன் 2007
விண்கல வடிவமைப்புத் தளம்: கட்டுரையாக்கம் - சுப. ரத்தினகிரி. (முத்தமிழ் மன்ற ஆண்டு மலருக்காக) உலகின் மிகப்பெரிய ஒரே தளம் கொண்ட கட்டிடம் நாசா விண்வெளி மையத்திற்குச் சொந்தமான விண்கல வடிவமைப்புத் தளம் (Vehicle Assembly Building) ஆகும். அப்பல்லோ, சாடர்ன் போன்ற விண்கலங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்ட இக்கட்டிடம், தற்போது விண்வெளியில் உருவாக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படும் விண்கல ஏற்றிகளுக்காக உபயோகிக்கப்படுகின்றது. 28.586° N(வடக்கு) 80.651° W(மேற்கு) நாசா கென்னடி விண்வெளி மையத்தில் ஜேக்சன்வில்லே (Jacksonville) க்கும் மியாமி (Miami) க்கும் நடுவில் மெர்ரிட் தீவின் (Merritt Island) கிழக்கு ஓர்லண்டோ என்னும் புளோரிடாவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது VAB என்று செல்லமாய் அழைக்கப்படும் இந்த ராட்சத கட்டிடம். இந்தக் கட்டிடம் பற்றிய சில விசேஷ தகவல்கள்: இந்த ஒரு கட்டிடம் மட்டுமே 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் (ஒரே தளம் தான். மாடியே கிடையாது!) உயரம் 525 அடியாகும்!
நீளம் 716 அடியாகும். அகலம் 518 அடியாகும்.
இதன் கன அளவு: 129428000 கன அடியாகும்.
இதைக் கட்ட உபயோகிக்கப்பட்ட இரும்பின் அளவு 98590 டன்னாகும்.
10000 டன் அளவுள்ள காற்றுக் கட்டுப்பாட்டு (a/c) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 71 கிரேன்களும், 250 டன் அளவைத் தூக்கக் கூடிய ராட்சத பால கிரேன்கள் இரண்டும் இருக்கின்றன. 1085000 சதுர அடி அளவிற்கு அலுமினியத்தால் கதிர்கள் பாதிக்காத வண்ணம் பூச்சு பூசப் பட்டுள்ளது. 4 பக்கமும் செங்குத்தாகத் திறக்கும் கதவமைப்புக் கொண்ட கட்டிடமாகும். ஒரு கதவின் உயரம் 456 அடி! எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல் 3.75 பங்கு கட்டிட விஸ்தீரணம் கொண்டது. சுதந்திர தேவி சிலையைப் போல் 1.72 பங்கு அதிக உயரம் கொண்டது. இதில் வரையப்பட்டிருக்கும் அமெரிக்கக் கொடியின் ஒரு நட்சத்திரத்தின் அளவு மட்டுமே 6 அடியாகும்! நட்சத்திரத்தின் பின்புறமுள்ள ஊதா நிறம் மட்டும் ஒரு கூடைப்பந்து மைதானத்தின் அளவாகும். இந்த உயரத்திற்கு அடிக்கடி மேகம் வந்து கட்டிடத்தை முட்டிச் செல்கின்றதாம். 2004 ல் ப்ளோரிடாவில் அடித்த சூறாவளியில் 700000 டாலர் மதிப்புள்ள அலுமினிய பேனல்கள் பிய்ந்து போய் விட்டது. இதோ கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது:
படம் கிடைக்கவில்லை
கட்டிடத்தின் முழு அளவுப் புகைப்படம். (1977ல்)
படம் கிடைக்கவில்லை
இதோ. டிஸ்கவரி ஓடம் வெளிக்கொணரப் படுகின்றது. கதவைத் திறந்து கொண்டு! 50% அளவுப் புகைப்படம்! நிற்கும் ஆட்களின் அளவைப் பாருங்க!
படம் கிடைக்கவில்லை
மொத்த அண்டமுமே அதியமாக இருக்கின்றதென்று வியக்கும் மனித குலம் அத்தகைய அண்டத்தை அளக்க உபயோகிக்கும் கொட்டாங்கச்சியும் அதிசயமாய் இருப்பதில் வியப்பில்லை தானே?