வன்தட்டின் எமன் - SSD
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 19 ஏப்ரல் 2010
கணினியை உபயோகிக்கும் நம்மெல்லோர்க்கும் வன் தட்டின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். இப்போது வன் தட்டைக் காணாமல் செய்வதற்கு ஒரு எமன் வந்திருக்கின்றான்(ர்). இவர் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர் தான். அலைபேசியிலிருந்து, இசைக்கருவிகள் வரை ஆக்கிரமித்திருக்கின்றார் தான். மலைகளை உடைக்க மலைகள் தேவையில்லை, உளிகளே போதும் என்பது கணினித் துறையில் தான் அதிக சாத்தியமாகியிருக்கின்றது. ஆம். உறுதிநிலை நினைவகங்கள் என்று பொருள்படும் SSD (Solid State Drives) தான் கணினி வன் தட்டின் எமனாக வந்திருக்கின்றது. தற்போது 2.5" அளவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நினைவகத்தின் தற்போதைய நினைவக அளவு 1 டிபி (http://www.marketwire.com/press-release/pureSilicon-Debuts-Worlds-First-1TB-25-Inch-SSD-Most-Compact-SSD-per-GB-936099.htm) ஆகும்! நன்றாகப் படியுங்கள்! வெறும் ஆள்காட்டி விரல் நீள அகலமே கொண்டிருக்கும் நினைவகத்தின் அளவு 1024 ஜிபி! நைட்ரோ என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நினைவகங்கள் வருங்கால கணினிகளை ஆக்கிரமிக்கும் என்று தைரியமாக நம்பலாம்.
இனி SSDயின் சா(பா)தகங்களைக் காணலாம்! சா:
- இந்நினைவகங்களில் அசையும் இயந்திரங்கள் ஏதுமில்லாததாலும் ஒரே நேரத்தில் பலபகுதியிலிருந்தும் படிக்க இயலுவதாலும் வன் தட்டுக்களைக் காட்டிலும் வேகம் மிக அதிகம்,
- சத்தமே துளியும் கிடையாது.
- மின்சாரத்தை மிகக் குறைவாகவே பயன்படுத்தும்.
- மிகக் குறைந்த நேரத்தில் கணினியைத் துவக்க இயலும். மூடவும் இயலும்.
- மிகக் குறைந்த வெப்பமடைவதால் குளிர்வூட்டிக்கும் அதிக மின்சாரம் செலவளிக்கத் தேவையில்லை.
- மிகக் குறைந்த இடத்தை அடைத்துக் கொள்வதால் கணினி இன்னும் சிறியதாகும். இதன் தரவு அடர்த்தி 2 மடங்குகளுக்கும் மேல்.
- அசையும் இயந்திரம் ஏதுமில்லாததால் இயந்திரக் கோளாறு வரவாய்ப்பே இல்லை.
- காந்தம் ஏதும் பயன்படுத்தாததால் அருகே காந்தம் கொண்டு சென்றாலும் பிரச்னை கிடையாது.
- கைக்கடக்கமாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும்.
- வன் தட்டுக்களைப் பராமரிக்க சிதறிய தகவல்களைச் சேர்க்கும் டிஃப்ராக்மென்ட் செய்வது போல் இந்நினைவகத்துக்கு ஏதும் செய்யத் தேவையில்லை.
- விலை தற்போதைக்கு 10 மடங்கு அதிகம். (சீக்கிரம் சீனாவில் செய்ய ஆரம்பிச்சா 10 ல் ஒரு பங்காய் ஆகிவிடும்!)
- 1 லட்சம் முதல் 2 லட்சம் (ஒரு செல்லில் 1000 முதல் 10000 முறைகள்) முறைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் எழுத இயலும். (இது போதாதா?!)
- செல்கள் மூலம் தரவு சேமிப்பு நடைபெறுவதால் காலம் செல்லச் செல்ல இறந்து போன செல்களில் தகவல்கள் சேமிக்க இயலாது. ஐந்தாண்டுகள் வரை பிரச்னை இருக்காது.
- இப்போதைக்கு எழுதும் வேகம் கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. (ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.)
பா:
நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமாம் விக்கிபீடியா (http://en.wikipedia.org/wiki/Solid-state_drive). பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழந்தமிழ்ச் சொற்றொடரை SSD நிரூபிக்கும் என்று நம்புவோம்.