புகைப்படக் கவிதை - 12

 

தாய்மை உணர்வுடன்
மெச்சும் கவனத்துடன்
பழகும் அனுபவத்துடன்
பொங்கும் முதிர்வுடன்
தலை கோத
நகம் பறிக்க
மடி சாய
உடல் பேண
மனம் வருட
எனக்கும் கிடைத்தால்
சொக்கிக் கிடப்பேன்
இது போலே!