புகைப்படக் கவிதை - 3

 

இறைவன் படைப்பிலே
இயல்பிலே கதவு வைத்த
ஒரே வீடு இந்த விழி!
திறக்கவும் மூடவும் வசதியாய் இமை!
பிறந்ததில் இருந்து இறக்கும் வரை
சிறப்பாக உலகைக் காட்டும் கருவி!
வாயால் சொல்ல முடியாததை
பார்வையால் சொல்லும் பாணி!
இதுவே இதன் பணி.
காதலின் முதல் படி.
மனிதன் இறந்த பின்னும்
இறக்காத சிறப்பு நீ!
ஆம்! விழி கொடுத்தால்
வழி கிடைக்கும் இருவர்க்கு!