புகைப்படக் கவிதை - 4

 

கை கொட்டிச் சிரிக்கிறேன்
கிறுக்கு மனிதா!

நீயா இறைவனைக் காண்பாய்?
நீயா உலகைக் காப்பாய்?

நீயா மனிதம் வளர்ப்பாய்?
நீயா உலகின் முதலாளி?

பரிணாமத்தின் எச்சமே
சுயநலத்தின் உச்சமே
சகஉயிருனக்கு துச்சமே

ஆயுதம் தொலை
அன்பை விதை
ஆசை சுருக்கு
பொறுமை பெருக்கு

கைகொட்டிச் சிரிக்காமல்
கைதட்டிச் சிரிக்கிறேன்.