புகைப்படக் கவிதை - 5

 

காலில் செருப்புமில்லை
வாழ்வில் வெளிச்சமில்லை
குடத்தில் நீருமில்லை
தூரம் அதிகமுண்டு
வாழ்வில் வெறுப்பில்லை
சோகம் சுமையுமில்லை
உழைப்பில் களைக்கவில்லை
தியாகத்தில் உயர்ந்து நிற்போம்
கர்மத்தில் திளைத்திருப்போம்.
மோட்சத்தை அடைந்திருப்போம்.