புகைப்படக் கவிதை - 8

 

அழகு மறையை
ஆழ்ந்த சிந்தனையில்
இல்லறம் செழிக்க
ஈதல் மலர
உலகம் முழுமைக்கும்
ஊக்கமாய் எழுதிய
எந்நாளும் சிறக்கும்
ஏற்றம் கொள்ளும்
ஐயன் வள்ளுவன்
ஒழுகும் சிலையை
ஓங்கு புகழ்வளர்
ஔவையும் வணங்குவாள்
அஃதே உண்மை.