புகைப்படக் கவிதை - 9

 

1+1 = 1 இது தான்
இவர்களின் கணக்கோ?
இருமனம் கூடி ஒருமுகம்
இது தான் இவர்கள் மொழியோ?
கனவு காணும் கண்கள்
நான்கில் காணும் காட்சி ஒன்றோ?
வாழ்வின் இறுதி வரை நீடிக்கும்
தொடர்பின் உறுதி இது தானோ?