புகைப்படக் கவிதை - 10

 

பணங்கொழித்து
குணமொழிந்து

அன்பிழந்து
தன்னலமாகி

அடுத்தவரைத்
தடுத்தவராகி

நயவஞ்சகமாய்
தயவெதுவுமின்றி

வெறிபெருக்கி
நெறிசுருக்கி

அற்பராய்
கற்பிழந்து

நானிலம்வாழ்
மானிடரே!

எங்கள் நிம்மதி
உங்களிடம் உண்டா?

எங்கள் சிரிப்பு
நீங்கள் சிரித்ததுண்டா?

கள்ளத்தனம் நெஞ்சிலில்லை
அள்ளும்சுமை மனத்திலில்லை

குழந்தைமனம் உயிர்
இழக்கும் வரை!

தழைக்கும் வாழ்வென்றும்
உழைக்கும் வரை.