கணினி~49 நிமிட வாசிப்பு20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

இந்த மென்பொருள் எனக்குப் பிடித்ததேன்?

முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 23 ஆகஸ்ட் 2006 – 23 டிசம்பர் 2010

நான் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருளில் ஒன்று FreeMind ஆகும். இது ஒரு மனதில் தோன்றும் எண்ணங்களை வகைப்படுத்திக் குறித்து வைக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும். இது ஒரு திறந்த மூல நிரலி என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் முக்கிய வசதி படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம், எது முக்கியம் என்று குறித்து வைத்துக் கொள்ளலாம். நான் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கு முன் இதை ஒரு முறை பார்த்துக் கொண்டால் போதும்! இதோ அதன் தொடுப்பும், படமும். http://freemind.sourceforge.net

படம் — வெளித் தளத்தில் ↗

27 ஆகஸ்ட் 2006

எனக்குப் பிடித்த இன்னொரு மென்பொருள் இர்பான்வியூ (IrfanView) என்றழைக்கப்படும் மென்பொருள். இதுவும் ஒரு இலவச மென்பொருளே. இதன் மூலம் படங்களைப் பார்க்கவும், வேறொரு வகைப் படமாக மாற்றவும், படத்தைச் சுருக்கவும், விரிக்கவும், மேலும் மிக எளிய வகையில் எந்த ஒரு படத்தையும் நமது தேவைக்குத் தக்கவாறு மாற்றியமைக்கவும் முடியும். http://www.irfanview.com/ இங்கிருந்து இதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நிறைய ப்ளக் இன்கள் இருக்கின்றன. அவையும் உங்களுக்கு உதவக்கூடும். இதோ அதன் படம் ஒன்று:

படம் — வெளித் தளத்தில் ↗

28 ஆகஸ்ட் 2006

அடுத்த மென்பொருள் எளிதாக மின்னஞ்சலை நிர்வாகம் செய்ய உதவும் ஒரு சிறு மென்பொருள். பெயர் Simple Check (http://www.simplecheck.net/) இந்த மென்பொருளின் மூலம்

  • எத்தனை மின்னஞ்சல் முகவரியிலிருந்தும் மின்னஞ்சலின் வருகையை அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக POP3.
  • அந்த மின்னஞ்சலை உங்கள் கணிணிக்கு தரவிறக்காமலேயே பிரிவியூ செய்து பார்க்க இயலும்.
  • எந்த மின்னஞ்சலை வேண்டுமானாலும் வழங்கியிலிருந்தே அழிக்க இயலும் .
  • இங்கிருந்தே சிறு பதிலும் இட முடியும்.
  • இதுவும் திறந்த மூல நிரலியே.
  • இதோ படம்!

படம் — வெளித் தளத்தில் ↗

நான் உபயோகிக்கும் மற்றொரு மென்பொருள் 7-ஜிப். இதன் மேலான வசதிகள்:

  • அழகு தமிழில் பழகும் மென்பொருள்
  • சுருக்கி வைத்த பல வித கோப்புக்களை (rar) உட்பட திறக்கும் வலிமை பெற்றது.
7z
ZIP
GZIP
TAR
BZIP2
RAR (only browsing and decompression)
CAB (only browsing and decompression)
ARJ (only browsing and decompression)
Z (only browsing and decompression)
CPIO (only browsing and decompression)
RPM (only browsing and decompression)
DEB (only browsing and decompression)
LZH (only browsing and decompression)
SPLIT (only browsing and decompression)
CHM (only browsing and decompression)
  • இதுவும் ஒரு திறந்த மூல நிரலி தான்.
  • இதன் முகவரி (http://www.7-zip.org/)
  • இது மென்பொருளின் படம்.

படம் — வெளித் தளத்தில் ↗

19 செப்டம்பர் 2006

எனக்குப் பிடித்த இன்னொரு மென்பொருள் Audacity எனப்படும் ஒலி மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் மூலம், ஒலியை ரெக்கார்டு செய்ய, எந்த ஒரு ஒலிக் கோப்பையும் திறக்க, அதைத் திருத்த, கோர்க்க, சிறப்பு விளைவுகள் ஏற்படுத்த மேலும் MP3 வடிவில் சேமிக்க இயலும். திறந்த மூல நிரலியான இம்மென்பொருள் அனைவருக்கும் ஏற்றது. உபயோகமானது. இதை இங்கிருந்து (http://audacity.sourceforge.net/) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்போது இந்த மென்பொருளின் படங்களைக் காணுங்கள்.

2 படங்கள் கிடைக்கவில்லை

22 செப்டம்பர் 2006

ஆனால் நான் உபயோகிப்பது Notepad++ என்னும் அரிய மென்பொருள். இது திறந்த மூல நிரலியும் கூட.

Syntax Highlighting and Syntax Folding
WYSIWYG
User Defined Syntax Highlighting
Auto-completion
Multi-Document
Multi-View
Regular Expression Search/Replace supported
Full Drag ‘N' Drop supported
Dynamic position of Views
File Status Auto-detection
Zoom in and zoom out
Multi-Language environment supported
Bookmark
Brace and Indent guideline Highlighting
Macro recording and playback
இது போன்ற பல வசதிகள் கொண்டது Notepad++

படம் கிடைக்கவில்லை

இதை இங்கிருந்து (http://notepad-plus.sourceforge.net/) தரவிறக்கலாம்.

3 அக்டோபர் 2006

எனக்குப் பிடித்த மற்றொரு மென்பொருள் குழந்தைகளுக்கான TuxPaint ஆகும். அழகு தமிழில் இருக்கும் மென்பொருள் குழந்தைகளுக்கான படம் வரையும் மென்பொருள். இதில் சாதாரணமாக விண்டோஸுடன் வரும் பெயிண்ட் மென்பொருளைக் காட்டிலும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த மென்பொருள் அனைவர் கணினியிலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

படம் — வெளித் தளத்தில் ↗

இதை இங்கிருந்து (http://tuxpaint.org/) தரவிறக்கிக் கொள்ளலாம்.

5 அக்டோபர் 2006

அடுத்து எனக்குப் பிடித்த மென்பொருள் செலெஸ்டியா ஆகும். அண்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளத் துடிப்பவர்களுக்கு மிகவும் உதவும் மென்பொருள். இதுவும் திறந்த மூல நிரலி தான். இது ஒரு நிகழ்வூக்கி மென்பொருளாகும் (Simulation) இதை இங்கிருந்து (http://www.shatters.net/celestia/download.html) தரவிறக்கிக் கொள்ளலாம். இனி சில படங்கள்:

2 படங்கள் கிடைக்கவில்லை

28 அக்டோபர் 2006

எனக்குப் பிடித்த நான் அதிகம் உபயோகிக்கும் மற்றொரு மென்பொருள் PDF Creator ஆகும். இதுவும் இலவச, திறந்த மூல நிரலியாகும். இதன் உதவியுடன் நீங்கள் எதையெல்லாம் அச்சிட முடியுமோ அதையெல்லாம் உங்களால் PDF கோப்பாக மாற்ற இயலும். இதை நிறுவியவுடன், PDF Creator என்ற பெயரில் ஒரு பிரிண்டர் உங்கள் கணிணியில் நிறுவப்பட்டு விடும். அதற்குப் பின் எந்த மென்பொருளிலிருந்தும் நீங்கள் பிரிண்ட் செய்யும் போது இந்த பிரிண்டரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதுமானதாகும்! உங்கள் கோப்பு PDFல் தயார்!

படம் கிடைக்கவில்லை

இதை இங்கிருந்து (http://prdownloads.sourceforge.net/pdfcreator/PDFCreator-0_9_3_GPLGhostscript.exe?download) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தக் கொள்ளளவு 13.2 MB ஆகும்.

11 நவம்பர் 2006

அடுத்ததாக எனக்குப் பிடித்த மற்றொரு மென்பொருள் Dr.DivX 2.0 OSS ஆகும். எந்த ஒரு நகர்படத்தையும் DivX AVI ஆக மாற்றும் தன்மை படைத்த இந்த மென்பொருளும் ஒரு திறந்த மூல நிரலி தான். இங்கிருந்து (http://prdownloads.sourceforge.net/drdivx/DrDivX_2_0_0_OSS.exe?download) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படம் கிடைக்கவில்லை

24 டிசம்பர் 2006

அடுத்ததாக நான் அதிகம் உபயோகிக்கும் மென்பொருள் என்ன நடக்கிறது? ஆகும். அதாவது What's Running?. சாதாரணமாக டாஸ்க் மேனேஜர் காட்டாத பல விஷயங்களை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் வைரஸ் மென்பொருள் பின்னணியில் இயங்குகின்றதா? ரிஜிஸ்ட்ரி மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? ஐ.பி. தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல சிஸ்டம் தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும். இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் ஆகும். இங்கே (http://www.whatsrunning.net/whatsrunning/main.aspx) சென்று தரவிறக்கலாம்.

3 படங்கள் கிடைக்கவில்லை

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

3 மார்ச் 2007

அடுத்து என் மகளுக்குப் பிடித்த ஒரு மென்பொருள். இது ஒரு படிப்பு மற்றும் விளையாட்டு மென்பொருளாகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இலவசமும் கூட. இதோ படம் பாருங்க!

படம் கிடைக்கவில்லை

இங்கிருந்து (http://gcompris.net/-Download-) தரவிறக்கிக் கொள்ளலாம்.

30 டிசம்பர் 2007

அடுத்து எனக்கு மிகவும் பிடித்த மென்பொருள்... இல்லை, மென்பொருள் என்பதை விட, மென்பொருட்களின் தொகுப்பு எனலாம். கையோடு எடுத்துச் செல்லும் மென்பொருள் என்னும் பொருள்படும் Portable Applications Suite ஆகும். அதென்ன கையோடு எடுத்துச் செல்வது? உதாரணமாக நீங்கள் ஒரு மின்விரிதாள் உங்களின் USB நினைவட்டையில் கொண்டு செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சென்று உபயோகிக்கும் கணினியில் எக்செல் இல்லை என்றால் என்ன செய்வது? எப்படித் திறப்பது? ஆபீஸ் தொகுப்பை உங்களால் அங்கே உடனடியாய் நிறுவ இயலாது. சரி. இன்னொரு காட்சி! நீங்கள் உங்களுக்குப் பிடித்த தளங்களையெல்லாம் (நம் மன்றம் முதலிடத்தில் இருக்குமே?!) புக்மார்க் எனப்படும் குறிப்பேட்டில் வைத்திருக்கின்றீர்கள். வெளியூர் செல்கின்றீர்கள். அங்கு வேறொரு கணினியில் அமர்ந்தவுடன் உங்களுக்குப் பிடித்த தளத்திற்குச் செல்ல நினைக்கின்றீர்கள். தளத்தின் பெயர் ஞாபகம் வராமல் மறந்து போகின்றது. எப்படிச் செல்வது? உங்கள் யாஹூ/ஜிடாக்/எம்.எஸ்.என்./மற்றும் பல தளங்களின்/துரிததூதரின் கடவுச்சொல் மற்றும் பயனர் பெயரை எப்படி ஞாபகம் வைத்துக் கொண்டே இருப்பது? இதற்கெல்லாம் தீர்வு தான் கைகொண்டு செல்லும் மென்பொருள் தொகுப்பாகும். இத்தொகுப்பு ஒரு 256 எம்.பி. நினைவட்டையில் அடங்கிவிடும். அதாவது நிறுவிய நிலையிலேயே! இதனால் உங்கள் அலுவலக கணினியில் அமர்ந்திருக்கும் உணர்வே உங்களுக்கு ஏற்படும்! புக்மார்க் முதல் கடவுச்சொல் வரை எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், நினைவட்டையைக் கழற்றி விட்டால் அந்தக் கணினியில் எதுவும் சேமிக்கவும் பட்டிருக்காது! எப்படி? மிகவும் உபயோகமான மென்பொருள் தொகுப்பு தானே? இத்தொகுப்பு முற்றிலும் திறப்புமூல நிரலிகளால் தொகுக்கப்பட்டுள்ளது! தரவிறக்கி பயன்பெறுங்கள்! கீழ்க்கண்ட முகவரியில்: http://portableapps.com/suite (89.5 MB)

ClamWin Portable (antivirus),
Mozilla Firefox - Portable Edition (web browser),
Gaim Portable (instant messaging),
OpenOffice.org Portable (office suite),
Sudoku Portable (puzzle game),

Mozilla Sunbird - Portable Edition (calendar/task manager) and

Mozilla Thunderbird - Portable Edition (email client)
மற்ற மென்பொருட்களின் பட்டியலும் இங்கே இருக்கின்றது.
http://portableapps.com/apps

படம் — வெளித் தளத்தில் ↗

7 ஜனவரி 2008

அடுத்ததாக எனக்குப் பிடித்த ஒரு மென்பொருள் Pivot Stick Animator எனப்படும் அசைபட உருவாக்கி ஆகும்! இதன் மூலம் நீங்கள் வித்தியாசமான, அழகான அசைபடங்களை உருவாக்க இயலும்.

படம் கிடைக்கவில்லை

இப்படித் தான் இயங்குகின்றது இந்த மென்பொருள். மிக எளிமையானது.

படம் கிடைக்கவில்லை

இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://atlas.walagata.com/w/peterbone/Pivot.zip (485 K)

11 ஜனவரி 2008

அடுத்ததாக எனக்குப் பிடித்த, நான் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருள் Explorer XP என்னும் மென்பொருளாகும். இதுவும் விண்டோஸ் மென்பொருளுடன் இணைந்து வந்திருக்கும் Explorer போன்றதே ஆயினும், இதற்கென்று சில விசேடங்கள் உண்டு. அவையாவன:

  1. மிகச் சிறிய மென்பொருள் (410 KB தான்).
  2. அனைத்து மறைந்த/சிஸ்டம் கோப்புக்களையும் காண முடியும். இதனால் Explorer ல் எந்த வைரஸ்/புழுவாவது ரிஜிஸ்டரி மூலம் மறைகோப்பையோ சிஸ்டம் கோப்பையோ பார்க்க முடியாது மறைத்து வைத்தாலும் நம்மால் அந்தக் கோப்புக்களைக் கண்டு உடனே அழிக்க முடியும்.
  3. நெருப்பு நரி போன்றே மேலே Tabbed Interface இருப்பதால் பல அடைவுகளை ஒரே நேரத்தில் இலகுவாகச் சுற்றி வர இயலும்.
  4. பல கோப்புக்களை ஒரே நேரத்தில் பெயர்மாற்றம் (Rename) செய்ய இயலும்.
  5. பல அடைவுகள்/கோப்புக்களை ஒரு குழுவாக ஆக்கிக் கொண்டு, அதைப் படியெடுக்கவோ நகர்த்தவோ முடியும்.
  6. இன்னும் பலப்பல வசதிகளுடன் இருக்கும் இந்த மென்பொருள் இலவசமாய் தரவிறக்கலாம். உபயோகித்துப் பாருங்கள். இங்கே (http://www.explorerxp.com/explorerxpsetup.exe) இருக்கின்றது.

2 படங்கள் கிடைக்கவில்லை

12 ஜனவரி 2008

கணினியில் நச்சு மென்பொருட்களும், வைரஸ்களும், புழுக்களும் (worms) கோலோச்சும் காலம் இது. நாம் எதுவும் செய்யாவிட்டால் கூட நம் கணினி இணையத்துடன் தொடர்பு கொண்டாலே தரவிறங்கிவிடும் அளவுக்கு மிக அதிகமான நச்சுநிரல்கள் உலாவுகின்றன. அவற்றைத் தடுப்பது என்பது சாதாராணமான விஷயம் அல்ல. முதலில் நமக்குத் தேவை விழிப்புணர்ச்சி. அப்புறம் தேவை, நமக்குத் தேவை எது தேவையில்லாதது எது என்று முடிவெடுத்தல். சரி இப்போது மென்பொருளுக்கு வருகின்றேன். சந்தையில் பல வைரஸ் நீக்கிகள் உலவுகின்றன. சில இலவசமாகவும் கிடைக்கின்றன. இவற்றில் எது சிறந்தது என்று தீர்மானிப்பது, வைரஸ்களுடன் போரிடுவதைக் காட்டிலும் பெரிய விஷயமாகி விட்டது! இந்த விஷயத்தில், வைரஸை நீக்காவிடினும், வைரஸ் எந்த இடத்தில் இருக்கின்றது என்று துல்லியமாகக் காட்டிக் கொடுக்கும் ஒரு மென்பொருள் தான் நாம் பார்க்க இருப்பது. இது திறந்த மூல நிரலியாகும். பின்னணியில் ClamAV என்னும் திறந்த மூல நிரலித் தரவுகளைக் கொண்டு இயங்கும் GUI ஆகும் இது. அனைவருக்கும் புரியும் படி மிக எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள Moon Secure Anti Virus (http://www.moonsecure.com/index.php) ஐக் கண்டு கொண்ட பிறகு நான் எல்லா நச்சுநிரல் நீக்கிகளையும் என் கணினியில் இருந்து நீக்கி விட்டேன். தினமும் உருவாக்கப்படும் வைரஸுகளின் தகவல்களை உடனுக்குடன் ClamAV தரவின் மூலம் சேர்த்துக் கொள்வதால் (Update) நவீன வைரஸ்கள்/புழுக்களைக் கூடக் கண்டு கொள்ள இயல்கின்றது. குறிப்பு: இந்த மென்பொருள் மூலம் வைரஸ் இந்தக் கோப்பில் இருக்கின்றது என்று அடையாளம் காட்ட இயலுமே தவிர நீக்க இயலாது. நாமே தனிப்பட்ட முறையில் நீக்க வேண்டும். வேண்டுமானால் வைரஸ் மேலும் இயங்காமல் செய்ய இயலும். இங்கிருந்து (http://downloads.sourceforge.net/moonav/MsavSetup.2.1.1.150.exe?use_mirror=surfnet) (13.30 MB) எளிதில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

2 படங்கள் கிடைக்கவில்லை

15 ஜனவரி 2008

நன்றி சுதாகர் அவர்களே. அடுத்து நாம் காணவிருப்பது MMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் Mobile Media Convertor ஆகும். இந்த மென்பொருளின் மூலம் செல்பேசியில் இருந்து கணினிக்கோ, கணினியில் இருந்து செல்பேசிக்கோ கோப்புக்களைப் பரிமாறிக் கொள்ள இயலும். அதாவது MP3 யிலிருந்து amr ஆகவோ, அல்லது mpg/wmv/avi யிலிருந்து 3gp ஆகவோ, அல்லது மாற்றியோ கோப்புவகைகளை மாற்றிக் கொள்ள இயலும். இதுவும் இலவச மென்பொருளே. இங்கிருந்து (http://www.miksoft.net/products/MMCsetup.exe) தரவிறக்கிக் கொள்ளலாம். (2.1 MB)

படம் கிடைக்கவில்லை

16 ஜனவரி 2008

மிக்க நன்றி. உங்களின் ஊக்கங்களே என் ஆக்கங்களின் வித்துக்கள். அடுத்ததாக நான் விரும்பும் மற்றொரு மென்பொருள் uTorrent என்னும் சமக் கணினித் தொடர்பு (Peer to peer) மென்பொருள் ஆகும். வெறும் 220 KB அளவே கொண்ட இந்த மென்பொருள், மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் அனைத்து வசதிகளையும் கொண்டு, உங்கள் கோப்பை எளிதில் வழங்கியே இன்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மேலும் மற்றவர்களிடம் இருந்து சிறு பொதிகளாய் பெரிய கோப்புக்களைத் தரவிறக்கிக் கொள்ளவும் பயன்படுகின்றது! இங்கிருந்து (http://www.utorrent.com/download.php) தரவிறக்கிக் கொள்ளலாம். சில திரைக் காட்சிகள்.

3 படங்கள் கிடைக்கவில்லை

20 ஜனவரி 2008

வைரஸுகள் வந்தவுடன் ஓடிப்பிடித்து உட்காரும் இடம் ஜன்னலுக்கு அருகில் தான்! அதாவது விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் என்று சொல்ல வந்தேன்! அந்தளவு மிக முக்கியமான ரிஜிஸ்ட்ரியில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் நமக்குத் தெரியப்படுத்தும் ஒரு அருமையான மென்பொருள் தான் அடுத்து பார்க்கவிருப்பது. சந்தையில் அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய மென்பொருட்கள் கிடைக்கின்றன. இந்த Regrunner மென்பொருளில் என்ன வித்தியாசம்? சாதாரணமாக வைரஸ்கள் நுழைந்ததும், இந்த ரிஜிஸ்ட்ரியைக் கண்காணிக்கும் மென்பொருட்களை நீக்கும். இந்த மென்பொருளை அவ்வாறு நீக்க இயலாது! காரணம் ஒவ்வொரு கணினியிலும் வெவ்வேறு வித்தியாசமான பெயர்களில் இந்த மென்பொருள் நிறுவப்படுகின்றது! எடுத்துக் கொள்ளும் நினைவகமும் மிகக் குறைவு. ரிஜிஸ்ட்ரியில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும்

  1. உடனே இந்த மென்பொருள் நமக்குக் காட்டிக் கொடுத்து விடும்!
  2. அந்த மாற்றத்தை நடைபெற விடாமல் அழிக்கவும் இயலும்.
  3. முன்பு நல்ல முறையில் இயங்கிய ரிஜிஸ்ட்ரி செட்டிங்கை அப்படியே திரும்ப மீட்கவும் (Restore) முடியும்.
  4. உபயோகித்துப் பாருங்களேன்!

படம் கிடைக்கவில்லை

இங்கிருந்து (http://downloads.sourceforge.net/regrunner/Regrunner_3.0.2008.1.zip?modtime=1197225531&big_mirror=0) தரவிறக்கிக் கொள்ளலாம். இதுவும் திறந்த மூல நிரலியே!

4 பிப்ரவரி 2008

LAN எனப்படும் பிணையம் வைத்து உபயோகிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த மென்பொருள். Look@Lan என்பது தான் இதன் பெயர். தற்சமயத்தில் LAN ல் இணைந்தவர்கள் யார் யார், அவர்களின் ஐபி முகவரி, அவர்களுடன் தேவைப்பட்டால் உடனடி செய்தி எப்படி பரிமாறிக் கொள்வது என்ற அனைத்துத் தேவைகளின் தீர்வே இந்த மென்பொருள். மிகவும் உபயோகரமான இலவச மென்பொருள். இங்கிருந்து (http://www.lookatlan.com/) தரவிறக்கிக் கொள்ளலாம். (2116 K)

படம் கிடைக்கவில்லை

6 பிப்ரவரி 2008

அடுத்து எனக்குப் பிடித்த மற்றொரு மென்பொருள் அகராதி ஆகும். StarDict (http://stardict.sourceforge.net/) என்னும் பெயருடைய இந்த திறப்பு மூல நிரலி உலகப்புகழ் வாய்ந்ததாகும். கிட்டத்தட்ட எந்த மொழியிலிருந்தும், எந்த மொழிக்கும் அகராதி இதன் மூலம் கணினியில் உருவாக்கிக் கொள்ளலாம் என்பதுடன், இதை உபயோகிக்கும் போது இணையம் தேவையில்லை என்பதும் ஒரு வசதி ஆகும். மேலும், எந்த மென்பொருளுக்குள்ளும் இருந்து இந்த அகராதியை உபயோகிக்கலாம். ஆங்கிலம் - தமிழ் அகராதி மிகச் சிறப்பாக இருக்கின்றது. மேலும் கட்டற்ற கலைக்களஞ்சியமாம் விக்கிபீடியாவில் தமிழில் உள்ள அனைத்துமே வெறும் 14 எம்பி யில் இந்த அகராதிக்குள் வந்து விடுகின்றது. எனவே விக்கிபீடியாவில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் (படங்கள் தவிர்த்து) உடனுக்குடன் இணைய வசதி இல்லாமலேயே கண்டறியும் வசதி இருப்பது ஆச்சரியமான விஷயமாகும். மேலே கண்ட முகவரியிலிருந்து மென்பொருள் மற்றும் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு வேண்டுமானாலும் அகராதியையும் தரவிறக்கிக் கொள்ளலாம். எத்தனை மொழி அகராதிகள் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். மிக மிக அருமையான, அவசியமான ஒரு மென்பொருள்! இதோ சில படங்கள்: முத்தமிழ் என்று தேடியவுடன், விக்கிபீடியாவிலிருக்கும் முத்தமிழ் பற்றிய அனைத்து விவரங்களும் நம் கணினியிலேயே வருவதைக் காணுங்கள்!

படம் கிடைக்கவில்லை

file என்னும் ஒரு ஆங்கிலச் சொல்லைத் தேடினால், அந்தச் சொல் எந்தெந்த வகையிலெல்லாம் உபயோகமாகின்றது என்று படம் போட்டே காட்டுகின்றார்கள். இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இவ்வாறு வேர்ச்சொல் காணும் வசதி இருக்கின்றது.

படம் கிடைக்கவில்லை

வேர்டுபேடில் king என்று தட்டச்சு செய்து, மவுசை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றால் (Scan என்னும் வசதி ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில்) king பற்றிய அனைத்து ஆங்கில விஷயங்களும் காணலாம்.

படம் கிடைக்கவில்லை

king பற்றிய தமிழ் அகராதியும் அதிலேயே காணலாம்!

படம் கிடைக்கவில்லை

எந்தெந்த அகராதி நமக்குத் தேவை, எந்த மொழியில் முதலில் சொல்ல வேண்டும் ஆகியனவற்றை நாமே முடிவு செய்து கொள்ளும் சாளரம் இது.

படம் கிடைக்கவில்லை

9 பிப்ரவரி 2008

http://www.stardict.org/wikipedia/ இந்தப் பக்கத்திலிருந்து எந்த மொழிக்கு வேண்டுமானாலும் விக்கி அகராதியைத் தரவிறக்கலாம். அல்லது கீழிருக்கும் தமிழ் கோப்புகளை மட்டும் தரவிறக்கலாம். தமிழ் விக்கிபீடியா - 13 எம்பி. (இது தான் முக்கியமானது) http://www.stardict.org/wikipedia/wiki/stardict-wikipedia-tawiki-2.4.2.tar.bz2 விக்கி புத்தகங்கள் - 868 கேபி http://www.stardict.org/wikipedia/wikibooks/stardict-wikipedia-tawikibooks-2.4.2.tar.bz2 விக்கி மேற்கோள்கள் - 14 கேபி http://www.stardict.org/wikipedia/wikiquote/stardict-wikipedia-tawikiquote-2.4.2.tar.bz2 விக்கி மூலம் - 2.03 எம்பி http://www.stardict.org/wikipedia/wikisource/stardict-wikipedia-tawikisource-2.4.2.tar.bz2 விக்கி அகராதி - 1.38 எம்பி http://www.stardict.org/wikipedia/wiktionary/stardict-wikipedia-tawiktionary-2.4.2.tar.bz2 இந்தக் கோப்புகளைத் தரவிறக்கிய பின், இவையனைத்தும் bz2 என்னும் முறையில் இறுக்கப்பட்டுள்ளன. இவற்றை நான் ஏற்கனவே இங்கு வெளியிட்டுள்ள http://7-zip.org/ மூலம் திறக்கலாம். அவ்வாறு திறந்து விரிப்பதால் வரும் அடைவை (Folder) c:\program files\StarDict\dic என்னும் அடைவின் கீழ் பதிந்து விட்டு பின் Manage Dictionaries என்னும் வசதியில் பார்த்தால் தமிழ் அகராதியும் சேர்ந்து பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் எது மேலே எது கீழே என்று நாமாகவே நகர்த்திக் கொள்ளலாம். இன்னும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

26 மார்ச் 2008

நீங்கள் சென்னையில் இருக்கின்றீர்கள். உங்கள் தந்தை மதுரையில் இருக்கின்றார். மின்னஞ்சல் அனுப்ப முடியவில்லை என்கின்றார். நீங்களும் தொலைபேசியின் மூலமாக கணினியில் அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று முயற்சி செய்து பார்க்கின்றீர்கள். ஒன்றும் முடியவில்லை. இதற்காக நீங்கள் மதுரை வந்து தான் ஆக வேண்டுமா? இந்தக் கேள்விக்கு விடை தான் கீழே! எனக்குப் பிடித்த இந்த மென்பொருள் tightvnc (http://www.tightvnc.com/) எனப்படும் மாயப் பிணையக் கணினி (Virtual Network Computing) முறை ஆகும். இதன் மூலம் வெகு தொலைவில் இருக்கும் இன்னொரு கணினியின் திரையை நாம் இங்கிருந்தே காண்பதுடன், இங்கிருந்தே அதைக் கட்டுப்படுத்த முடியும். அந்தக் கணினியின் திரை அப்படியே நம்முடைய திரையில் வந்து விடும். நாம் இங்கிருந்து தட்டச்சுவது, அந்தக் கணினியில் தெரியும்!

படம் கிடைக்கவில்லை

இந்த மென்பொருளின் மொத்த அளவே 1.5 மெகா பைட் தான் என்பது தான் இதன் தனித்தன்மை. இருந்த போதிலும் மிகச் சிறப்பான முறையில் தொலைதூரக் கணினிக் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகின்றது. மிக உபயோகமான ஒரு மென்பொருளாகும்! திறப்பு மூல நிரலியான இதை இங்கிருந்து (http://www.tightvnc.com/download.html) தரவிறக்கிக் கொள்ளலாம்!

1 ஏப்ரல் 2008

அடுத்து நாம் பார்க்கவிருக்கும் மென்பொருள் கணினியின் திரையை அப்படியே படம் பிடித்து அதை அசைபடமாக மாற்றும் ஒரு மென்பொருளாகும். இது ஒரு திறப்பு மூல நிரலி. தவிர, இதன் மூலம் avi ஆக திரையின் அசைவுகள் அனைத்தையும் படம் பிடிக்கலாம். avi ஐ swf ஆக மாற்றி பிளாஷ் தொழில்நுட்பத்திலும் கொண்டு வர இயலும். மென்பொருள் வல்லுநர்களுக்கும், விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் மிகவும் தேவைப்படும் இந்த மென்பொருள் இதோ இங்கே (http://camstudio.org/) கிடைக்கின்றது!

படம் — வெளித் தளத்தில் ↗

இங்கிருந்தோ (http://sourceforge.net/projects/camstudio/) அல்லது இங்கிருந்தோ (http://www.camstudio.org/CamStudio20.exe) தரவிறக்கலாம்!

15 ஏப்ரல் 2008

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் மென்பொருள் MP3 பாடல்களை எளிய முறையில் கேட்க உதவும் மென்பொருள் ஆகும். என்னிடம் ஏற்கனவே வின் ஆம்ப் (WinAMP) இருக்கின்றது அல்லது விண்டோஸ் மீடியா ப்ளேயர் இருக்கின்றது என்பவர்களுக்காக, வின் ஆம்ப் அடிக்கடி அப்டேட் செய்யவா, ரிஜிஸ்டர் செய்யவா என்று கேட்பதையும், விண்டோஸ் மீடியா ப்ளேயர் அதிக நினைவகத்தை அடைத்துக் கொள்வதையும் உணர்ந்திருப்பீர்கள். XMPlay என்னும் இந்த மென்பொருள் வெறும் 307 KB யில் இந்த மென்பொருட்கள் கொண்டிருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றது!

படம் கிடைக்கவில்லை

இங்கிருந்து (http://support.xmplay.com/) தரவிறக்கிக் கொள்ளுங்கள்!

30 ஏப்ரல் 2008

அடுத்து எனக்குப் பிடித்த ஒரு மென்பொருள் தாஸ் யூனிட் கன்வெர்ட்டர் எனப்படும் ஒரு அளவையிலிருந்து மற்றொரு அளவைக்கு மாற்றும் மென்பொருள். ஏக்கரிலிருந்து சதுர மீட்டர், பாரன்ஹீட்டிலிருந்து செல்சியஸ் போன்று 80 பிரிவுகளில் 2000க்கும் அதிகமான அளவைகளை மாற்றிக் கணக்கிட உதவி செய்யும் இந்த மென்பொருளை உருவாக்கியவர் ஒரு இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்!

படம் கிடைக்கவில்லை

மென்பொருளின் தளமான இங்கிருந்து (http://www.das-uc.110mb.com/index.html) இலவசமாகத் தரவிறக்கிப் பயன்பெறுங்கள். கீழ்க்கண்ட வசதிகள் அனைத்தும் உள்ளது!

  • 2002 units (More available via updater!).
  • 82 categories.
  • 1395 symbols/abbreviations (More available via updater!).
  • World currency converter (35 currencies!).
  • Online updater (adds/revises units, updates currency rates & checks for new version!).
  • Ability to add custom units/categories.
  • Shows symbol/abbreviation if available (ex. m/s, ft^3, etc.).
  • Supports mathematical operations (addition, division, modulo, etc.) and functions (sqrt, log, sin, etc.).
  • Auto, Decimal, Fractional and Scientific outputs with customizable significant figures.
  • Unit searcher and program statistics features.
  • Conversion history and quick notes features.
  • Quick calculator access and other accessibility features.
  • Transferable settings and customizations (to friends, family, and co-workers).
  • Complete help file included.
  • Uninstaller included.
  • 100% freeware and 100% malware free.

7 மே 2008

அடுத்ததாக நாம் காணவிருக்கும் மென்பொருள் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானது. Qedoc Quiz Player என்னும் பெயர் கொண்ட இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது. ஒரு பாடத்திலிருந்து வித்தியாசமான முறையில் (கோடிட்ட இடம் நிரப்புதல், சிறந்த பதிலைத் தேர்ந்தெடுத்தல், படம் பார்த்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுதல் மற்றும் பல) கணினி மூலம் பல கேள்விகளைக் கேட்டு அந்தப் பாடம் குறித்த நமது அறிவைக் கூர்மையாக்க உதவுகின்றது. கணினியை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தமக்கென கணக்கைத் துவங்கி தமது மதிப்பெண்கள் குறித்த தகவல்களைப் அறிக்கைகளாகப் பெற முடியும். இதன் மூலம் அடுத்த முறை பங்கேற்கும் போது நம்முடைய மதிப்பெண்கள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றது என்று காண இயலும். ஐந்நூறுக்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களிலிருந்து கேள்விகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு விருப்பமான பாடத்திட்டத்தைத் தரவிறக்கி (மிகச் சிறிய கோப்புகளாக) அவற்றை இந்த மென்பொருள் மூலம் திறந்தால் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பிக்கின்றது. உதாரணமாக ஆங்கிலம் குறித்த பாடத் திட்டம் ஒன்று. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணிதம், பொது அறிவு, மொழியியல், அறிவியல், கணக்கியல், கணினியியல் என்று அத்தனை பாடங்களிலிருந்தும் கேள்விகள் அருமையாகத் தொகுத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி இங்கிருந்து Quiz Maker தரவிறக்கி நாமும் கேள்விகளை உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கும் வசதியும் இருக்கின்றது. அருமையான இந்த மென்பொருள் எனக்குப் பிடித்தது போன்றே உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இங்கிருந்து (http://www.qedoc.org/en/index.php?title=Main_Page) கேள்வியாளரையும் (Quiz Player) கேள்விகளையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்!

படம் கிடைக்கவில்லை

2 ஜூன் 2008

நான் உபயோகிக்கும் இன்னொரு உபயோகமான மென்பொருள் ரெயின்லெண்டர் நாள்காட்டி ஆகும். நமது கணினி மேசையில் எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளும் அழகான இந்த நாள்காட்டியில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய கூட்டங்கள், பிறந்த நாட்கள் என அனைத்தையும் குறித்துக் கொள்ளலாம்! காலந்தவறாமல் நமக்கு நினைவூட்டும்! பல அழகான வடிவங்கள் (Skins) கொண்டு விளங்கும் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம். இதோ என் கணினி மேசையில்! மேலும் பல வசதிகள் உண்டு.

2 படங்கள் கிடைக்கவில்லை

இங்கிருந்து (http://www.rainlendar.net/cms/index.php) தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

24 ஆகஸ்ட் 2008

அடுத்ததாக எனக்குப் பிடித்த மென்பொருள் hugin (http://hugin.sourceforge.net/) என்றழைக்கப்படும் நீள் பட ஒட்டி மென்பொருளாகும்.

படம் கிடைக்கவில்லை

இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புடைய படங்களை ஒட்டி மிகப் பெரிய படமாக மாற்ற இயலும். இத்தகைய படங்களை பனோரமா படங்கள் என்றழைப்பார்கள். ஆர்வமுடையவர்கள் இதைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். அடுத்து இதைப் பயன்படுத்துவது பற்றி விரைவில் திரி ஒன்று துவங்கப் போகின்றேன். :) இங்கிருந்து (http://www.photopla.net/hugin/hugin_svn3082_20080524_setup.exe) தரவிறக்கலாம். நீங்களும் இது போன்ற படம் தயாரிக்கலாம்.

படம் — வெளித் தளத்தில் ↗

11 செப்டம்பர் 2008

KDE என்பது K Desktop Environment எனப்படும் வணிக ரீதியான விண்டோஸ் விஸ்டாவுக்கு ஈடு கொடுக்கும் லினக்ஸின் ஒரு புகழ் வாய்ந்த மேசை மென்பொருள் ஆகும். அதன் சில படங்களைக் காணுங்கள்.

8 படங்கள் கிடைக்கவில்லை

இதையெல்லாம் காணும் போது நம்மிடம் லினக்ஸ் இல்லையே என்று ஏக்கமளிக்கும். இப்போது KDE விண்டோஸ் இயங்குதளத்திலும் நிறுவும் வண்ணம் வெளிவருகின்றது. அதுவும் லினக்ஸ் KDE போன்றே முற்றிலும் திறப்பு மூல நிரலியாக இலவசமாக என்னும் போது புருவத்தை உயர்த்த வைக்கின்றது. குழந்தைகளுக்கு விளையாட்டாகட்டும், அறிவியல் மென்பொருட்களாகட்டும், பயனுள்ள அலுவலக மென்பொருட்களாகட்டும், படிப்பினையூட்டும் கல்வி மென்பொருட்களாகட்டும் KDE க்கு நிகர் KDE மட்டுமே! இப்போதைக்கு மொத்தம் 93 மென்பொருட்களைக் கொண்டு வெளி வந்திருக்கும் ஆல்பா பதிப்பு கூடிய விரைவில் நிலைபதிப்பாக வெளிவர இருக்கின்றது. என்னிடம் அகலப்பாட்டை இணைய இணைப்பு இருக்கின்றது, நானும் KDE உபயோகம் செய்ய ஆசைப்படுகின்றேன் என்று நினைப்பவர்கள் (கிட்டத்தட்ட 300 எம்.பி. தரவிறக்க வேண்டும்) இங்கே (http://windows.kde.org/) சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

13 அக்டோபர் 2008

மின்பொறியியல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருளை அடுத்துக் காண இருக்கின்றோம். வன்பொருள் வடிவமைப்பிலும், அதைப் புரிந்து கொள்வதிலும் பெரும் பங்கு வகிப்பவை சிமுலேட்டர்கள் எனப்படும் ஊக்கிகள் ஆகும். இத்தகைய சிமுலேட்டர்களின் விலை மிகவும் அதிகமாகும். தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்க இயலாத நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மட்டுமே இவை இருக்கும். இப்போது மென்பொருளில் அத்தகைய ஊக்கிகள் கிடைப்பது மாணவ சமுதாயத்துக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இந்த ஊக்கி மென்பொருள் இயங்க ஜாவா இயங்குநேரத் தளம் (java runtime environment) தேவை.

படம் கிடைக்கவில்லை

இதோ ஊக்கி எவ்வாறு செயல்படுகின்றது என்று காட்டும் படம் ஒன்று.

படம் கிடைக்கவில்லை

மென்பொருளின் இணையத் தளம் இதோ இங்கே (http://www.draw2d.org/digitalsimulator/) இருக்கின்றது. இங்கிருந்து (http://downloads.sourceforge.net/digisimulator/DigitalSimulatorV5.57.exe) இந்த திறப்பு மூல நிரலியின் சமீபத்திய பதிப்பைத் (5.57) தரவிறக்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (28 MB)

ஒரு மிகப்பெரிய திட்டம் ஒன்றைச் செயலாக்கம் செய்ய வேண்டியிருக்கின்றது. உதாரணமாக ஒரு 100 மாடிக் கட்டிடம் என்று வைத்துக் கொள்வோம். அதற்குத் தேவையான ஆட்கள் எத்தனை பேர்? எத்தனை நாட்கள் ஆகும்? என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவ்வேலைகளைச் செய்வது யார்? எந்த வேலைக்கு அடுத்ததாக எந்த வேலையைச் செய்ய வேண்டும்? எந்தெந்த வேலைகளை ஒரே நேரத்தில் செய்யலாம்? இன்னும் என்னென்ன பணிகள் பாக்கி இருக்கின்றன? யார் அதற்கு பொறுப்பு? யாரால் எந்த வேலை நிற்கின்றது? போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கும்! இவற்றிற்குப் பதில் தரும் மென்பொருள் தான் திட்ட மென்பொருள் (Project Software) ஆகும். Gantt Chart என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். PERT, CPM (Critical Path Method) போன்ற திட்டக் கருவிகளை உபயோகித்து மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைப் பெறலாம். அத்தகைய மென்பொருள் தான் நாம் இன்று காணவிருக்கும் OpenProject (http://www.openproj.org/openproj) மென்பொருள்.

படம் கிடைக்கவில்லை

இம்மென்பொருளில் நாம் நமது திட்டம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தகுந்த முறையில் உள்ளீடு செய்து விட்டால் போதுமானதாகும். அப்புறம் நமது திட்டம் சம்பந்தமான எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில்கள் எளிதில் கிடைக்க இந்த மென்பொருள் உதவுகின்றது. திறப்பு மூல நிரலியான இம்மென்பொருள் $1000க்கு விற்கப்படும் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் கோப்புக்களையும் திறந்து செயல்பட வல்லது ஆகும். :) இங்கிருந்து (http://downloads.sourceforge.net/openproj/openproj-1.3.1.msi) தரவிறக்கி உபயோகப்படுத்தலாம். தற்போதைய பதிப்பு 1.31 (6.82 MB)

நாம் அடிக்கடி பல உரைகளை நகலெடுக்கவும், ஒட்டவும், வெட்டவும் இன்னும் கோப்புகளைப் பிரதி எடுக்கவும் Clipboard எனப்படும் தற்காலிக நினைவு வசதியை உபயோகப்படுத்தி இருப்போம். இயங்குதளத்தில் இயல்பாக இருக்கும் இந்த வசதியில் கடைசியாக உபயோகித்த உரை/படம்/கோப்பு மட்டுமே நினைவகத்தில் இருக்கும். அடடா! இப்போது தான் காப்பி செய்தோம், அதற்குள் வேறொன்றைக் காப்பி செய்து விட்டோமா? என்று பல முறை நாமே நினைத்திருப்போம். இப்போது நாம் பார்க்கவிருக்கும் மென்பொருள், Ditto ஆகும். இதன் பணி, நாம் என்னவெல்லாம் க்ளிப் போர்டுக்குக் கொண்டு சென்றோமோ அது அனைத்தையும் சேமித்து வைப்பது தான். Control C, X அல்லது வலது சொடுக்கிட்டு Cut, Copy செய்யும் அனைத்தும் இதில் வரிசையாகத் தொகுக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நாம் நமக்குத் தேவையான உரையை/படத்தை/கோப்பை உபயோகித்துக் கொள்ளலாம். மேலும் இவற்றை குழுக்களாகப் பிரித்து சேமிக்கும் வசதியும் இருக்கின்றது. இம்மென்பொருளின் தமிழாக்கம் செய்யலாம் என்று எண்ணி இருக்கின்றேன். கூடிய விரைவில் தமிழிலும் Ditto வெளி வரும் என்று நம்புகின்றேன். திறப்பு மூல நிரலியான Ditto வை இங்கே (http://ditto-cp.sourceforge.net/) இருந்து தரவிறக்கி உபயோகிக்கலாம். (2.03 எம்.பி.) சமீபத்திய பதிப்பு 3.15.4 ஆகும்.

படம் கிடைக்கவில்லை

18 அக்டோபர் 2008

பல புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களைக் காண்பதில் நாம் அனைவருமே ஆர்வம் கொண்டிருப்போம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களும் சரி, வேகமாக ஆங்கிலம் பேசுவதைப் புரியாதவர்களும் சரி, புரியாமலேயே, கதையின் போக்கு இப்படித் தான் இருக்கும் என்று ஊகித்துக் கொண்டு திரைப்படங்களைப் பார்த்திருந்திருப்போம். வசனத்தில் ஊடிருக்கும் நகைச்சுவை, உணர்வுகள் ஆகியவை நமக்குத் தெரியவந்திருக்காது. அதே வசனத்தைக் கீழே எழுத்துக்களாய்க் காட்டி விட்டால் 75% க்கும் மேல் படங்களை ரசிக்க முடியும் அல்லவா? அதற்கான வசதி தான் சப்டைட்டில் எனப்படும் வசனம் காட்டும் முறை. சரி. டிவிடியில் அதற்கான வசதி இருப்பதால் எளிதாக நமக்குத் தேவையான மொழியில் உபவசனத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்வையிட முடியும். சில டிவிடிகளில் இயக்குநரின் குறிப்பும் கூட உபவசனமாகக் காட்டப்படுவதுண்டு. நம் வன்தட்டில் ஒரு ஆங்கிலப் படம் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அது avi அல்லது wmv போன்ற கோப்புமுறையில் இருக்கின்றது என்று கொள்வோம். அப்படத்தில் உபவசனம் இல்லாமல் இருக்கின்றதென்றால், எவ்வாறு உபவசனம் காண்பது? அல்லது ஒரு படத்துக்கான உபவசனம் எவ்வாறு உருவாக்குவது?! அதற்கான மென்பொருள் தான் Subtitle Edit எனப்படும் உபவசன திருத்தி (http://www.nikse.dk/se/) ஆகும். உபவசன கோப்புகள் srt என்னும் எக்ஸ்டென்சனுடன் இருக்கின்றன. இப்போது வெளி வந்த படங்களுக்குக் கூட உபவசனக் கோப்புக்கள் பல மொழிகளுக்கு இணையத்திலேயே கிடைக்கின்றன. அவற்றைத் தரவிரக்கி, படம் எந்தப் பெயரில் இருக்கின்றதோ அதே பெயருக்கு srt ஐயும் மாற்றி படத்தை VLC அல்லது மீடியா ப்ளேயரில் ஓட விட்டால் உபவசனம் தெரியும்! உதாரணமாக Journey to the center of the earth.avi என்றிருந்தால் Journey to the center of the earth.srt என்று அதே அடைவில் உபவசனக் கோப்பின் பெயரும் இருத்தல் வேண்டும். இந்த உபவசனக் கோப்பில் எத்தனையாவது காட்சி, எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை அவ்வசனத்தைக் காட்ட வேண்டும் என்ற தகவல் அடங்கியிருக்கும். (காண்க படம்)

படம் கிடைக்கவில்லை

இந்த மென்பொருளின் இன்னொரு முக்கியமான வசதி என்னவென்றால் காட்சி நெறிப்படுத்துதல் ஆகும். (Visual Sync) அதாவது நீங்கள் தரவிறக்கிய படமும், உபவசனக் கோப்பும் சரியாகப் பொருந்தவில்லை என்றால், வேறு காட்சிக்கு வேறு வசனம் வந்து நம்மைக் குழப்பி விடும். அவ்வாறு இருக்கும் தவறை நீக்கும் வகையில் நீங்களே படத்தின் ஆரம்பக் காட்சி இது, முடிவுக் காட்சி இது என்று மென்பொருளுக்குச் சொல்லி விட்டால், அதற்குத் தகுந்தாற் போல் srt கோப்பு திருத்தப்பட்டு விடும்.

படம் கிடைக்கவில்லை

இலவசமான இம்மென்பொருளை இங்கிருந்து (http://www.nikse.dk/se/SE18.rar) தரவிறக்கிப் பயன்பெறுங்கள்! (664 KB)

10 டிசம்பர் 2008

அடுத்ததாக எனக்குப் பிடித்த மென்பொருள், நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகையிலும் இருக்கும் சத்துக்கள், அதில் அடங்கியுள்ள வேதிப் பொருட்கள், அவைகளை நாம் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தரும் ஒரு மென்பொருள் ஆகும். அமெரிக்க விவசாயத் துறை இலவசமாக வழங்கும் இம்மென்பொருளில் 7000க்கும் அதிகமான உணவு வகைகளின் தரவு ஏற்றப்பட்டு அருமையாகப் பராமரிக்கப் பட்டுள்ளது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உபயோகிக்கவல்ல மென்பொருளான Nutrient DataBase மென்பொருளை (18 MB) இங்கிருந்து (http://www.ars.usda.gov/main/site_main.htm?modecode=12354500) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2 படங்கள் கிடைக்கவில்லை

16 டிசம்பர் 2008

சகலகலா வல்லவன் என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படியான ஒரு மென்பொருள் தான் இப்போது நாம் பார்க்க இருப்பது. இதில் இல்லாத விஷயம் என்ன உண்டு என்று யோசிக்க வைக்கும் படி அத்தனை வசதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் Total Text Container என்னும் இம்மென்பொருள் பல ஆச்சரியங்களையும் வைத்திருக்கின்றது.

  • தனிப்பட்ட நாள்காட்டி (Calendar)
  • நிகழ்வுகள் (Events) நிர்வாகம்
  • செயல்பாடுகள் (Tasks) நிர்வாகம்
  • முகவரிக் கோர்வை (Address Book)
  • குறிப்பான் (Bookmark) நிர்வாகம்
  • மின்னஞ்சல் (Email) நிர்வாகம்
  • நிர்வாக, கணினி பிணைய (Organisational chart, Computer Network Diagram) படங்கள் வரைய
  • மின்விரிதாள் (Spreadsheet)
  • நம் கணினியில் இருக்கும் விருப்பமான கோப்புகள் (Favourite files)
  • விருப்பமான அடைவுகள் (Favourite folders)
  • விருப்பமான இசை, திரைப்படங்கள் (Catalogs)
  • இன்னும் பலப்பல. இத்தனையும் 3.2 MB அளவுக்குள் இருப்பது தான் அடுத்த அதிசயம். :) திறப்பு மூல நிரலியான இதை இங்கிருந்து (http://downloads.sourceforge.net/totaltext/totaltextv0.a070.zip?modtime=1229171743&big_mirror=0) தரவிறக்கலாம். (தற்போதைய பதிப்பு) இணைய தளம் இங்கிருக்கின்றது (http://mtirnanic.googlepages.com/). மிகவும் உபயோகமான மென்பொருள். உபயோகித்துச் சொல்லுங்கள்.

2 படங்கள் கிடைக்கவில்லை

20 டிசம்பர் 2008

PDF என்றதும் நாம் உடனே தேடுவது Adobe PDF மென்பொருள் தான். அடோப் மென்பொருளில் இருக்கும் வசதிகள் போலவே வசதிகள் கொண்டதும், அதே சமயம் மிகக் குறைந்த நினைவகத்தைப் பெற்றிருப்பதுமான ஒரு மென்பொருள் சுமத்ரா PDF மென்பொருள் ஆகும். திறப்பு மூல நிரலியான இம்மென்பொருள் வெறும் 1.19 MB அளவே உடையதாகும். மேலும் நினைவக அட்டையில் கொண்டு செல்லுமாறு Portable ஆகவும் கிடைக்கின்றது. இதனால் வேகமாகவும், எளிய முறையிலும் இயங்க வல்லது. இங்கிருந்து (http://kjkpub.s3.amazonaws.com/sumatrapdf/rel/SumatraPDF-0.9.3-install.exe) தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள். இணைய தளம் இங்கிருக்கின்றது (http://blog.kowalczyk.info/software/sumatrapdf/index.html).

2 படங்கள் கிடைக்கவில்லை

24 பிப்ரவரி 2009

நம்மிடம் இரண்டு pdf கோப்புகள் இருப்பதாகக் கொள்வோம். அவ்விரண்டையும் இணைத்து ஒரே pdf கோப்பாக மாற்ற என்ன செய்யலாம்? நம்மிடம் இருக்கும் pdf கோப்பின் அனைத்துப் பக்கங்களையும் பிரித்து இரண்டு pdf கோப்புக்களாக மாற்ற என்ன செய்யலாம்? கடவுச்சொல் கொடுத்து பூட்டப்பட்டிருக்கும் pdf ன் கடவுச்சொல்லை எப்படி நீக்குவது? (கடவுச்சொல் தெரிந்திருத்தல் அவசியம்) புதிதாகக் கடவுச்சொல் கொடுத்து pdf கோப்புக்களை எவ்வாறு பூட்டுவது? PDF கோப்புக்களில் இருக்கும் படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது? (Forms) பின்புலப் படங்களை PDF கோப்புகளில் எவ்வாறு சேர்ப்பது? முன்புலப் படங்களை ஏற்றுவதும் எவ்வாறு? ஒரு PDF கோப்பினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்வது எவ்வாறு? அத்தகவல்களை மாற்றியமைப்பது எவ்வாறு? PDF கோப்புகளுடன் நமது வேறு கோப்புகளை எவ்வாறு இணைப்பது? PDF கோப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்புக் கோப்புகளை எவ்வாறு பிரிப்பது? சிதைந்து போன PDF கோப்புகளை முடிந்த வரை எவ்வாறு சீரமைப்பது? இத்தனை கேள்விகளுக்கும் பதிலாய் ஒரு மென்பொருள் இருக்கின்றது. அதன் பெயர் PDFTK (http://www.pdfhacks.com/pdftk/). இந்த மென்பொருளின் வரைபட பயனர் இடைநிலை மென்பொருள் (GUI) PDFTK Builder (http://www.angusj.com/pdftkb/) ஆகும்.

படம் — வெளித் தளத்தில் ↗

இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை இங்கிருந்து (http://www.angusj.com/pdftkb/pdftkb_setup.exe) தரவிறக்கிப் பயன்பெறலாம்! (2 MB)

பாதுகாப்புக் கருதி நாம் கணினியில் அழிக்கும் கோப்புக்கள் உண்மையிலேயே அழிக்கப்படுவதில்லை. அதன் முதல் எழுத்து மட்டுமே அழிக்கப்படுகின்றது. ஒரு சில நாட்களில் மீண்டும் நம்மால் அல்லது பிறரால் அக்கோப்புக்களை மீட்கும் சாத்தியக் கூறு இருக்கின்றது. ஆனால், சில கோப்புக்களை நிச்சயமாக நாம் மீட்கவே கூடாது என்று நாம் நினைத்தால் அதற்கென்று இருக்கும் ஒரு மென்பொருள் தான் Eraser. இந்த மென்பொருள் கோப்புக்களைச் சுத்தமாக அடித்துத் துவைத்து விரட்டி விடுகின்றது. :) இதனால் அதனை அடுத்த நொடியே கூட எப்பாடு பட்டாலும் மீட்கவே இயலாது! இணைய குக்கிகளையும் இதே போன்று அழிக்கும் வசதியும் இம்மென்பொருளில் இருக்கின்றது.

படம் கிடைக்கவில்லை

8.9 MB நினைவக அளவினைப் பிடிக்கும் இம்மென்பொருளை இங்கிருந்து (http://jaist.dl.sourceforge.net/sourceforge/eraser/EraserSetup32.exe) தரவிறக்கிக் கொள்ளலாம்.

நமது கணினியின் இயங்குதளத்துடன் வரும் கால்குலேட்டர் மென்பொருளில் இல்லாத பல விஷயங்களையும் வசதிகளையும் கொண்டு ஒரு மென்பொருள் இருக்கின்றது. அதன் பெயர் Speed Crunch (http://www.speedcrunch.org/en_US/index.html) என்பதாகும். அம்மென்பொருள் கிட்டத்தட்ட ஒரு மின்விரிதாள் மென்பொருள் (Spreadsheet) போன்றதென்றாலும், ஒரு கால்குலேட்டரிலேயே மின்விரிதாளை அடக்கிய மென்பொருள் என்று சொல்வதே சரியாகும். ஒரே வரியில் நாம் கணக்கிடும் சமன்பாட்டை இட இட, உடனே அதன் விடை தெரிவது இதன் சிறப்பம்சமாகும்!

படம் கிடைக்கவில்லை

நமக்குப் பிடித்த மாறிகளின் (Variables) பெயரை எத்தனை வேண்டுமானாலும் உபயோகப்படுத்த இயலும். மேலும் வாசிக்கத் தகுந்த படி சமன்பாட்டின் பல பகுதிகளும் குறிப்பிட்ட நிறங்களில் மாற்றிக் காட்டப்படும். (syntax highlighting)

படம் கிடைக்கவில்லை

பல சமன்பாடுகளும், சார்புக் கணக்குகளும் (Functions) ஏற்கனவே இதில் உள்ளமையப் பெற்றிருக்கின்றது.

படம் கிடைக்கவில்லை

50 தசமத் தானங்கள் வரை மிகத் துல்லியமாகக் கணக்குகள் போட்டுப் பார்க்க இயலும்!

படம் கிடைக்கவில்லை

அருமையான இந்த இலவச மென்பொருளை இங்கிருந்து (http://speedcrunch.googlecode.com/files/SpeedCrunch-0.10.1.exe) தரவிறக்கிக் கொண்டு உபயோகித்துப் பயனடையுங்கள்!

படம் கிடைக்கவில்லை

11 ஏப்ரல் 2009

அலுவலகக் கணினியில் வேலை பார்த்துக் கொண்டே இணைய வலம் வருபவரா நீங்கள்? நிறைய சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டு திக்குத் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? லினக்ஸில் நான்கு மற்றும் அதற்கு மேலும் கணினி முகப்பில் வேலை பார்த்தவரா நீங்கள்? உங்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது இந்த மென்பொருள். இதன் பெயர் WindowsPager என்பதாகும். அதாவது ஒரே கணினி முகப்பில் நான்கு பக்கங்கள் வைத்துக் கொள்ள இயலும். ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட்ட மென்பொருட்களைத் திறந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, முதல் பக்கத்தில் அலுவலக மென்பொருட்கள் அத்தனையும் திறந்து வேலை செய்யலாம். அடுத்த பக்கத்தில், நீங்கள் உலா வரும் இணைய/துரித தூதுவர் மென்பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் விளையாட்டுக்களை வைத்துக் கொள்ளலாம். உண்மையில் எல்லா சாளரங்களும் திறந்திருந்தாலும், எந்தப் பக்கத்தில் இருக்கின்றீர்களோ, அது மட்டுமே காணக் கிடைக்கும்! எனவே முதலாளி வந்து விட்டால், உடனே முதல் பக்கத்திற்குத் திரும்பி விடலாம். :) இந்தத் (http://windowspager.sourceforge.net/) தளத்திலிருந்து இந்த இலவச, திறப்பு மூல மென்பொருளைத் தரவிறக்கி உபயோகப்படுத்தலாம். மொத்தமே 600 KB தான். இதை நிறுவவும் அவசியம் இல்லை. Start up அடைவில் இதன் குறுக்கு வழியை (shortcut) சேமித்து வைத்து விட்டால், ஒவ்வொரு முறை கணினி துவங்கும் போதும் செயல்பட ஆரம்பிக்கும்.

படம் கிடைக்கவில்லை

13 ஏப்ரல் 2009

அலுவலகத்தில் யாருக்கும் தெரியக் கூடாத ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அப்போது பார்த்து வேறு ஒருவர் வருகின்றார் அவருக்கு நாம் என்ன மென்பொருள் உபயோகிக்கின்றோம் என்று கூடத் தெரியக் கூடாது என்றால், ஒரே ஒரு கீயை அழுத்தி நாம் மறைக்க நினைக்கும் மென்பொருளை மறைத்து விட ஒரு மென்பொருள் இருக்கின்றது. அதன் மூலம் அந்த மென்பொருளைக் கணினி திரையில் எங்கேயும் தெரியாத வண்ணம் செய்து விட முடியும். டாஸ்க் பார்/ ட்ரே என்று எங்கேயும் காணக் கிடைக்காது. மீண்டும் இன்னொரு கீ அழுத்தினால் மீண்டும் வரச் செய்து விடலாம். எந்தெந்த மென்பொருளுக்கு எந்தெந்த கீ என்றும் முன்கூட்டியே பதிந்து வைத்துக் கொள்ள இயலும். இந்த மென்பொருளின் பெயர் ClickyGone. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இங்கிருந்து (http://downloads.sourceforge.net/clickygone/ClickyGonePortable.zip) தரவிறக்கிக் கொள்ளலாம்! (706 KB)

படம் கிடைக்கவில்லை

15 ஏப்ரல் 2009

இயங்குதளத்துடன் வந்த கடிகாரத்தைப் பார்த்துப் பார்த்துப் போரடித்து விட்டவர்களுக்காக மட்டுமின்றி, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் நாம் இன்று காணப் போகும் இந்தக் கடிகார மென்பொருள் மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. இதன் பெயர் EarthClock என்பதாகும். இந்த மென்பொருளை நிறுவிக் கொண்டால், நம் கணினி முகப்பில் பூமி வடிவிலேயே கடிகாரம் தெரிய ஆரம்பிக்கும். மேலும், நாம் இருக்கும் நகரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால், அந்த நகரம் இப்போது எப்படி இருக்கின்றது என்பது முதற்கொண்டு படமாக மாறும். மாலையானால் இருட்டுவதும் நம் கணினியிலேயே நடக்கும். :)

4 படங்கள் கிடைக்கவில்லை

இப்படி முள்ளே இல்லாத கடிகாரத்தையும் வைத்துக் கொள்ளலாம். :)

படம் கிடைக்கவில்லை

இலவசமான இந்த மென்பொருளை இங்கிருந்து (http://earthclock.xentax.com/download.php) தரவிறக்கிக் கொள்ளலாம்.

9 ஜூன் 2009

நம்மிடம் இரண்டு கோப்புகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அவை இரண்டும் ஒரே தகவல்களைக் கொண்டிருக்கலாம். அல்லது நாம் ஒருவரிடம் ஒரு கோப்பைத் திருத்தித் தாருங்கள் என்று கொடுத்து, அவர் சிலவற்றைத் திருத்திக் கொடுத்திருக்கலாம். இவ்விரண்டு கோப்புக்களிலும் உள்ள வித்தியாசங்கள் எவை என்று கண்டறிவது மிகக் கடினமான காரியமாகும். முக்கியமாக மென்பொருள் எழுதும் வல்லுநர்களுக்கு இந்த version வித்தியாசத்தின் அருமை நன்கு புரியும். மேலும், கோப்புக்கள் மட்டுமின்றி இரு அடைவுகளிலுள்ள கோப்புக்களைச் சரி பார்க்க வேண்டியது இருந்தால் அவ்வளவு தான். இன்னும் கடினமான ஒன்றாகும். பேக்கப் எடுக்கும் போது இது மிகவும் தேவையான ஒன்றாகின்றது. எந்தக் கோப்புக்கள் எல்லாம் மாறுபட்டிருக்கின்றன என்றறிவது தேவையான ஒன்றாகும். இதற்கென்று மென்பொருட்கள் இருக்கின்றன. இவைகளில் சிறந்த ஒன்றாகவும், திறப்பு மூல நிரலியாகவும் இலவசமாகக் கிடைக்கும் Winmerge (http://winmerge.org/) என்ற மென்பொருள் மிகவும் உதவிகரமானதாகும். இரண்டு கோப்புக்கள்/ அடைவுகளிடையே இருக்கும் எழுத்து (Text) அல்லது கோப்புக்களில் இருக்கும் மாறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டுவதுடன், அவற்றைச் சீரமைக்கவும் உதவுகின்றது. அதாவது பழைய கோப்புக்களில் புதிய மாற்றத்தைச் சேமிக்க முடியும், அல்லது புதிய கோப்புக்களில் மாற்றத்தை நீக்கவும் முடியும். இந்த மென்பொருளை இங்கிருந்து (http://downloads.sourceforge.net/winmerge/WinMerge-2.12.2-Setup.exe) தரவிறக்கிப் பயன்பெறுங்கள். தமிழ் ஒருங்குறியையும் ஒப்பிட்டு வித்தியாசத்தைக் காட்டும் என்பது இதன் சிறப்பாகும்!

3 படங்கள் கிடைக்கவில்லை

4 ஜூலை 2009

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். என்னும் குறள் நாம் அனைவரும் அறிந்திருப்போம். தவறுகளை இடித்துரைக்க அருகில் யாரும் இல்லாத மன்னன், கெடுப்பாரே இல்லாவிட்டாலும் கெடுவான் என்பது இதன் பொருள். உண்மை தான். நமக்கும் ஒருவர் இடித்துரைத்துக் கொண்டிருந்தால் தான் நாமும் கெடாதிருப்போம்! அதற்கான மென்பொருள் தான் இப்போது நாம் காணவிருப்பது. கணினித் திரையையே எப்போதும் வெறித்துக் கொண்டிருப்பவர்கள் 20 நிமிடங்களுக்கொருமுறை 20 விநாடிகளாவது வேறு எதையாவது சுற்றிலும் பார்த்து கண்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இல்லையெனில் கண்களில் நீர் சுரப்பது பாதிக்கப்பட்டு கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கணினி உபயோகிப்பவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள் தான். ஆனால், எத்தனை பேர் அதை நடைமுறைப்படுத்துகின்றோம்? கண்களை விற்றுச் சித்திரம் வாங்கலாமா? இதை யார் இடித்துரைப்பது? இந்த மென்பொருள் அந்தப்பணியைச் செய்கின்றது. இந்த மென்பொருளை ஓட விட்டால், சரியாக 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 விநாடிகள் உங்கள் கணினியின் திரை கருப்பாக மாறிவிடும். நீங்கள் உங்கள் கண்களுக்குப் பயிற்சி அளித்து விட்டு மீண்டும் வரலாம். :) இந்த நேரத்தை மாற்ற முடியாது. ஏற்கனவே மென்பொருளில் பதியப்பட்டுள்ளது. ஆனால், மிக முக்கியமான பணியில் இருந்தால் மட்டும் Esc பொத்தானை அழுத்திப் பணியைத் தொடரலாம். (ஆஹா! இது போதுமே! என்கின்றீர்களா?!) உபயோகமான மென்பொருள் தானே? அருண்குமார் என்பவர் உருவாக்கியிருக்கும் இலவசமான இந்த மென்பொருளை இங்கிருந்து (https://sourceforge.net/projects/eyecare/files/eyecare/eyecare_0.3.exe) தரவிறக்கிப் பயன்படுத்தலாம். (6 MB)

26 செப்டம்பர் 2009

நாம் ஒவ்வொரு முறை வெளியூர் செல்லும் போதோ அல்லது இல்லத்தில் நிகழும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போதோ பல புகைப்படங்களை எடுத்துத் தள்ளுவோம். அதுவும் இப்போது டிஜிட்டல் புகைப்படக் கருவியில் எடுக்கும் படங்களின் எண்ணிக்கைக்குக் கணக்கில்லாத நிலையில் நிறைய படங்கள் எடுக்கின்றோம். அவற்றைத் தகுந்த முறையில் சேமிப்பது ஒருபுறமிருக்க, யாரேனும் அந்தப் படங்களைக் கேட்டால் ஏதோ ஒரு குறுந்தகட்டில் பதிந்து தருகின்றோம். என்ன தான் அந்தக் குறுந்தகட்டை நமது தொலைக்காட்சியில் போட்டுப் பார்க்கலாம் என்றாலும், அதில் அசைபடத்துடன், இசையும் சேர்ந்து இருந்தால் நேர்த்தியாக இருக்கும் தானே? பல கைதேர்ந்த புகைப்பட நிபுணர்கள் இது போன்று படங்களைப் பல விதங்களில் காட்டி டிவிடி ஆக்கித் தருகின்றனர். அதற்குப் பணமும் வசூலிக்கின்றனர். அவர்கள் உருவாக்குவது போலவே நாமும் புகைப்பட டிவிடி உருவாக்கப் பல மென்பொருட்கள் இருக்கின்றன. மிகுந்த செலவு மிக்க பல மென்பொருட்கள் இருக்கும் போது, மிகச் சிறந்த ஒரு மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது. :) அது தான் DVD slideshow GUI என்னும் மென்பொருளாகும். இம்மென்பொருளில் நமது படங்களை வரிசையாக ஏற்றி, இசையையும் சேர்த்து விட்டால் அழகிய டிவிடி அசைபடமாக உருவாக்கித் தந்து விடுகின்றது. அதை அப்படியே குறுந்தகட்டில் டிவிடி அசைபடமாகப் பதிந்து விட்டால் காண்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அது மட்டுமின்றி, நாமே எங்கே எடுத்தது, யார் யார் இருக்கின்றார்கள், எப்போது எடுத்தது போன்ற விவரங்களும் அந்தந்தப் படங்களில் எழுத்துக்களாக இட முடியும்! ஏன்? படம் வரைந்து கூடக் காட்ட முடியும். மிகச் சிறந்த இந்த மென்பொருளை இங்கிருந்து (http://download.videohelp.com/tin2tin/) தரவிறக்கி (18 MB) உங்களின் வாழ்வின் பொன்னான நிகழ்வுகளைச் சேமித்துக் கொள்ளுங்கள். மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

படம் — வெளித் தளத்தில் ↗

படம் — வெளித் தளத்தில் ↗

படம் — வெளித் தளத்தில் ↗

படம் — வெளித் தளத்தில் ↗

17 டிசம்பர் 2009

நமது கணினியில் இருக்கும் ரகசியக் கோப்புக்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் பாதுகாப்பது என்பது சற்றுக் கடினமான விடயம். நீங்கள் மட்டுமே பார்வையிடக் கூடிய ஒரு கோப்பாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் நாம் பூட்டியவுடன் யாரும் திறக்க இயலாமல் இருக்கவேண்டும். யாரும் திறக்க இயலாமல் இருப்பது என்பது எளிதில் சாத்தியமே. ஆனால், நாம் திறக்கும் போது ஒருமுறை மட்டுமே கடவுச்சொல் கேட்கவேண்டும். திறந்த பின் நம்மிடம் அடிக்கடி கடவுச்சொல் கேட்கவும் கூடாது. வன் தட்டில் ரகசியத் தகவல்கள் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் தற்காலிகமாகக் கூடச் சேமிக்கப்படக் கூடாது. சிலசமயங்களில் நமது மொத்த வன் தட்டையுமே இதே போல் பூட்டி வைக்க வேண்டி இருக்கலாம். இவ்வளவு ஏன், ஒரு இயங்கு தளத்தையே பூட்டி வைக்கவும் வேண்டி இருக்கலாம். நாம் காணவிருக்கும் மென்பொருள், வன் தட்டில் தேவையான அளவு ஒரு பெரிய கோப்பை உருவாக்குகின்றது. அதற்குக் கடவுச்சொல்லையும் கேட்டு வாங்கிக் கொள்கின்றது. அதன் பின்னர் அந்தக் கோப்பு ஒரு மாய வன் தட்டாகச் செயல்படுகின்றது. அதாவது நீங்கள் அந்தக் கோப்பை சரியான கடவுச்சொல் கொடுத்துத் திறக்கும் போது USB நினைவகத்தைச் செருகினால் எவ்வாறு புதியதாக ஒரு வன் தட்டு சேமிப்பகம் உருவாகின்றதோ அதே போன்று ஒரு தற்காலிக மாய வன் தட்டு உங்கள் கணினியில் உருவாகும் (எடுத்துக்காட்டு Z:) அதன் பின் அந்தக் கோப்பிற்குள் நீங்கள் சேமிப்பது அனைத்துமே ரகசியமாக வைக்கப்படும். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் கோப்பு முறைமாற்றம் செய்யப்பட்டு (decrypt) முன்பிருந்த கோப்பாகத் தெரியவரும். ஆனால் சேமிக்கும் போது ரகசியமான முறையில் முறைமாற்றம் செய்யப்பட்டே சேமிக்கப்படும். இதனால் அந்த வன் தட்டிலிருந்து ஒரு அலுவலகக் கோப்பைத் திறந்து வழக்கமான கோப்பாகவே உபயோகிக்கலாம். ஆனால் வன் தட்டில் சேமிக்கப்படும் போது பூட்டியே சேமிக்கப்படும். பூட்டப்படாத கோப்பு தற்காலிக நினைவகமான ராம் நினைவகத்தில் மட்டுமே இருக்கும். வன் தட்டில் சேமிக்கப்படுவது பூட்டப்பட்ட கோப்பு மட்டுமே. இந்த மென்பொருளை விட்டு வெளியே வந்து விட்டால் ஒரே ஒரு கோப்பு மட்டுமே இருக்கும். அது பூட்டப்பட்டதா இல்லையா என்று கூட அறிய முடியாது. எந்த வகை கோப்பு என்று கூடக் கண்டறிய இயலாது! இது போன்ற தேவைகளுக்கான மென்பொருள் மிகவும் பெரியதாகவும், மிகவும் விலையுயர்ந்ததாகவும் இருக்கும் என்று தானே நினைக்கின்றீர்கள்? அது தான் இல்லை. முற்றிலும் இலவசமான TrueCrypt என்னும் இந்த மென்பொருள் குறித்து மேலும் அறியவும் தரவிறக்கம் செய்யவும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொடுப்புக்குச் செல்லவும். http://www.truecrypt.org/

23 டிசம்பர் 2009

அடுத்ததாக நாம் காணவிருக்கும் மென்பொருள் ஏற்கனவே நம்மில் பலர் உபயோகித்துக் கொண்டிருப்போம் என்றே நினைக்கின்றேன். நமது பூமிப் பந்தின் எந்த ஒரு இடம் குறித்த தகவல்கள், படங்கள் வேண்டுமானாலும் தேடி எடுக்கக் கூடிய கூகுள் எர்த் எனப்படும் முப்பரிமாண மென்பொருள் தான் அது. கூகுள் எர்த்தின் பயன்கள் எண்ணற்றவை:

படம் கிடைக்கவில்லை

‍* புவியின் மேல் எத்தனை மீட்டர் உயரத்தில் காண்கின்றோம்.
* நாம் செல்ல வேண்டிய பாதை எது?
* நாம் அடையவேண்டிய இடத்தின் தூரம் என்ன?

  • ஒரு சுற்றுலாவையே முற்றிலுமாகச் சேமித்து அசைபடமாகத் தர இயலும். சிறந்ததொரு வழிகாட்டியாக அது அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
  • இன்னும் எத்தனை எத்தனை எத்தனையோ வசதிகள் கொண்டு இலவசமாக இயங்கும் இந்த அரியதொரு மென்பொருளை இன்னுமா நீங்கள் தரவிறக்கிப் பயன்படுத்தவில்லை? இங்கே (http://earth.google.com/) சென்று தரவிறக்குங்கள். மென்பொருளைப் பயன்படுத்தவும் இணைய இணைப்புத் தேவை என்பது கூடுதல் சுமை என்றாலும் கிடைக்கும் வசதிகளைக் கண்ணுறும் போது அது சுகமான சுமை தான்.

17 மார்ச் 2010

மொசில்லா மென்பொருள் தொகுப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் அவசியமான மென்பொருள் இது. ஃபயர்பாக்ஸ், தண்டர்பேர்ட் போன்ற மென்பொருட்களில் நாம் சேமித்து வைத்திருக்கும் புத்தகக்குறிகள், கடவுச்சொற்கள், மின்னஞ்சல் முகவரிகள், மின்னஞ்சல்கள், நாட்குறிப்புகள் என்று அத்தனை தகவல்களையும் ஒரே கோப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். நாம் வேறு கணினி மாற்றும் போதோ, அல்லது நச்சுநிரலிகளின் காரணமாக வன்தட்டை அழித்து மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ, நமது அனைத்துத் தகவல்களையும் முன்போலவே மீண்டும் நிறுவ வசதி இருப்பதால் மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மொத்தத்தில் 1 மெகா பைட் அளவுக்கும் குறைவாக இருக்கும் மொசில்லா பேக்கப் என்னும் இந்த மென்பொருளின் இணையதளம் இங்கே (http://mozbackup.jasnapaka.com/) இருக்கின்றது.

படம் — வெளித் தளத்தில் ↗

28 மார்ச் 2010

அடுத்து நாம் பார்க்கவிருக்கும் மென்பொருள் மிகவும் வித்தியாசமானது! பல திரைப்படங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மைக்கேல் ஜாக்சனால் பிரபலமான இந்த உத்தி, இந்தியன் படத்தின் மூலமாகத் தமிழில் பிரபலமான இந்த உத்தி இப்போது சமீபத்தில் நித்தியானந்தா பிரச்னையிலும் அடிபட்டது! அது தான் மார்பிங் எனப்படும் அசைபடத்தில் ஒருவர் முகத்தை இன்னொருவர் முகமாகவோ அல்லது பொருளாகவோ மாற்றும் உத்தி ஆகும். மார்பிங் எனப்படுவது ஒரு முகத்திலிருந்து இன்னொரு முகமாக மாற்றுவதே அன்றி, ஒருவர் முகத்திற்குப் பதிலாக இன்னொருவர் முகமாக மாற்றுவது அல்ல! ஒருவருக்குப் பதிலாக இன்னொருவரை நடிக்க வைப்பது போல் செய்வது (எடுத்துக்காட்டு: சமீபத்திய அவதார் படம்) motion capturing and 3D modeling with CG (Computer Graphics) அதற்கும் மார்பிங்குக்கும் தொடர்பில்லை. நாம் இப்போது பார்க்கவிருக்கும் மென்பொருள், இதே துறையிலிருக்கும் எந்த ஒரு வணிக மென்பொருளுக்கும் சளைத்ததல்ல! யார் வேண்டுமானாலும் மார்பிங் செய்வது எப்படி என்று எளிதில் தெரிந்து கொள்வதுடன் அதை நடைமுறைப்படுத்தவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு மென்பொருளாகும். இத்தனை பயனுள்ள மென்பொருளை முற்றிலும் இலவசமாக வழங்கியிருப்பது தான் ஆச்சரியம். வின்மார்ஃப் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மென்பொருளை இங்கிருந்து (http://www.debugmode.com/winmorph/) தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்! (4.3 MB) இந்த அருமையான மென்பொருளை உருவாக்கியவர் சதீஷ்குமார் என்னும் இந்தியர் என்பதில் நமக்கும் பெருமையே! நீங்களும் மார்பிங் அசைபடம் உருவாக்கி மகிழுங்கள்!

படம் கிடைக்கவில்லை

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஐந்தே நிமிடத்தில் புலியின் முகத்தை மஹாஸ்ரீயின் முகமாக மாற்றிய அசைபடம் இது. இன்னும் முயற்சி செய்தால் மிகத் துல்லியமான அசைபடங்களை உருவாக்கக் கூடும்!

படம் கிடைக்கவில்லை

10 ஜூன் 2010

லோகோ என்னும் மென்பொருள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. லோகோ என்பது சிறார்களுக்கான கணினி மொழி மென்பொருளாகும். மிக எளிய கட்டளைகள் மூலம் கணக்குகள் முதல் படங்கள் உருவாக்குவது வரை பல அரிய செயல்களைச் செய்ய லோகோ மொழி உதவிகரமாக இருப்பதால் முதல் நிலைக் கணினி மொழி பயில்வோருக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த லோகோ மொழியை மொத்தமும் இலவசமாக உருவாக்கி அளித்திருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாகும். மென்பொருள் மொழியாக்கத்தை விரைவில் கற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மொழியைத் தரவிறக்கிக் குழந்தைகளைக் குதூகலப்படுத்தலாம்! http://fmslogo.sourceforge.net/ மேற்குறிப்பிட்டிருக்கும் முகவரியிலிருந்து தரவிறக்கிப் பயன்பெறலாம்.

11 ஜூன் 2010

கணினித்துறையில் வரைகலை என்பது ஒரு முக்கியமான துறையாகும். கற்பனையையும் கலைத்திறனையும் கொண்டு பல உலகங்களையே கணினியில் சிருஷ்டிக்க முடிகின்ற துறை இது. அதிலும் முப்பரிமாண வரைகலையால் பலப்பல ஜாலங்கள் செய்ய முடிந்திருக்கின்றது. பல்வேறு பொருட்களை கணினியிலேயே வடிவமைத்துக் காண முடிகின்றது. இந்த வாகனம் இந்த நிறத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வண்ணம் பூசித் தான் காண வேண்டும் என்பது இல்லாமல் கணினியிலேயே நொடியில் மாற்றிக் காண ஏதுவாகின்றது. இப்போது நாம் காணவிருப்பது அவ்வாறான வரைகலைத் தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் ஆகும். ஒரு அறையை வடிவமைத்து அதில் பல்வேறு விளக்குகள் கொண்டு ஒளியூட்டி, பலவிதமான பொருட்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்து, அவற்றுக்கு வெவ்வேறு நிறங்களால் அலங்கரித்து அடேங்கப்பா! கற்பனையிலேயே உலகத்தினை உருவாக்க இயலும். நிழல்களும் அழகானவை என்று சொல்லத் தோன்றும்! ஒரு பொருளை வைத்துப் புகைப்படம் எடுப்பதைக் காட்டிலும், வரைகலையின் மூலம் உருவாக்கும் போது படம் கனகச்சிதமாகின்றது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள். இவை முழுக்க முழுக்கக் கணினியால் வரையப்பட்டவை என்றால் நம்பமுடிகின்றதா?

2 படங்கள் கிடைக்கவில்லை

இவற்றை உருவாக்கும் ஒரு மென்பொருள் தான் kerkythea (http://www.kerkythea.net/joomla/index.php) என்னும் மென்பொருள் ஆகும். இலவசமான இந்த வரைகலை மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்.

5 ஆகஸ்ட் 2010

விண்டோஸ் இயங்ககம் பயன்படுத்துவோருக்கென 1996ல் ஒருவர் உருவாக்கிய தளம் தான் இப்போது நாம் காணவிருக்கும் Sysinternals தளம் (http://technet.microsoft.com/hi-in/sysinternals/default%28en-us%29.aspx). இந்தத் தளத்தின் அருமை கருதி இதை 2006 வாக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி அதிலிருக்கும் மென்பொருட்களை இலவசமாக இன்று வரை வழங்கி வருகின்றது. யாமறிந்த மென்பொருட்களிலே இங்கிருப்பதைப் போல் விண்டோஸைக் கட்டுப்படுத்துவது வேறெங்கும் காணோம் என்று இன்றிருந்தால் பாரதி பாடியிருக்கும் அளவுக்கு அருமையான மென்பொருட்களைக் கொண்டிருக்கும் இத்தளத்தில் இருப்பதிலேயே மிக முக்கியமான மென்பொருளை இப்போது காண்போம். Process Explorer என்ற பெயரில் 1.64 எம் பி கொள்ளளவு கொண்டிருக்கும் இந்த மென்பொருளை இங்கிருந்து (http://technet.microsoft.com/hi-in/sysinternals/bb896653%28en-us%29.aspx) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்போது என்னென்ன மென்பொருட்களை விண்டோஸ் இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை விலாவாரித் தகவலுடன் தருகின்றது இந்த மென்பொருள். ஏற்கனவே விண்டோஸில் Task Manager என்னும் மென்பொருளின் மேம்பட்ட பதிப்பாகவே இந்த மென்பொருளைக் கையாளலாம். தேவைப்பட்டால் டாஸ்க் மேனேஜருக்குப் பதிலாக இந்த மென்பொருளையே நாம் பயன்படுத்திக் கொள்ளவும் வசதி இருக்கின்றது. இது தவிர இன்னும் பயனுள்ள பல மென்பொருட்கள் கொண்டிருக்கும் இத்தளத்தில் சென்று தரவிறக்கிப் பயன்பெறலாம்.

2 படங்கள் கிடைக்கவில்லை

13 செப்டம்பர் 2010

இணையத்தில் நாம் தரவிறக்கும் அசைபடங்களும் சரி அல்லது நண்பர்களிடம் இருந்து பெறும் அசைபடங்களும் சரி avi, mp4, divx, dat, mpg, vob, rmvb, wmv போன்ற பல வகைகளில் வருகின்றன. இவையனைத்துமே அசைபடங்களைக் கொண்டு வரும் பொட்டலங்கள் என்றாலும், அப்பொட்டலங்களைப் பிரிக்கும் வழி தெரியாவிட்டால் அவற்றைக் காண முடிவதில்லை. மேலும், நாம் ஒரு அசைபடத்தை உருவாக்கும் போதும், இதில் ஏதேனும் ஒருவகையில் அசைபடத்தைச் சேமித்தால் அசைபடத்தின் தரமும் அதிகமாக இருக்கும். கோப்பின் அளவும் குறைவாக இருக்கும். அப்படி ஒரு பொட்டல வகை தான் XVid என்னும் கோடெக் (CoDec) ஆகும். Coder-Decoder என்பதன் சுருக்கமே கோடெக். இதை நம் கணினியில் நிறுவிக் கொண்டால், அசைபடத்தை உருவாக்கவும் உதவும், அசைபடத்தை ஓடவைக்கவும் உதவும். கட்டற்ற இலவச மென்பொருளான இதை முயன்று பாருங்கள். இங்கிருந்து (http://www.xvid.org) தரவிறக்கிக் கொள்ளலாம்.

23 டிசம்பர் 2010

நமது கணினி மேசைமுகப்புத் திரையில் பின்புலத்தில் ஒரு படத்தை வைத்திருப்போம். இப்போது விண்டோஸ் 7 பதிப்பில் மேலும் பல விஷயங்களை அவ்வப்போது நிகழ்நிலையில் மாற்றிக் கொண்டே இருக்கும் மென்பொருள் அமைப்பு வந்திருக்கின்றது. விண்டோஸ் இயங்குதளத்துடன் வரும் இந்த மென்பொருளில் இல்லாத பல வசதிகளைக் கொண்டதாகவும், மேலும் அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் பயன்படுத்தத் தக்கதாகவும் ஒரு மென்பொருள் rainmeter (http://rainmeter.net/RainCMS/) எனப்படும் மென்பொருள் ஆகும். இம்மென்பொருளில் நாம் பெறும் சில வசதிகளாவன:

  1. வட்டக் கடிகாரம்
  2. மாத நாள்காட்டி
  3. மையச்சிப்ப பயன்பாட்டு அளவு
  4. இணையத் தரவேற்ற/தரவிறக்கப் பயன்பாட்டு அளவு, ஐபி முகவரி.
  5. வன் தட்டின் அளவு, அடைவின் சுருக்குவழி, மென்பொருள்ட்களின் சுருக்குவழி
  6. நினைவூட்டி
  7. தற்காலிக நினைவகப் பயன்பாட்டு அளவு
  8. ட்விட்டர், ஜிமெயில், ஃபேஸ் புக் போன்ற சமூகத் தளங்களின் நிகழ்வுகள்/மின்னஞ்சல்கள்
  9. டாரன்டுகளின் பயன்பாட்டு அளவு
  10. குப்பைத் தொட்டியிலிருக்கும் கோப்புகளின் அளவு
  11. பல தளங்களின் ஓடை வசதிகள்
  12. இன்னும் என்னென்னவோ தகவல்களைத் திரையில் காட்டியவண்ணம் இருக்கும் இம்மென்பொருளுக்குப் பல வண்ணமயமான, வித்தியாசமான கண்களைக் கவரும் தோல்களும் இருக்கின்றன. இவையனைத்தும் முற்றிலும் இலவசம் என்பது தான் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஆகும். இதோ ஒரு எடுத்துக்காட்டு:

படம் — வெளித் தளத்தில் ↗

மேலே குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து தரவிறக்கிப் பாருங்கள்.

மேலும் வாசிக்க

கணினி

கணினி

வன்தட்டின் எமன் - SSD

கணினியை உபயோகிக்கும் நம்மெல்லோர்க்கும் வன் தட்டின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். இப்போது வன் தட்டைக் காணாமல் செய்வதற்கு ஒரு எமன் வந்திருக்கின்றான்…

கணினி

அலுவலகம் திறப்போம் வாரீகளா?

என்ன தான் IBM நிறுவனம் பிசினஸ் மெஷின்ஸ் என்று பெயர் வைத்திருந்தாலும், பெரு வர்த்தகத்துக்கு மட்டுமே கணினிகள் உபயோகிக்க முடியும் என்றொரு காலம் இருந்தது.…