அசைபட வரைகலை தெரிவோமா?
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 28 ஜூலை 2007 – 24 அக்டோபர் 2010
அன்பு நண்பர்களே, கணினியில் அசைபட வரைகலை பற்றி உங்களுடன் இணைந்து கற்க விழைகின்றேன். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் உபயோகமாய் இருக்கட்டும். அசைபடம்: ஒரு அறிமுகம்: எத்தனையோ அசைபடங்களைக் கணினியில் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். உதாரணம் நம் மன்றத்தை எடுத்துக் கொண்டால் முகப்பில் இருந்து பதிவிடும் எல்லா இடங்களிலும் அசைபடங்கள் இருக்கும். உதாரணம்: என் அவதார். அப்புறம் நிறைய முகநயங்கள். :bounce: :compress: :cyclopsani: என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை எப்படி வடிவமைப்பது என்று அறிந்து கொள்வோமா? அசைபடம் என்பது ஒரு மாயை! கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டு வித்தை! ஆம். தொடர்ச்சியாய் படங்களை மாற்றிக் கொண்டே இருந்தால் நம் கண்களுக்கு சரியாக ஓரு விநாடிக்கு 24 சட்டங்களை (பிரேம்கள்) வேகமாக ஓடவிட்டால் அது ஏதோ நம் முன்னே நடப்பது போலவே தான் தோன்றும்! எனவே தான் சினிமா காட்டிகளில் ஒரு விநாடிக்கு 24 சட்டங்களை ஓட விடுகின்றார்கள். சட்டங்களை அப்படியே ஓட விடுவதில்லை! அப்படியே ஓட விட்டால் ஒன்றும் தெரியாது! கிட்டத்தட்ட ஒரு கேமிரா படம் பிடிப்பது போல் ஒரு விநாடிக்கு 24 படங்கள் சரியாக திரையில் காட்டப் படுகின்றன சின்னச் சின்ன அசைவுகளுடன். அவை நமக்கு மாயபிம்பங்களாய் அசைவுகளாய்த் தெரிகின்றன. கேமிரா போலவே இங்கும் ஒரு கதவு (ஷட்டர்) இயங்குகின்றது. ஒரு சட்டம் வந்து நின்றதும் கதவு திறந்து ஒளி வெள்ளம் பாய்ச்சப் படும். பின் அடுத்த சட்டம் நகரும் போது கதவு மூடிக் கொள்ளும். அந்நேரம் ஒளி பாய்ச்சப் படாது. அப்படியே 24 சட்டங்கள் ஒரு விநாடிக்குள் ஓடி முடிந்து விடுகின்றன! ஆச்சரியம் தானே?!
படம் கிடைக்கவில்லை
சரி. இதற்கும் கணினி அசைபடத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று தானே கேட்கின்றீர்கள்? சம்பந்தம் உண்டு! தொடர்கின்றேன்.
பாகம்: 2 மயக்கும் பிம்ப வீதம்: (Frames per second) கிட்டத்தட்ட கணினி அசைபடங்களும் இதே முறையைத் தான் கையாளுகின்றன. ஒரு விநாடிக்கு எத்தனை பிம்பங்கள் என்பதைப் பொருத்தே அசைபடங்களின் தரம் நிர்ணயிக்கப்படும்! உதாரணமாய் சில கணினி விளையாட்டுக்கள் 250 பிம்பங்கள் ஒரு விநாடிக்கு என்ற வேகத்தில் இயங்குகின்றன. அவற்றின் கூர்மை அத்தனை அற்புதமாய் இருக்கும். ஆனால் மிக அதிக பிம்பங்கள் இருப்பதாலேயே தரம் வந்து விடும் என்றும் பொருளன்று! பிம்பங்களின் தரமே படத்தின் தரமாகும். அதே சமயத்தில் விநாடிக்கு 10 பிம்பங்கள் கொண்டும் அசைபடங்கள் தயாரிக்கலாம்! கணினியில் அது சாத்தியம் ஆகும். ஏனென்றால் இங்கு படங்களும் அதே வேகத்தில் நகரும் வண்ணம் அமைக்கப் படுகின்றன. ஆனால் திரைப்படங்களோ சரியாக 24 பிம்பங்கள் ஒரு விநாடிக்கு என்ற வீதத்திலேயே படமும் பிடிக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு இரண்டு பதிவுக்கு முன்பு பதிவிட்டிருக்கும் சுபனின் அவதாரைப் பாருங்கள். அதில் இருப்பது இரண்டே இரண்டு பிம்பங்கள் தான்! ஆனால் அதுவும் அசைபடமாகத் தெரிகின்றது! முந்தைய பதிவின் ரமேஷ் தோழனின் அவதாரையும் பாருங்கள்! அது இன்னும் கொஞ்சம் அதிகமாக ஐந்து பிம்பங்கள் கொண்டிருக்கின்றது! இந்தத் திரி அமையக் காரணமான லாலியின் கையெழுத்துப் படமோ 8 சட்டங்கள் கொண்டிருக்கின்றது. இதோ வரிசையாய் அவை!
8 படங்கள் கிடைக்கவில்லை
இவையனைத்தும் ஒன்றாய் இணைந்து தரப்படும் போது (அதாவது விநாடிக்கு 8 என்ற எண்ணிக்கையில்) முடிவிலியாய் (Loop) பார்க்க அழகாய் இப்படி இருக்கின்றது!
படம் கிடைக்கவில்லை
அடுத்து விவேக்ராஜாவின் ரோஜா ஆட்டத்தை ஒரு கை பார்ப்போமா?! ஹிஹி. தொடர்கின்றேன்.
இது விவேக்கின் ரோஜா ஆட்டம்! இதுவும் 8 சட்டங்கள் கொண்டதே! இதோ அவை வரிசையாக!
8 படங்கள் கிடைக்கவில்லை
இதைச் சேர்த்ததும் விவேக் தன் அவதாரில் வைத்திருப்பது போல் ரோஜா ஆட்டம் போடுகின்றது!
படம் கிடைக்கவில்லை
சரி ஆட்டம் காட்டியது போதும்! எப்படீன்னு சொல்லுங்கப்பு என்கின்றீர்கள் தானே. ஆரம்பிக்கலாம். தொடர்வோம்.
2 ஆகஸ்ட் 2007
இதோ வந்து விட்டேன். அசைபடம் என்பது வரிசையாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை சரியான நேர இடைவெளியில் காட்டி அது தொடராய் நிகழ்வது போல் கண்ணை மயக்குவது என்பதைக் கண்டோம். இனி அதை நாம் கணினியில் எப்படிச் செய்வது என்று பார்ப்போம். முதலில் ஏற்கனவே இருக்கும் ஒரு படத்தை எப்படி அசையச் செய்வது என்று பார்க்கலாம். பின்னர் நாமே படம் ஒன்றை வரைவதன் மூலம் எவ்வாறு அசையச் செய்ய முடியும் என்று காண்போம். http://www.gimp.org/windows/ என்ற மென்பொருள் மூலம் இதை எளிதில் செய்யலாம். தற்போதைய பதிப்பை இங்கிருந்து (http://downloads.sourceforge.net/gimp-win/gimp-2.2.17-i586-setup.exe) பெறலாம் (7 MB). மேலும் முதன்முறையாக இதைத் தரவிறக்கும் போது GTK என்னும் நூலகக் கோப்பையும் நிறுவ வேண்டும். அதை இங்கிருந்து (http://downloads.sourceforge.net/gimp-win/gtk%2B-2.10.13-setup.exe) பெறலாம் (5 MB). இவ்விரண்டையும் நிறுவிக் கொள்ளுங்கள். முதலில் GTk தான் நிறுவ வேண்டும். அதில் தமிழ் மொழியும் இருக்கின்றது! நமது முதல் அசைபடம்! (கொஞ்சம் படம் வரத் தாமதமாகலாம்! பொறுங்கள். 1 MB ஆகி விட்டது. :()
படம் கிடைக்கவில்லை
நமது இந்த முதல் அசைபடம் உருவாவதை எளிய முறையில் 15 படிகளில் ஏறிச் சென்று விளக்கமுயல்கின்றேன்!
- முதன் முதலில் GIMP மென்பொருளை இயக்கினால், இவ்வாறு இருக்கும்.
படம் கிடைக்கவில்லை
- இது இயக்கிய உடன்!
படம் கிடைக்கவில்லை
- அதில் file->new (ctrl + N) தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்தால் வரும் சாளரம் இவ்வாறு இருக்கும். அதில் நம் மன்ற முகப்புப் படத்தின் அளவான 500 x 150 ஐ இடுங்கள். படத்தில் இட்டவாறு.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக நம் மன்ற முகப்புப் பக்கத்திற்குச் சென்று இடது மேலே இருக்கும் படத்தைக் பிரதி எடுத்துக் கொள்ளுங்கள். கீழ்க்காட்டியுள்ளவாறு.
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
- படத்தில் காட்டியுள்ளவாறு edit->paste into என்று தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அவ்வாறு செய்தவுடன், ctrl+l (layers) அழுத்தினால் கீழ்க்கண்ட சாளரம் வரும். அதில் நங்கூரம் போல் இருக்கும் பட்டனை அழுத்துங்கள். (Anchor Layer)
படம் கிடைக்கவில்லை
- அப்படிச் செய்தவுடன் நாம் இங்கே நகலிட்ட அடுக்கு (Layer) பின்புல அடுக்கில் போய் சேமிக்கப் படும். (Background Layer)
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக நான் கீழே காட்டியுள்ளவாறு Script-fu->animators->rippling என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
- அதை அழுத்தியவுடன் கீழ்க்கண்ட சாளரம் வரும்.
படம் கிடைக்கவில்லை
- அதில் கீழ்க்கண்டவாறு மதிப்புக்களை மாற்றுங்கள்.
Rippling Strength = 3.0
Number of Frames = 30
Edge Behaviour = Smear
படம் கிடைக்கவில்லை
- அப்படிச் செய்தவுடன் அதுவாகவே 30 படங்கள் வரையக் காணலாம்! கீழ்க்கண்டவாறு புதிதாய் ஒரு கோப்பு உருவாகும்!
படம் கிடைக்கவில்லை
- இனி நம் அசைபடத்தை உருவாக்க வேண்டியது தான்! file->save as என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
- வரும் சாளரத்தில் Select File Type ஐத் தேர்ந்தெடுத்து GIF என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக வரும் கீழ்க்கண்ட சாளரத்தில் படத்தில் கண்டுள்ள படி Save as Animation என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக வரும் சாளரத்தில் Frame Disposal Where Unspecified என்பதில் One frame per layer (replace) என்பதைத் தேர்ந்தெடுத்து சேமிக்கச் சொல்லுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அவ்வளவு தான். நம் முதல் அசைபடம் தயார்! இன்னும் பல்வேறு சாதனங்கள் இந்த மென்பொருளில் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைக் கூட நாம் உபயோகிக்கவில்லை! ஒவ்வொன்றாய்க் காணலாம். நீங்கள் விருப்பப்பட்டால்! இனி ஒரு படம் வரைந்து அதை எவ்வாறு அசைபடமாக்கலாம் என்று பார்ப்போம். சந்தேகம் ஏதுமிருப்பின் கேளுங்கள்! என்னாலியன்ற வரை தீர்த்து வைக்க முயல்கின்றேன்.
4 ஆகஸ்ட் 2007
இப்போது அடுக்குகள் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். பள்ளியில் படிக்கும் போது OHP (Over Head Projector) பார்த்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அதாவது ஒரு ஒளி ஊடுருவும் தாளில் (Transparent) பல வண்ணங்களால் எழுத அல்லது வரையப்பட்டிருக்கும் விசயங்களை வைத்துக் கற்றுத் தருவார்கள். அந்தத் தாள்களை வரிசையாய் அடுக்கி வைத்தால் எப்படி இருக்குமோ அது தான் அடுக்குகள் (Layers). இந்த அடுக்குகள் ஒளி ஊடுருவும் தன்மையானதாகவும் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். இப்போதைக்கு ஒளி ஊடுருவா அடுக்குகள் பற்றிக் காண்போம். அடுத்து ஒளி ஊடுருவும் அடுக்குகள் பற்றிக் காணலாம். போன எடுத்துக் காட்டில் அடுக்குகள் பற்றி நமக்குத் தெரியாமலேயே நாம் பார்த்திருக்கின்றோம். அசைபடம் உருவாக்கும் போது அதுவாகவே உருவாகியது பல அடுக்குகள். இந்த முறை நாம் உருவாக்குவோம் அத்தகைய அடுக்குகளை. பயிற்சி: 2 இரு படங்களை மாற்றி மாற்றிக் காட்டுவதன் மூலம் ஒரு சிறு வித்தை காட்டலாம். இது மார்பிங் மாதிரி தான். ஆனால் கொஞ்சம் மாறு பட்டது. (ஹி. மார்பிங் பற்றியும் அதற்கான மென்பொருள் பற்றியும் கற்றுத் தரக் கூட ஆசை தான்!) இப்போது GIMP ஆரம்பித்துக் கொள்ளுங்கள். ஒரே அளவுள்ள (உயரம் மற்றும் அகலம்) இரண்டு படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய படத்திலிருந்தும் irfanview மென்பொருள் மூலம் தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம்! உதாரணத்திற்கு நான் எடுத்தது போல்.

படம் கிடைக்கவில்லை
அந்தப் படத்தின் உயர அகலங்களை மனதிற்குள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படங்களின் அளவு இரண்டுமே 282 x 334. எனவே புதியதாய் உருவாக்கும் கோப்புக்கு 282 x 334 அளவு கொடுத்து உருவாக்குவோம். படி: 1 புதிய கோப்பு உருவாக்கம்
படம் கிடைக்கவில்லை
படி: 2 அடுக்கு உருவாக்கம் அடுத்ததாக வழக்கம் போல் கண்ட்ரோல் L அழுத்தி அடுக்குகள் சாளரத்தைத் திறந்து கொள்ளுங்கள். அதில் புதிய அடுக்கு என்பதைச் சொடுக்கவும். (படம்)
படம் கிடைக்கவில்லை
படி: 3 அடுக்கு வகை: புதிய அடுக்கின் வகை பற்றிய சாளரம் திறக்கும். அதில் கீழ்க்கண்டவாறு இடுங்கள். ஒளி ஊடுருவும் அடுக்காகவே நாம் தீர்மானித்திருப்பதைக் காணுங்கள்!
படம் கிடைக்கவில்லை
படி: 4 முதல் படம் ஏற்றம்: நாம் முன்பே கண்டது போல் முதல் படத்தை ஏற்றுங்கள். (Edit -> Paste into)
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
படி: 5 முதல் அடுக்கு நிறைவு நங்கூரம் பொத்தானை அழுத்திய உடன் கீழ்க்கண்டவாறு படம் அந்த அடுக்கில் ஒட்டப்பட்டு விடும். (இதன் மூலம் அந்த அடுக்கின் ஒளி ஊடுருவும் தன்மை இல்லாமல் ஆகிவிடும்!)
படம் கிடைக்கவில்லை
படி: 5 இரண்டாம் அடுக்கு நாம் ஏற்கனவே செய்தது போல் இன்னொரு அடுக்கு உருவாக்குங்கள். இரண்டாவது படத்துக்கென. அதாவது படிகள் 2,3,4 மீண்டும் ஒரு முறை.
2 படங்கள் கிடைக்கவில்லை
படி: 7 அசைபட உருவாக்கம் அடுத்ததாக அசை படம் உருவாக்கலாம்! Script-fu -> Animators -> Blend என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
படி: 8 அசைபட உருவாக்கம் - தொடர்கின்றது இந்த Blend அமைப்பை உபயோகிக்க குறைந்த பட்சம் மூன்று அடுக்குகள் தேவை. நம்மிடம் இப்போது மூன்று அடுக்குகள் இருக்கின்றன. அதாவது பின்புல அடுக்கு, அடுக்கு 1, அடுக்கு 2 ஆகும். இனி படத்தில் காட்டியுள்ளது போல் வரும் சாளரத்தில் Intermediate Frames - 10 என்ற மதிப்பிட்டு அசைபடத்தை உருவாக்குங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி: 9 அசைபட சேமிப்பு இப்போது கீழ்க்கண்டவாறு ஒரு கோப்பு அதுவாகவே உருவாகியிருக்கும்!
படம் கிடைக்கவில்லை
இந்தப் படத்தை நாம் முதல் எடுத்துக்காட்டில் சொன்ன படி gif ஆக சேமித்தால் கீழ்க்கண்ட அசைபடம் உருவாகியிருக்கும். சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்த பாடம் தொடர்வோமா?
6 ஆகஸ்ட் 2007
அடுத்ததாய் இந்தப் படம் செய்வது எப்படி என்று சொல்லித் தரப்போகின்றேன். அனைவரும் தயாரா?!
படம் கிடைக்கவில்லை
7 ஆகஸ்ட் 2007
அடுத்ததாய் நாம் காணவிருக்கும் பாடத்திற்கு நான் வைத்த பெயர்: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! வானமே எல்லை என்றும் சொல்லலாம்! முதலில் ஒரு படம் தேர்ந்தெடுத்துக் கொள்வது. பின்னர் அந்தப் படத்தை ஏதாவது கருவியின் துணை கொண்டு வித்தியாசமான முறையில் இன்னொரு படமாக மாற்றுவது. அவ்வாறு மாற்றப்படுவதை அசைபடமாய்க் காட்டுவது. அவ்வளவு தான். அதாவது முதல் படம், இரண்டாவது படம். இரண்டையும் கொடுத்தால் போதும். இந்த முறைக்கு இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய், மென்பொருளே முதல் படத்தில் இருந்து இரண்டாவது படத்தை உருவாக்குவதாய் இருத்தல் அவசியமாகும். எனவே, நாம் முதல் படம் என்று ஒன்றை மட்டும் உருவாக்கி விட்டால் போதும்! அப்புறம் நம் கற்பனைகளுக்கு வானம் தான் எல்லை. ஒரே படத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அசைபடங்களை இதன் மூலம் உருவாக்க இயலும்! சரி இனி எடுத்துக்காட்டுக்குச் செல்வோம்! இன்னும் புதிய கோப்பை எப்படி உருவாக்குவது போன்ற அடிப்படையைச் சொல்லித் தரத் தேவையில்லை தானே?
- முதலில் 200 x 200 என்ற அளவில் ஒரு கோப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- வழக்கம் போல் புதிய அடுக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- இனி பின்புல அடுக்கு நமக்குத் தேவையில்லை. எனவே அதை நீக்கி விடலாம்! கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். பின்புல அடுக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன் பின் குப்பைத்தொட்டியில் கடாசி விடலாம்!
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக படத்தில் காட்டி உள்ள வாறு நாம் ஏற்கனவே உருவாக்கி இருக்கும் ஒளி ஊடுருவும் அடுக்கில் பென்சில் அல்லது பேனாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, circle (11) என்னும் அளவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சும்மா நான் வரைந்தது போல் ஏதேனும் ஒரு உருவம் வரையுங்கள். (இந்த வரையுறதுக்குப் பயந்துக்கிட்டுத் தான் நான் வணிகவியலுக்கே ஓடினேன்! அதனால் நான் கிறுக்கியதை வரைந்ததாகச் சொல்வதைக் கண்டு கொள்ளாதீர்கள்!)
படம் கிடைக்கவில்லை
- அவ்வளவு தான் நம் வரையும் வேலை முடிந்து விட்டது. இனி நாம் அசைபடம் செய்யத் துவங்குவோமா? கீழ்க்கண்ட ஆப்சனைத் தேர்ந்தெடுங்கள் (Script-fu -> Animators -> Selection to AnimImage)
படம் கிடைக்கவில்லை
- அதை இயக்கிய வுடன் கீழ்க்கண்டவாறு சாளரம் திறக்கும். அதில் அடுக்குகளை 20 என்றும், பின்புல நிறத்தை நிரப்பவும் என்றும் படத்தில் காட்டியவாறு தெரிவு செய்து கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
- இனி வரும் சாளரத்தில் பல விசயங்கள் அடங்கி இருக்கின்றன. இடது புறம் என்னென்ன செருகிகள் (Plug-in) இருக்கின்றன என்றும், வலது புறம் அவற்றின் தன்மை குறித்தும், கீழே அவற்றைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும் இருக்கின்றது. இதைத் தான் நான் வானமே எல்லை என்று சொன்னேன். ஒவ்வொன்றிலும் பல நூறு வகையான அசைபடங்கள் செய்யலாம். எனவே நம் கற்பனை தான் எல்லை இந்த வகை அசைபடங்களுக்கு! இதில் நாம் emboss என்னும் செருகியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
தேடலில் emboss என்று இட்டு, Search by name என்பதைச் சொடுக்குங்கள்.
படம் கிடைக்கவில்லை
- தேடலில் Plug-in-emboss என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் Apply Varying என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக வரும் சாளரம் தான் மிக முக்கியமானது ஆகும். அதில் preview என்னும் முன்பார்வையைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் கீழ் இருக்கும் மூன்று மாற்றிகளை உபயோகித்து (sliders - Azimuth, Elevation, Depth) உங்களுக்குப் பிடித்த பிதுக்கத்தை (Emboss) வைத்துக் கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- இது முதல் படமாகும். அதாவது பாதிக் கிணறு! கவலைப்படாதீர்கள். மீதிக் கிணறை எளிதில் தாண்டி விடலாம். அடுத்து வரும் சாளரத்தில் Continue வைச் சொடுக்கி முன்னேறுங்கள்!
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
- இனி முடிவுறும் இரண்டாவது படத்தைத் தேர்ந்தெடுங்கள். அதே போல் மூன்று மாற்றிகளையும் மாற்றி வையுங்கள் விருப்பம் போல்!
முதல் படம் எப்படி இருந்த நான். அடுத்த படம் இப்படி ஆயிட்டேன். அதாவது 1 மட்டும் 20 வது அடுக்கு.
படம் கிடைக்கவில்லை
- அடுத்த சாளரம் கீழ்க்கண்டவாறு இருக்கும். அதில் இடைப்பட்ட அடுக்குகளைப் (அதாவது மொத்தம் இருக்கும் 20 அடுக்குகளில் 1, 20 போக மீதி இருக்கும் 18 அடுக்குகளை) பற்றியது. நாம் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதிலும் Continue சொடுக்கி முன்னேறுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- இப்போது நம் பணி நிறைவுற்றது. கீழ்க்கண்ட அசைபட 20 அடுக்குகளுடன் அழகாய் ஒரு கோப்பு உருவாகி இருக்கும். இனி Save as-> Gif போட்டு வழக்கம் போல் அசைபடம் உருவாக்குங்கள்.
படம் கிடைக்கவில்லை
அவ்வாறு உருவாக்கப் பட்ட படம் இது!
படம் கிடைக்கவில்லை
உங்களின் உற்சாகமே எனது இந்தத் தொடரின் பதிவுகளுக்குக் காரணம். அடுத்த பாடம் தொடர்வதற்கு முன் இந்த முறையப் பயன்படுத்தி பல படங்களை உருவாக்கி நம் மன்றத்தாரை மகிழ்வியுங்கள்! ஏதேனும் சந்தேகம்? இருந்தால் கேளுங்கள். பட்டையைக் கிளப்பி விட்டு பாடத்தைத் தொடர்வோம்!
உதாரணத்திற்கு ஒன்று!
படம் கிடைக்கவில்லை
இதுவும் ஒரு ரகம்!
படம் கிடைக்கவில்லை
8 ஆகஸ்ட் 2007
இதோ இன்னும் சில!

3 படங்கள் கிடைக்கவில்லை
26 ஆகஸ்ட் 2007
சரி. இதுவரை ஏதேனும் ஒரு கருவியை உபயோகித்து அசைபடம் உருவாக்கினோம். இனி நாமாக கோதாவில் இறங்கலாம்! இப்படி யாரையாவது கண்ணடிக்க வைப்போமா?! ;)
படம் கிடைக்கவில்லை
28 ஆகஸ்ட் 2007
இதோ வேணு ஐயாவுக்காக எழுத்துக்களில் எப்படி அசைபடம் உருவாக்குவது என்று காண்போம். முதலில் நான் ஏற்கனவே சொன்ன GAP (Gimp Animation Package) ஐ நிறுவிக்கொள்ளுங்கள். அதன் மூலம் எந்த ஒரு தொழில்முறை மென்பொருள் மூலம் செய்ய இயலும் அசைபடமும் செய்ய முடியும். சரி. இப்போது நம் பாடத்திற்குச் செல்வோம். மொத்தம் 14 படிகளில் இதைச் செய்யலாம்.
- GIMP மென்பொருளில் லோகோ செய்வதெற்கென்று மிகச் சிறந்த எளிய கருவி ஒன்று இருக்கின்றது. கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். GIMP திறந்ததும் Xtns -> Script-Fu -> Logos -> SOTA Chrome என்னும் லோகோவை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன்.
படம் கிடைக்கவில்லை
- கீழ்க்கண்டவாறு வரும் சாளரத்தில் எனது பெயரையும், எழுத்துரு அளவும் (பிக்செல்லில்) கொடுத்திருக்கின்றேன்.
படம் கிடைக்கவில்லை
- கீழ்க்கண்டவாறான ஒரு அழகான லோகோ உருவாகின்றது. இது போல் அழகான லோகோக்கள் மேற்கண்ட வகைகளில் எதைத் திறந்தாலும் செய்ய முடியும். வானமே எல்லை!
குறிப்பு: இந்த லோகோவுக்கு 4 அடுக்குகள் (4 Layers) இருப்பதைப் பாருங்கள்!
படம் கிடைக்கவில்லை
- அதை ஒரே அடுக்காக மாற்றினால் தான் அசைபடம் செய்ய முடியும். சில லோகோக்கள் ஒரே லேயரிலேயே வந்து விடலாம். அப்படி இருந்தால் 4,5 ஆகிய படிகள் தேவையில்லை! இந்த மெனுவின் மூலம் மொத்தம் இருக்கும் 4 அடுக்குகளையும் ஒரே அடுக்காக ஆக்க இயலும். Image->Flatten Image
படம் கிடைக்கவில்லை
- ஒரே அடுக்காக மாறியதைக் கண்ணுறுங்கள்!
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்...
- இனி நம் அசைபட வித்தையைத் துவங்கலாம். Script-Fu -> Animators -> Selection to AnimImage என்னும் தெரிவைக் கீழ்க்காணும் படத்தில் உள்ளது போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்து வரும் சாளரத்தில் Ok கொடுத்து முன்னேறுங்கள். Number of Copies : 10 இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்து நம் GIMPஇல் நிறுவப்பட்டுள்ள அனைத்து விளைவு செருகிகள் (Effect Plug-ins) பட்டியலும் காட்டப்படும். அதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பதன் மூலம் நம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். நான் தேர்ந்தெடுத்தது Plug-in-GFlare எனப்படுவதாகும். கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுத்து Apply Varying என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
தொடர்வோம்...
- அடுத்ததாக வரும் சாளரம் கீழ்க்கண்டவாறு இருக்கும். இது நம் அசைபடத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் படமாகும்!
அதில் இரண்டு பட்டைகள் (Tab) இருப்பதைப் பாருங்கள். அதில் Selector பட்டையில் Bright Star என்பதைத் தேர்ந்தெடுத்து உள்ளேன்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக அந்த Bright Star விளைவு படத்தின் எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுங்கள். Settings பட்டைக்குச் சென்று கருப்பு வட்டமிட்ட இடத்தில் சொடுக்கினால் போதுமானது.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக வரும் சாளரத்தில் Continue அழுத்தி முன்னேறுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- அடுத்ததாக பழைய சாளரம் போலவே மீண்டும் திறக்கும். இது அசைபடத்தின் இறுதியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் படமாகும்.
இதில் கீழ்க்கண்டவாறு கருப்பு வட்டத்தில் காட்டப் பட்ட இடத்தில் சொடுக்குங்கள். Bright Star விளைவு அந்த இடத்தில் வந்து விடும். இதன் மூலம், Bright Star விளைவு எழுத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வருமாறு செய்திருக்கின்றோம். இடைப்பட்ட படங்களை மென்பொருளே பார்த்துக் கொள்கின்றது.
படம் கிடைக்கவில்லை
- அடுத்து வரும் சாளரத்தில் மீதிப் படங்களை மென்பொருளே வரைவதற்கு Continue அழுத்தி முன்னேறுங்கள்.
படம் கிடைக்கவில்லை
- இப்போது 10 அடுக்குகளுடன், அழகான அசைபடத்துக்குத் தோதாய் புதிய படம் ஒன்று உருவாகியிருக்கும்.
படம் கிடைக்கவில்லை
இதை வழக்கம் போல் File -> Save as -> Gif கோப்பாக சேமித்தால் நமக்குக் கீழ்க்கண்டவாறு அசைபடம் உருவாகியிருக்கும்.
படம் கிடைக்கவில்லை
நீங்களும் முயற்சி செய்து சொல்லுங்களேன். அடுத்த பாடத்துக்குச் செல்வோம் விரைவில்!
29 ஆகஸ்ட் 2007
ஆஹா அருமை! தமிழ் கொண்டு வருவது மிக எளிது தான் ஐயா. GIMP மட்டுமல்ல இன்னும் பல வரைகலை மென்பொருட்களில் ஒருங்குறி இன்னும் சரிப்பட்டு வரவில்லை. எனவே tab/tam/tscii என்னும் எந்த ஒரு முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு (http://www.tamilnation.org/digital/tamil_fonts_software.htm) நிறைய தமிழ் எழுத்துருக்கள் இருக்கின்றன. ஒருங்குறியிலிருந்து இந்த எழுத்துருக்களுக்கு மாற்றுவதும் எளிதே. http://www.suratha.com/uni2tsc.htm இது ஒருங்குறியிலிருந்து tscii எழுத்துருவுக்கு மாற்ற. http://www.suratha.com/uni2tab.htm இது ஒருங்குறியிலிருந்து tab எழுத்துருவுக்கு மாற்ற. இவ்வாறு tab/tscii எழுத்துருவுக்கு மாற்றிக் கொண்டு எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து அசைபடம் செய்யலாம் ஐயா. அல்லது ஏற்கனவே tscii எழுத்துரு இருந்தால், கீமேன் தமிழா வில் alt+3 உபயோகித்து நேரடியாகவும் உள்ளீடு செய்யலாம்.
30 ஆகஸ்ட் 2007
படம் கிடைக்கவில்லை
6 செப்டம்பர் 2007
சரி. இப்போது கண்ணடிக்கத் துவங்குவோமா?! கண்ணடிக்க வைப்பது மிக எளிதான ஒன்றாகும். எனவே 7 படிகளில் அதை முடித்து விடலாம். படி: 1 முதலில் படத்தில் காட்டியிருப்பது போல் ஒரு மயிலின் (உண்மையான மயில் தாங்க!) படத்தை எடுத்துக் கொள்வோம். அதை GIMP உள்ளே கொண்டு வருவது எப்படி என்று தெரியும் தானே?
படம் கிடைக்கவில்லை
படி: 2 அடுக்குகள் சட்டத்தில் (Layer Window) (கண்ட்ரோல் L அழுத்தினால் தெரியும்) , மயில் இருக்கும் அடுக்கினை வலது மவுஸ் கிளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு தோன்றும். அதில் அந்த அடுக்கைப் படி எடுத்துக் கொள்ளுங்கள். (Duplicate Layer)
படம் கிடைக்கவில்லை
படி: 3 அடுத்ததாக நாம் இப்போது படி எடுத்த அடுக்கிலும் மயில் படம் இருக்கக் காணலாம். ஒரு தூரிகையை (Brush) எடுத்து முன்புல வண்ணத்தை (Foreground Colour) லேசானதாக மாற்றிக் கொள்ளுங்கள். காண்க கீழே படம்.
படம் கிடைக்கவில்லை
படி: 4 இப்போது புதிதாய்ப் படி எடுத்த அடுக்கில் கண்ணைப் பாதி மூடி இருக்குமாறு படத்தில் காட்டியுள்ள மாதிரி லேசாக வரையுங்கள்.
படம் கிடைக்கவில்லை
தொடர்கின்றேன்.
படி: 5 இனி இரண்டாவது அடுக்கை மீண்டும் இன்னொரு படி எடுத்துக் கொள்ளுங்கள் முன்பு செய்தது போலவே! இதன் மூலம் பாதிக் கண்கள் மூடிய இன்னொரு அடுக்கு தயாராக இருக்கும். அதில் மீதிக் கண்களையும் அதே தூரிகை கொண்டு கீழ்க்கண்டவாறு வரையுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி : 6 இப்போது வரை கண்ணைத் திறந்து கொண்டிருக்கும் ஒரு மயில் கண்ணை மூடுவது வரை செய்து விட்டோம். இனி மீண்டும் கண்ணைத் திறக்க வேண்டும் அல்லவா? அதற்காக இரண்டாம் அடுக்கினை (பாதிக் கண்கள் திறந்தது போல்! ;) ) இன்னொரு முறை படி எடுத்து அதை கீழ்க்கண்ட Shift Raise பட்டனைச் சொடுக்கி முதல் அடுக்காக வரச்செய்யுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி: 7 இப்போது முழுதும் கண் திறந்த பழைய கடைசி அடுக்கை ஒரு படி எடுத்து அதை முதல் அடுக்காகக் கீழ்க்கண்டவாறு கொண்டு வந்து விடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அதாவது கண் திறந்தது -> பாதி மூடியது -> முழுதும் மூடியது -> பாதி திறந்தது -> முழுதும் திறந்தது. இந்த வரிசையில் இப்போது அடுக்குகள் இருக்கின்றன. இனி இதை அசைபடமாகச் சேமித்தால் கீழ்க்கண்டவாறு மயில் உங்களைப் பார்த்துக் கண்ணடிக்கும்!
படம் கிடைக்கவில்லை
இவ்வாறு ஒரு படத்தில் சின்னச் சின்ன அசைவுகள் செய்வதன் மூலம் அழகான வித்தியாசமான அசைபடங்கள் உருவாக்கலாம். நீங்களும் முயற்சியுங்களேன்!
படம் கிடைக்கவில்லை
இது உங்கள் படத்தில் இருந்து நான் எடுத்து செய்தது.
இதோ அதே வழிமுறையில் செய்த அசைபடம் தான் இதுவும். ஆனால் இதன் கோப்பு அளவு 20 கிலோ பைட்டுக்களே. காரணம் என்னவாக இருக்கும்? யோசியுங்கள். அடுத்த பாடத்தில் சொல்கின்றேன்.
படம் கிடைக்கவில்லை
7 செப்டம்பர் 2007
ஒரு சின்ன சூட்சுமம் தான் காகிதன்! அதாவது எல்லா அடுக்குகளிலும் நீங்கள் பின்புலத்திலிருந்து மலரின் எல்லா இதழ்களையும் படி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகின்றீர்கள். நான் படியெடுக்கவே இல்லை. அது தான் காரணம். வெள்ளைப் பின்புலம் ஒரே அடுக்கு தான். ஒவ்வொரு இதழும் ஒரே அடுக்கு தான். அந்தக் கோப்பை இணைத்திருக்கின்றேன். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் படங்களை இந்த முறையில் மிகக் குறைந்த கோப்பு அளவில் சேமிக்கலாம். ஆனால் அசைபடமாக சேமிக்கும் போது மட்டும், கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுத்துக் கொண்டு சேமிக்க வேண்டும். அதாவது அடுக்குகளை சட்டங்களாக ஒன்று ஒன்றாய் காட்டாமல், ஒன்றன் மேல் ஒன்றாய் காட்டுமாறு (Cumulative) செய்ய வேண்டும்.
படம் கிடைக்கவில்லை
அசைபடம் உருவாக உபயோகித்த கோப்பு இது தான்! http://www.diamondcrackers.com/gif/flower.xcf
16 செப்டம்பர் 2007
படம் கிடைக்கவில்லை
பரஞ்சோதி மட்டும் தான் குதிரையில் போவாரா? நாம் அவரை எதிர்த்து சைக்கிளில் போவோம்! அடுத்து நாம் கற்றுக் கொள்ளப் போவது இது போன்ற படங்களை எவ்வாறு உருவாக்குவது என்று. அனைவரும் தயாரா?
ஆஹா. நன்றி பெருமாள் ஐயா. நாங்கள் இங்கே பால பாடம் தான் படித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் உருவாக்குவது இப்போதைக்கு 2 பரிமாண அசைபடங்கள் மட்டுமே. அடிப்படையை நன்கு கற்றுக் கொண்டால் அடுத்த படியான முப்பரிமாண அசைபடமும் எளிதே. அதற்கு மிக உன்னதமானதும், பல வசதிகள் உடையதும், பல ஹாலிவுட் படங்களில் உபயோகப்படுத்தப்படுவதும், திறந்த மூல நிரலியுமான Blender (http://www.blender.org) என்னும் மென்பொருள் சுயமாகப் படித்து வருகின்றேன் ஐயா. அனைத்தும் ஒரு ஆர்வத்தினால் தான்!
படம் கிடைக்கவில்லை
மென்பொருளில் வடிவமைக்கப்படும் முகம்! :)
1 அக்டோபர் 2007
இதுவரை நாம் ஒரே ஒரு பொருளை நகர்த்துவதையோ அல்லது ஒரே படத்திலேயே பல கண்கவர் மாற்றங்கள் செய்தோ அசைபடம் உருவாக்கிக்கொண்டிருந்தோம். இனி அடுத்த கட்டமாக ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வெவ்வேறு விதமாய் நகர வைப்பது எப்படி என்று காண்போம். இது பயின்று பயிற்சி பெற்று முன்னேறி விட்டால் இரு பரிமாண அசைபட வரைகலையில் சிறப்புப் பெற்றவராகி விடுவோம். வாருங்கள் ஒரு இயக்குநர் ஆவோம்! இந்தப் படியில் கற்பனையும், கலைநயமும் மிக முக்கியமாகத் தேவையாகும். நாம் இப்போது காணும் இந்தப் படத்தில் இரு வளையங்கள் (பொருட்கள் - Objects) இருக்கும். ஒன்று இடமிருந்து வலமாகவும், இன்னொன்று வலமிருந்து இடமாகவும் நகரச் செய்ய வேண்டும். இது தான் நம் அசைபட முயற்சி. அதை மொத்தம் 18 படிகளில் செய்து முடிப்போம். அட! இதைச் செய்ய 18 படிகளா? என்று மலைக்காதீர்கள். மிக எளிதான படிகள் தான்! இந்த அசைபடம் உருவாக்க GIMP மற்றும் GAP (Gimp Animation Package) இந்த இரண்டும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இப்போது ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தேவைப்படுவதால், மொத்த அசைபடத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் (Frame) ஒவ்வொரு GIMP கோப்பாகச் சேமிக்க வேண்டும். அதற்குத்தான் GAP உதவுகின்றது. நாம் எடுத்துக் கொண்ட அசைபடத்தில் மொத்தம் 21 சட்டங்கள். முன்பு வரை 21 சட்டங்களையும் ஒரே கோப்பில் வைத்து (21 அடுக்குகளாக - 21 Layers) நாம் அசைபடம் உருவாக்கினோம். இனி அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் ஒரு அடுக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களைச் சேமிக்க முடியாது. ஆக, ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒவ்வொரு கோப்பு. ஒவ்வொரு கோப்பிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகள் (பொருட்கள்). கடைசியில் அனைத்துச் சட்டங்களையும் ஒன்றிணைத்து அசைபடம் உருவாக்கல். அவ்வளவு தான். குழப்பமாக இருக்கின்றதா? உதாரணம் பார்த்தால் எளிதில் புரியும். படி - 1 முதலில் வழக்கம் போல் GIMP ஐத் திறந்து புதிதாக ஒரு கோப்பை உருவாக்குங்கள். (150 x 150 அளவில்). நம் அசைபட உருவாக்கத்துக்கென்று ஒரு அடைவினை (Directory) உங்கள் கணினியின் வன் தட்டில் உருவாக்கிக் கொள்ளுங்கள். படத்தில் கண்டவாறு பெயர் கொடுத்து புதிதாக உருவான அடைவினில் சேமித்துக் கொள்ளுங்கள். கோப்பின் பெயர் Frame00001.xcf என்றிருப்பதைக் கவனியுங்கள். நாம் முதல் சட்டத்தை இப்போது உருவாக்குகின்றோம்!
படம் கிடைக்கவில்லை
படி 2:
இந்தச் சட்டம் தான் நாம் படங்காட்டப் போகும் திரை!
இனி நடிகர்களை உருவாக்குவோம். ;)
கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். அதில் காட்டியுள்ளவாறு source.xcf என்ற பெயரில் ஒரு கோப்பை உருவாக்குங்கள். அதில் இரண்டு வளையங்களை இரண்டு அடுக்குகளில் உருவாக்கியிருக்கிறோம். அதற்கு above, below என்று பெயரும் சூட்டியிருக்கின்றேன். இரண்டுமே ஒளியூடுருவும் அடுக்குகள் ஆகும். (transparent). ஆக, இப்போது இரண்டு கோப்புகள் திறந்த வண்ணம் இருக்கின்றன. ஒன்று frame00001.xcf (அதாவது திரை - destination) இன்னொன்று நடிகர்கள்/பொருட்கள் கொண்ட கோப்பு source.xcf.
படம் கிடைக்கவில்லை
படி - 3 இப்போது கீழ்க்கண்ட படத்தில் காட்டியவாறு frame00001.xcf என்ற சாளரத்தில் இருந்து video->duplicate frames என்ற வசதியைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி - 4 வரும் சாளரத்தில் நமக்கு இந்த அசைபடத்தில் மொத்தம் எத்தனை சட்டங்கள் தேவையோ அத்தனை எண்ணிக்கையைக் கொடுத்து சேமியுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி - 5 இதன் மூலம் நாம் உருவாக்கிய அடைவில் கீழ்க்கண்டவாறு கோப்புகள் உருவானதைக் காணலாம். ஒவ்வொரு சட்டத்துக்கும் ஒவ்வொரு கோப்பு!
படம் கிடைக்கவில்லை
படி - 6 அடுத்ததாக படத்தில் கண்டவாறு video -> Move path என்னும் வசதியைத் தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் நாம் உருவாக்கிய நடிகர்களை எங்கிருந்து எந்தப் பாதையில் நகர வைக்கப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கப் போகின்றோம்.
படம் கிடைக்கவில்லை
படி - 7 இது ஒரு மிக முக்கியமான படியாகும். வரும் சட்டத்தில் இருக்கும் பல பகுதிகள் பற்றிக் கொஞ்சம் ஊன்றிப் பாருங்கள். Copy - moving source layer(s) into frames - இந்தப் பகுதியின் மூலம் எந்த நடிகர்/பொருளை தற்போது ஆட/அசைய வைக்கப் போகின்றோம் என்று முடிவு செய்கின்றோம். Current Point [ 1 of 1] என்று இருக்கும் பகுதியின் மூலம் ஆரம்பத்தில் எந்த இடத்தில் பொருள் இருக்க வேண்டும். கடைசி சட்டத்தில் பொருள் எங்கே இருக்கின்றது என்று புள்ளிகளின் மூலம் குறிக்க இருக்கின்றோம் என்று அறிந்து கொள்ளுங்கள். அதில் x,y என்னும் அளவைகளும் இருக்கின்றது. Preview - அதாவது முன்பார்வை. நம் திரையில் படம் எப்படித் தெரியவரும் என்பதைக் காட்டும் இடம் ஆகும். இதைக் காண instant apply என்னும் தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Edit Control Points - இதன் மூலம் ஒவ்வொரு புள்ளியையும் நம்மால் மாற்றவோ அழிக்கவோ உருவாக்கவோ முடியும்.
படம் கிடைக்கவில்லை
படி - 8 அடுத்ததாக முதல் நடிகரைக் களமிறக்குவோம்! Source Image/Layer என்பதில் நாம் திறந்திருக்கும் மற்ற கோப்புக்கள் தெரிய வரும். அதில் இருக்கும் எந்த ஒரு அடுக்கையும் நம் திரையில் காட்ட இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்கள் திறந்திருந்தால் அனைத்துமே இதில் தெரியவரும். அதில் நம் above என்னும் அடுக்கைத் தேர்ந்தெடுங்கள். Step mode: none. இது மிக மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு முறையும் இதைத் தேர்ந்தெடுத்தல் அவசியமாகும். default ஆக loop என்பது இருக்கும். Loop தேர்ந்தெடுத்தால், source.xcf இலுள்ள ஒவ்வொரு அடுக்கையும் ஒவ்வொரு சட்டத்தில் காட்டும். நமக்கு இப்போது காட்ட வேண்டியது ஒரே நடிகர் மட்டுமே. எனவே அதை none என்று தேர்ந்தெடுங்கள். instant apply ஐத் தேர்ந்தெடுத்தால் நம் நடிகர் திரையில் தோன்றுவார்! x அளவை 0வும் y அளவை 0வும் இருப்பதைக் காணுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி - 9 இப்போது நம் நடிகரை இடது புறம் மறைந்து நிற்கச் சொல்வோம்! அங்கிருந்து வலப்பக்கமாய் அவர் ஓடி வரட்டும்! அதற்கு நாம் செய்ய வேண்டியது x அளவையை -110 என்று ஆக்குவது தான். நேரடியாக எண்ணை இட்டோ அல்லது பக்கத்திலிருக்கும் அம்புக்குறிகளை உபயோகித்தோ செய்ய இயலும்.
படம் கிடைக்கவில்லை
படி - 10 இதுவரை முதல் சட்டத்தில் நடிகர் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்தி விட்டோம். இனி அவரை வலப்புறமாக ஓட வைப்போம். இது முக்கியமான கட்டம். அடுத்ததாக அவரை நகர வைக்க ஒரு கட்டுப்பாட்டுப் புள்ளியைத் தேர்ந்தெடுப்போம். (Add Control point)
படம் கிடைக்கவில்லை
படி - 11 அந்த பொத்தானை அழுத்தியதும் ஒரு கட்டுப்பாட்டுப் புள்ளி அதிகரித்ததைக் காணுங்கள். (Current point - 2 of 2) என்று. இப்போது நாம் 2 வது புள்ளியில் இருக்கிறோம். இப்போது நம் நடிகரை x அளவை 110 ல் வலது புறம் ஓடி வந்து மறையுமாறு செய்வோம்! அதாவது முதல் புள்ளியில் x = -110, அடுத்த புள்ளியில் x அளவை = 110. அவ்வளவு தான். சரி என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி - 12 இது வரை ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டோம். இனி மற்றொருவர். இப்போது கீழ்க்கண்ட படத்தில் கண்டவாறு below என்னும் அடுக்கை source.xcf கோப்பில் இருந்து தேர்ந்தெடுங்கள். step mode - none என்று இருப்பதையும் மீண்டும் கட்டுப்பாட்டுப் புள்ளி 1 of 1 என்று ஆகிவிட்டதையும் காணுங்கள்!
படம் கிடைக்கவில்லை
படம் - 13 இனி இந்த நடிகரை இடது புறமிருந்து வலது புறம் ஓட வைப்போம்! அதற்கு முதல் x அளவை 110 என்று இடுவோம்!
படம் கிடைக்கவில்லை
படம் - 14 இப்போது முன்பு முதல் நடிகருக்குச் செய்தது போல் ஒரு கட்டுப்பாட்டுப் புள்ளியை அதிகரிக்க add control point பட்டனை அழுத்தி இரண்டாவது புள்ளிக்கு x அளவை - 110 என்று இடுவோம். இதனால் இந்த நடிகர் ஆரம்பத்தில் +110 இலிருந்து இறுதியில் -110 வரை செல்வார்!
படம் கிடைக்கவில்லை
படி - 15 அப்பாடி. இரு நடிகர்களையும் திரையில் தனித்தனியே வெவ்வேறு அசைவுகளுடன் தேர்ந்தெடுத்தாகிவிட்டது! இனி அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே கோப்பாக மாற்றுவோம். அதற்கு கீழ்க்கண்டவாறு video->Frames to Image என்னும் வசதியைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படி - 16 கீழ்க்கண்டவாறு வரும் சாளரத்தில் சட்டம் நகரும் வேகத்தை மட்டும் 100 ms என்று தேர்ந்தெடுத்து சேமியுங்கள்.
படம் கிடைக்கவில்லை
படம் - 17 இப்போது கீழ்க்கண்டவாறு 21 சட்டங்களையும் ஒன்றிணைத்து அழகாய் ஒரு கோப்பு உருவாகி இருக்கும்!
படம் கிடைக்கவில்லை
பதினெட்டாம் படி! இப்போது கிடைத்த கோப்பை film1.gif என்று பெயரிட்டு வழக்கம் போல் சேமியுங்கள்.
படம் கிடைக்கவில்லை
பதினெட்டுப் படிகளும் ஏறி முடித்தால் நாம் காணும் தரிசனம் இதோ!
படம் கிடைக்கவில்லை
என்ன இது? இவ்வளவு சாதாரணமான ஒரு அசைபடத்துக்கு 18 படி ஏறி வரவேண்டுமா என்று நினைக்காதீர்கள். ஓரிரு படம் உருவாக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் குருசாமியாகி விடலாம். :)
இதோ இதில் உருவாக்கிய சில அசைபடங்கள். (வர தாமதம் ஆகலாம்!)
படம் கிடைக்கவில்லை
19 அக்டோபர் 2007
இதோ இந்தக் கலையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு அசைபட லோகோ!
படம் கிடைக்கவில்லை
24 அக்டோபர் 2010
படங்கள் அனைத்தும் 256 வண்ணங்களில் இருக்கின்றன. gif வகைப் படங்கள் பெரும்பாலும் 256 வண்ணங்களிலேயே சேமிக்கப்படும்.
GIF™ stands for Graphics Interchange Format. It is a file format with good, lossless compression for images with low color depth (up to 256 different colors per image). Since GIF was developed, a new format called Portable Network Graphics (PNG) has been developed, which is better than GIF in all respects, with the exception of animations and some rarely-used features.
GIF was introduced by CompuServe in 1987. It became popular mostly because of its efficient, LZW compression. The size of the image files required clearly less disk space than other usual graphics formats of the time, such as PCX or MacPaint. Even large images could be transmitted in a reasonable time, even with slow modems. In addition, the open licensing policy of CompuServe made it possible for any programmer to implement the GIF format for his own applications free of charge, as long as the CompuServe copyright notice was attached to them.
Colors in GIF are stored in a color table which can hold up to 256 different entries, chosen from 16.7 million different color values. When the image format was introduced, this was not a much of a limitation, since only a few people had hardware which could display more colors than that. For typical drawings, cartoons, black-and-white photographs and similar uses, 256 colors are quite sufficient as a rule, even today. For more complex images, such as color photographs, however, a huge loss of quality is apparent, which is why the format is not considered to be suitable for those purposes.
One color entry in the palette can be defined to be transparent. With transparency, the GIF image can look like it is non-rectangular in shape. However, semi-transparency, as in PNG, is not possible. A pixel can only be either entirely visible or completely transparent.
The first version of GIF was 87a. In 1989, CompuServe published an expanded version, called 89a. Among other things, this made it possible to save several images in one GIF file, which is especially used for simple animation. The version number can be distinguished from the first six bytes of a GIF file. Interpreted as ASCII symbols, they are “GIF87a” or “GIF89a”.
GNU இது தான் gif வகைக் கோப்பின் விரிவான விளக்கமாகும். அசைபடமாகச் சேமிக்க வேண்டுமாயின் 256 வண்ணங்களில் நமது படம் இருத்தல் வேண்டும். நம் கண்களால் 256 வண்ணங்களைத் தரம்பிரிப்பது முடியாத காரியமே. எனவே படங்கள் 256 வண்ணங்களுடன் இருந்தால் கூட நமக்கு வித்தியாசம் தெரியாது. ஆனால் புகைப்படங்களாக அச்சடிக்க அதிக வண்ணங்கள் தேவை. (16.7 மில்லியன்) ஒன்றும் கவலையில்லை, ஜிம்ப்பின் dithering என்னும் வசதியின் மூலம் அதிக வண்ணங்களாக இருப்பதை நம் கண்களால் கண்டறியா வண்ணம் 256 வண்ணங்களுக்குக் கொண்டு வர இயலும். அதற்கு Image -> Mode -> Indexed -> Generate Optimum Palette என்னும் வசதியைத் தேர்ந்தெடுங்கள். அதில் அதிகபட்ச வண்ணங்கள் 256 என்றிருத்தல் வேண்டும். இப்போது convert என்னும் பொத்தானை அழுத்தி படத்தை 256 வண்ணங்களுக்குச் சுருக்கிக் கொள்ளுங்கள். இனி அசைபடத்தை உருவாக்குங்கள். அசத்தலாக இருக்கும்.