எக்செல்லில் நிபந்தனை வடிவமைப்பு (Conditional Formatting)
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 22 ஜனவரி 2008 – 23 ஜனவரி 2008
உண்டே அருள்! தேதியை வைத்துத் தான் என்றால் மிக எளிதாகச் செய்யலாம்! Conditional Formatting என்று ஒரு வசதி இருக்கின்றது மின்விரிதாளில். அது பற்றி விரைவில் விளக்குகின்றேன், தகுந்த உதாரணங்களுடன்.
இங்கு சில படங்களை வரிசைக்கிரமமாய் இணைத்துள்ளேன் உங்களுக்கு அது உதவும் என்று நம்புகின்றேன்!







இதன் மூலம், விசா முடிந்தவைகள் எவை என்பது சிகப்பு நிறத்திலும், இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகும் விசா எவை என்பது மஞ்சள் நிறத்திலும் காட்டப்படுகின்றன! சந்தேகம் இருப்பின் தயங்காது கேளுங்கள். நன்றி.
23 ஜனவரி 2008
ஏன்? எக்சல் 2007 வேறு மாதிரி இருக்கின்றதா என்ன? அதுவாகவே தினமும் மாறிக் கொள்ளும் அருள். அதனால் தான் முதல் படத்தில் இருக்கும் F14 என்னும் செல்லில் =today() என்னும் பங்ஷன் உபயோகித்துள்ளேன்! அதில் நீங்கள் எந்தத் தேதியும் இடவும் செய்யலாம்.