GIMPல் கலக்குவோம் வாருங்கள்!
முத்தமிழ் மன்றத்தில் எழுதியது · 13 பிப்ரவரி 2008 – 4 ஜூலை 2009
அன்பு நண்பர்களே, கணினி வந்தவுடன் பல்வேறு கோணங்களில் மேன்மையடைந்த துறைகளில் புகைப்படத்துறை முதன்மையானது எனலாம். எத்தனை கருவிகள்? எத்தனை மென்பொருட்கள்? முன்பெல்லாம் ஒரு புகைப்படச் சுருள் வாங்கி, அதில் 36 படங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், எத்தனை விழுந்திருக்குமோ என்ற ஐயத்திலேயே ஓ(ட்)டிய காலங்கள் உண்டு. இப்போதோ, உடனுக்குடன் பார்த்துக் கொள்வதிலிருந்து, சரியாக விழாத படங்களைச் சரிப்படுத்துவதிலிருந்து, இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவது, இருக்கும் பொருளை மறைப்பது, இன்னும் பல்வேறு ஜாலங்களைக் காட்ட வல்ல கருவிகளும், மென்பொருட்களும் பல இருக்கின்றன! பார்த்துப் பார்த்து நேர்த்தியாக இருக்கின்றது என்று நாம் கருதும் பல படங்கள் மென்பொருட்களின் மூலம் திருத்தப்பட்டவையாகவே இருக்கும். இனி அத்தகைய ஒரு மென்பொருளின் மூலம், படங்களை என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று காண்போம். ஒரு பக்கம் சசிக்குமார், எவ்வாறு படம் எடுப்பது என்று சொல்லித் தருகின்றார். மறுபுறம் நாம் அதை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
- கட்டம் கட்டிக் கலக்குவோம்!
நம்முடைய முதல் வித்தையாக படத்துக்கு எப்படி அழகிய கட்டமிட்டு (Frame) படத்தை மேம்படுத்துவது என்று காண்போம். முதலில் GIMP ஐத் திறந்து, File->Open மூலமாக ஏதேனும் ஒரு படத்தைத் திறந்து கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக, நாம் கட்டம் வரைவதற்கு வசதியாக படத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு பகுதியைத் தேர்ந்தெடுங்கள். நான் எண்ணிட்ட வாறு 1 வது எண்ணிட்ட கருவியைத் தேர்ந்தெடுத்து, 2 வது எண்ணிட்ட இடத்திலிருந்து 3 வது எண்ணிட்ட இடம் வரை இடது கிளிக் செய்து இழுத்து (drag) செய்திருக்கின்றேன்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக படத்தில் காட்டியுள்ளவாறு விரைவு முகமூடி (Quick Mask) யைத் தேர்ந்தெடுங்கள். அது படத்தில் இடது மூலையில் சிறியதாக இருக்கும்.
படம் கிடைக்கவில்லை
அதைத் தேர்ந்தெடுத்ததும், படத்தில் ஒரு சிவப்பு நிறக் கட்டம் உருவாகும். இந்தக் கட்டத்தைத் தான் நமக்குத் தகுந்தாற் போல் நாம் மாற்றப் போகின்றோம்.
இனி, படத்தில் காட்டியுள்ளவாறு Filters->Blur->Gaussian Blur என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அதில் மதிப்புக்களை 50,50 என்று இட்டு Ok தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
நமது முகமூடிக் கட்டம் இவ்வாறு ஆவதைக் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
இப்போது முகமூடியை நீக்கி விடுங்கள்! சிவப்பு நிறம் போய்விடுவதையும், மஞ்சள் நிறத்தில் ஒரு கட்டமும் (மொத்த படத்திற்கும்), குறுகுறுவென்று ஓடிக் கொண்டிருக்கும் மற்றொரு கட்டத்தையும் காணலாம். (தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் குறித்துக் காட்ட)
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக Select->Invert என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் முகமூடி மூலம் மூடப்பட்ட பகுதி தவிர மற்ற இடங்களைத் (அதாவது நமது கட்டம் போடும் பகுதியை) தேர்ந்தெடுக்கின்றோம்.
படம் கிடைக்கவில்லை
உடனே கட்டம் போட வேண்டிய பகுதியைச் சுற்றி குறுகுறுவென்று ஓடக் காணலாம்.
படம் கிடைக்கவில்லை
இனி, கட்டம் போடத் தேவையான நிறத்தைத் (ஊதாவை நான் தேர்ந்தெடுத்தேன், அந்தச் சிறுவனின் சட்டைக்குத் தகுந்தாற்போல்) முதன்மை நிறமாகத் தேர்ந்தெடுத்து, Edit->Fill with FG color மூலம் கட்டத்தை நிரப்புங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக Select->None என்பதைத் தேர்ந்தெடுத்து, படத்தை முழுமை செய்யவும்.
படம் கிடைக்கவில்லை
இதோ, அழகாக கட்டம் கட்டிய படம் தயார்.
படம் கிடைக்கவில்லை
இதோ வித்தியாசமாக கட்டம் கட்டிய இன்னும் இரு படங்கள். இவ்வாறு பல விதங்களில் செய்யலாம். செவ்வகமாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. படத்தின் எந்தப் பகுதி நமக்குத் தேவையோ அதை மட்டும் முகமூடி இட்டு விட்டு, மற்ற பகுதிகளை என்ன வேண்டுமாலும் செய்து (Filters மூலமாக) பின், நிறத்தையோ, வண்ணக் கலவையையோ (Gradients) நிரப்புவதன் மூலம் படத்தை மேம்படுத்தலாம்!
2 படங்கள் கிடைக்கவில்லை
நீங்களும் முயற்சி செய்து இவ்வாறு சில படங்களைத் தாருங்கள். அடுத்த பகுதிக்குச் செல்வோம்.
ஆஹா. அனைவரும் அசத்துறீங்களே!
கண்கள் நிறையும் படங்கள் ஒவ்வொன்றும்.
அப்படியானால் அடுத்த பாடத்துக்குச் செல்லலாமா?
படம் கிடைக்கவில்லை
இப்படி இருக்கும் படத்தை
படம் கிடைக்கவில்லை
இப்படி ஆக்குவது எப்படி என்று காண்போம். :)
- முன்புலத்தை முன்னுக்குக் கொண்டு வருவோம்!
சில படங்கள் நாம் எடுத்ததும், நாம் எதை எடுத்தோமோ அதைத் தவிர பின்புலத்தில் தான் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும், கண்ணை உறுத்துவதாகவும் இருக்கக் காணலாம். இதனால் எதை கவனித்து (Focus) எடுத்தோமோ அதிலிருந்து காண்போரின் கவனம் திசை திரும்புவதாக அமையும். அவ்வாறன்றி, மிக அருகில் அந்தப் பொருளை/ஆளை எடுத்தது போல் (Macro shot/Close up shot) பின்புலம் சிதறித் தெரிய வைத்து விட்டோமேயானால், அனைவரின் கவனமும் நாம் எதில் கவனம் செலுத்த வைக்க நினைத்தோமோ அதை மட்டும் முன்னுக்குக் கொண்டு வரலாம். சரி அதை எப்படிச் செய்வது? அதற்கு நாம், எந்தப் பொருளை முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டால் போதும். இது கொஞ்சம் நுணுக்கமான வேலை தான். சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். மவுசை நம் கைவசப்படுத்தி, கவனத்துடன், கை நடுங்காமல் இதைச் செய்வதற்கு நிரம்ப பயிற்சி வேண்டும். பயிற்சி எடுக்க எடுக்க வேகமும், நேர்த்தியும் அதிகமாகும். இப்போது, ஒரு படத்தில் நமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுக்க பல கருவிகள் இருக்கின்றன. நாம் போன தடவை பார்த்தது போல், செவ்வகமாகவோ, நீள் வட்டமாகவோ தேர்ந்தெடுக்க முதலிரண்டு கருவிகள் உதவுகின்றன. ஆனால், அவை இங்கு உதவாது. நமக்கு வேறு வடிவமுள்ள பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கலாம். அதற்கு GIMP ல் நமது தேவைக்குத் தக்கவாறு ஐந்து விதமான கருவிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்க் கையாளலாம். எந்தக் கருவி மூலமாகவும் இதைச் சாதிக்க இயலும். அதை வட்டமிட்டுக் காட்டியிருக்கின்றேன். அதே சமயத்தில் நாம் தேர்ந்தெடுக்கப் போகும் கத்தரிக்கோலை அம்புக்குறியிட்டுக் காட்டியிருக்கின்றேன். ஆரம்ப பாடத்தில் இருப்போருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற கருவிகளிலும் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்று பின்னர் பார்க்கலாம்.
படம் கிடைக்கவில்லை
இப்போது முதலில் கத்தரிக்கோலை எடுத்துக் கொள்வோம். சிறு வயதில் ஏதேனும் படத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எவ்வாறு கத்தரிப்போமோ அதே போல் தான் இதுவும். வடிவத்தின் ஏதேனும் ஒரு முனையில் இடது கிளிக் செய்து ஆரம்பிக்கலாம். அப்படியே கீழ்க்கண்ட படத்தில் காட்டியுள்ளது போல் ஒவ்வொரு முனையாக புள்ளி வைத்துக் கொண்டே வாருங்கள். வளைவுகளை அதுவாகவே வளைத்துக் கொள்ளுமாறு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், ஒவ்வொரு வளைவிலும் ஒரு புள்ளி வைத்தால் மிக நேர்த்தியாக வடிவம் தேர்ந்தெடுக்கப்படும்.
படம் கிடைக்கவில்லை
இப்படியே மொத்த வடிவத்தையும், புள்ளிகளால் வைத்துக் கொண்டே வந்து அதை முற்றுப் பெற வையுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அவ்வாறு மொத்த வடிவத்தையும் புள்ளிகளால் தேர்ந்தெடுத்த பின்னர், வடிவத்தின் உள்ளே இடது கிளிக் செய்தோ அல்லது Enter விசையை அழுத்தியோ வடிவத்தை நம் தேவைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு செய்ததும் கீழ்க்கண்டவாறு ஆகிவிடும்.
படம் கிடைக்கவில்லை
பின், நாம் முன் செய்தது போல் Select -> Invert செய்து நமக்கு எதை சிதற வைக்க வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுங்கள்!
படம் கிடைக்கவில்லை
பின்னர், Filters -> Blur -> Gaussian Blur தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
நம் தேவைக்குத் தக்கவாறு பின்புலத்தைச் சிதறடியுங்கள்.
படம் கிடைக்கவில்லை
இதோடு நாம் நினைத்த காரியத்தை முடித்து விட்டோம் தான். ஆனால், நாம் தேர்ந்தெடுத்த பகுதி கொஞ்சம் இருளில் இருப்பதாய்த் தெரிவதால், அதைச் சரி செய்யலாம்! மீண்டும் Select -> Invert தேர்ந்தெடுத்து, நமது முன்புலப் பொருளைத் தேர்ந்தெடுங்கள். கீழ்க்கண்டவாறு Colors -> Brightness-Contrast தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
நமக்குத் தக்கவாறு இரண்டு மாறிகளையும் மாற்றி அமையுங்கள்.
படம் கிடைக்கவில்லை
முன்புலப் பொருளை இன்னும் சற்றுத் தூக்கலாகக் காட்ட சிறிய நகாசு வேலை மட்டும் பாக்கி இருக்கின்றது. அது தான் கூர்மைப் படுத்துதல். ஏனெனில் பின்புலத்தைச் சிதறடித்து விட்டோம். முன்புலத்தைக் கூர்மைப்படுத்துவதால் அது இன்னும் சிறப்பாக வெளியே வரும்! அதற்கு Filters -> Enhance -> Sharpen என்னும் வசதியைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
தேவையான அளவு கூர்மையை அதில் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
இதோ முடிவுற்ற படம்.
படம் கிடைக்கவில்லை
அவசர அவசரமாய்ச் செய்ததால் நேர்த்தியாக வடிவத்தைத் தேர்ந்தெடுக்காததால் ஆங்காங்கே ஓட்டைகள் இருக்கின்றன! :)
2 படங்கள் கிடைக்கவில்லை
இரண்டு படங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணருங்கள். நீங்களும் சில படங்களை இவ்வாறு செய்யுங்களேன் பார்ப்போம்.
2 மார்ச் 2008
எந்த ஒரு வரைபட மென்பொருளுக்கும் மிக முக்கியமானது துல்லியமாகத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுப்பது தான். அதற்கென்று நம் மென்பொருளில் ஐந்து வகையான கருவிகள் இருக்கின்றது என்று கண்டோம். அதில் ஒரு கருவியை முன்பு எவ்வாறு உபயோகிப்பது என்றும் கண்டோம். இப்போது மற்றொரு கருவியை எவ்வாறு உபயோகிப்பது என்று காண்போம். நாம் பள்ளியில் பயிலும் போது ஒரு படத்தை வரைய எளிய முறையாக ஒரு மெல்லிய காகிதத்தை நாம் வரைய நினைக்கும் படத்தின் மீது வைத்து அதன் மேலேயே பென்சிலால் கோடு (Tracing) வரைந்திருப்போம். இப்போது காண்பதும் அதே முறை தான்! எப்படி என்று படத்துடன் விளக்க முயற்சிக்கின்றேன். இப்போது ஒரு படத்தைத் திறந்து கொள்வோம். அதில் நான் வட்டமிட்டுக் காட்டியிருக்கும் முன்புலத் தேர்வுக் கருவியைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தேர்ந்தெடுத்ததும் கீழே நிறைய வசதிகள் உண்டாவதையும் காணுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய படத்தினுள்ளே ஏதேனும் ஒரு பகுதியைக் கீழே காட்டியுள்ளவாறு வட்டமிடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
உடனே நமது படம் கீழ்க்கண்ட வாறு மாறிவிடும். பயந்து விடாதீர்கள்! இது தான் மேலே இருக்கும் மெல்லிய காகிதம்!
படம் கிடைக்கவில்லை
இனி நாம் அந்தப் படத்தின் மேல் தாராளமாய் தேவையான அளவுக்கு கோடுகள் இழுக்கலாம். தூரிகையின் அளவைக் கீழே காட்டியவாறு பெரிதாக்கவோ சிறிதாக்கவோ செய்து கொள்ளுங்கள். வரையும் பகுதி முதலில் கருப்பாகவும், பின்னர் மௌசை எடுத்ததும் தேவையான படமாகவும் மாறக் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
நாம் அவசரத்திலோ அல்லது தெரியாமலோ தேவையில்லாத பகுதியிலும் வரைந்து விட்டால் என்ன செய்வது?
படம் கிடைக்கவில்லை
அப்போது "Mark Background" என்றிருக்கும் வசதியைத் தேர்ந்தெடுத்து தவறாகத் தேர்ந்தெடுத்த பகுதியைச் சரி செய்யலாம்! இப்போது வரையும் நிறம் வெண்மையாகவும், மௌசை விடுவித்ததும் பழைய ஊதா நிறமாகவும் மாறக் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
சரி. நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய நிறமும் ஊதாவாக இருந்தால் எப்படி தேர்ந்தெடுக்க இயலும்? ஊதாவுடன் ஊதா மறைந்து விடுமல்லவா? அதற்கும் வழியுண்டு. கீழே காட்டியிருப்பது போல் பச்சை வண்ணமாக மாற்றிக் கொள்ளலாம். அப்புறம் Feather Edges என்ற வசதியும் தேர்ந்தெடுக்கலாம். அது நாம் தேர்ந்தெடுப்பதைக் கூர்மையாக ஆக்காமல், இறகால் கோடு கிழிப்பது போல் மென்மையாக்கும்! அதன் அளவையும் தேர்ந்தெடுக்க இயலும். 5 பிக்செல் போதுமானதாக இருக்கும்.
படம் கிடைக்கவில்லை
இதோ இப்போது நமக்குத் தேவையான பகுதியைச் சரியாக வரைந்து விட்டோமேயானால், Enter கீ தட்டி மொத்தத்தையும் தேர்ந்தெடுங்கள்!
படம் கிடைக்கவில்லை
இதோ நாம் நினைத்த வண்ணம் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்தாயிற்று! இதோடு விட்டு விடாமல், இன்னொரு வித்தையும் கற்றுக் கொள்வோம்! முதலில் Select -> Invert கொடுத்து இப்போது தேர்ந்தெடுத்ததை விட்டு மற்ற பகுதியைத் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
பின்னர் Filters -> Map -> Small Tiles தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அதில் வரும் சாளரத்தில் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுத்து வெளியே வாருங்கள். (மற்றும் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? அவை என்னென்ன செய்கின்றன என்று மாதிரிப் படத்தில் காணலாம்!)
படம் கிடைக்கவில்லை
இப்போது கீழ்க்கண்ட படம் அசத்தலாய் வந்திருக்கும்!
படம் கிடைக்கவில்லை
இன்னொரு வித்தையும் காண்போம்! Filters -> Map -> Small Tiles க்குப் பதிலாக Filters -> Map -> Fractal Trace தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
வரும் சாளரத்தில் நான் வட்டமிட்டிருக்கும் மதிப்புக்களை இடுங்கள்! மற்ற மதிப்புக்களால் என்னென்ன மாற்றமெல்லாம் நிகழ்கின்றது என்றும் காணுங்கள். Depth குறைவாக இருக்கும் போது தான் படம் அழகாய் வரும்.
படம் கிடைக்கவில்லை
இப்போது கொஞ்சம் முன்னொளிர்தன்மையையும், எதிரொளியையும் (Brightness & Contrast) மாற்றியதும் கீழ்க்கண்ட படம் வந்தது!
படம் கிடைக்கவில்லை
நீங்களும் முயற்சித்துச் சொல்லுங்கள். படங்களைக் காட்டுங்கள்!
4 மார்ச் 2008
இனி அடுத்த பாடத்துக்குச் செல்வோம். இப்போது இரண்டு வகைகளில் எப்படி ஒரு படத்தின் பகுதியைத் தேர்ந்தெடுப்பது என்று கண்டோம். இப்போது இன்னும் இரண்டு வகைகளில் எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஒன்று சேரக் காண்போம். ஒரு படத்தின் பெரும்பாலான பகுதியில் அடைத்திருக்கும் நிறத்தை மாற்ற நினைக்கின்றீர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட நிறத்தினை மாற்ற நினைக்கின்றீர்கள் என்றால் இந்த கருவிகள் மிகவும் உதவும். உதாரணமாக நம் முத்தமிழ்மன்ற முகப்புப் படத்தில் இருக்கும் பின்புல நீல நிறத்தை மாற்ற நினைக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை முதலில் நம் மென்பொருளுக்குள் கொண்டு வாருங்கள். (அதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் தானே?) பின்னர் கீழ்க்கண்ட நிறக்கலவை தேர்ந்தெடுக்கும் கருவியைத் தேர்ந்தெடுங்கள். இதற்கும் இதற்கு முந்திய கருவியான மாய மந்திரக் கோல் போன்று இருக்கும் (Magic Wand) கருவிக்கும் மிக மெல்லிய வித்தியாசமே உண்டு. எனவே தான் அவை இரண்டையும் சேர்த்தே பார்க்க இருக்கின்றோம். இந்தக் கருவி, படத்தில் எங்கேயெல்லாம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் படத்தையும் தேர்ந்தெடுக்கும். ஆனால், மாய மந்திரக் கோலோ, ஒரு குறிப்பிட்ட வரையப்பட்ட எல்லை வரையுள்ள படத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதியைத் தேர்ந்தெடுக்கும்.

தேர்ந்தெடுத்து விட்டீர்களா? இனி, கீழே இருக்கும் படத்தில் காட்டியுள்ளவாறு அதிகபட்ச நிற வேறுபாட்டைத் தேர்ந்தெடுங்கள். பார்க்க ஒரே நிறமாக இருப்பினும், படத்தின் ஒவ்வொரு புள்ளியும் ஒரு நிறக்கலவை எண் கொண்டிருக்கும். (RGB Code) உதாரணமாக (R-100,G-100,B-100) ம், (R-100,G-100,B-101) ம் கணினியைப் பொருத்தவரை வெவ்வேறு நிறங்களே! ஆனால், நம் சாதாரணக் கண்ணால் சத்தியமாகக் கண்டறிய இயலாது. எனவே இதில் 30+ என்று நிற வேறுபாட்டைத் தேர்ந்தெடுத்தால் 30% வட்டாரத்தில் இருக்கும் நிறக்கலவையைத் தேர்ந்தெடுக்கும். நான் 44% தேர்ந்தெடுத்தேன்.

இனி, நம் படத்தில் பின்புல நீல நிறத்தில் எங்காயினும் சொடுக்குங்கள். கீழ்க்கண்டவாறு நீல நிறம் எங்கேயெல்லாம் இருக்கின்றதோ அது எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்!

அடடா! இதில் திருவள்ளுவரும் சேர்ந்தல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்? நமக்கு பின்புல நிறம் மட்டும் தானே மாற்ற வேண்டும்.? அதற்குத் தான் மந்திரக் கோல் தேவை! எனவே கீழ்க்கண்டவாறு மாய மந்திரக் கோலைத் தேர்ந்தெடுங்கள்.

இதிலும் அதிகபட்ச நிற வேறுபாட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இங்கே தான் சிறிது கவனம் தேவை! ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து சிலவற்றை நீக்க Ctrl கீயை அழுத்திக் கொண்டே தேர்ந்தெடுக்கவேண்டும். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியுடன் சிலவற்றைச் சேர்க்க Shift கீயை அழுத்திக் கொண்டே தேர்ந்தெடுக்கவேண்டும். அவ்வளவு தான். நீங்கள் Ctrl அழுத்தினால் - என்ற குறியீடும், Shift அழுத்தினால் + என்ற குறியீடும் மவுஸ் அம்புக்குறியின் மேல் காட்டப்படுவதையும் காணுங்கள். இனி, திருவள்ளுவரின் படத்தை மட்டும் பெரிதாக்கிக் கொண்டு, அவரது முன்புல நீல நிறத்தின் மேல், Ctrl கீயை அழுத்திக் கொண்டே ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் மேல் மந்திரக் கோலைக் கொண்டு சென்று கிளிக் செய்யுங்கள்! இதனால் அவர் மேல் இருக்கும் நீல நிறம் மட்டும் தேர்ந்தெடுக்காமல் விடப்படுவதைக் காணலாம்!

இப்படியே கழித்துக் கொண்டே வந்தால் திருவள்ளுவரின் மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை நீக்கி விடலாம். இதன் மூலம் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையில்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்ததில் இருந்து நீக்கவும் இயலும்! இதோ முழுமையாக பின்புலம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.

இனி பின்புல வண்ணத்தை மாற்றுவோம்! அதற்கென்று நிறையக் கருவிகள் இருக்கின்றன. முக்கியமானவை பெயிண்ட் டப்பாவும், வாட்டநிறக் கலவையும் (Gradient). நாம் தேர்ந்தெடுத்தது வாட்ட நிறக்கலவை தான்!

அதில் பல வண்ணக் கலவைகள் உண்டு. அதாவது ஒரு நிறத்திலிருந்து இன்னொரு நிறத்திற்கு வாட்டப்படி வரையும் ஒரு அரிய கருவி இது. அனைத்து புகைப்படத்திருத்தி மென்பொருட்களிலும் கட்டாயம் இருக்கும். GIMP மென்பொருளிலும் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வண்ணக் கலவையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். அதிலேயே பல வசதிகள் உண்டு! வட்ட வடிவில் நிரப்ப, செவ்வகமாய் நிரப்ப என்று. நான் Dark1 என்ற நிறக்கலவையையும் அதில் நிரப்ப Linear என்ற வடிவத்தையும் தேர்ந்தெடுத்துள்ளேன்.

இனி தேர்ந்தெடுத்த படத்தின் குறுக்கு நெடுக்காக கீழ்க்கண்டவாறு ஒரு கோடு வரையுங்கள்!

படத்தின் பின்புலம் நிரப்பப்பட்டு விடும்! பின்னர் Select -> None என்று தேர்ந்தெடுங்கள்.

இதோ வேறு பின்புலத்துடன் நமது படம் தயார்!

இதில் இன்னும் feather edge கொண்டு தேர்ந்தெடுத்தால் இன்னும் அழகாக வந்திருக்கும்! இந்த இரு கருவிகளையும் பல விதங்களில், பல இடங்களில் படத்தின் பாகங்களைத் தேர்ந்தெடுக்க உபயோகப்படுத்தலாம். நீங்களும் இதை உபயோகித்து சில படங்களை மாற்றிக் காட்டுங்களேன்!
மிக அருமையாகச் செய்திருக்கின்றீர்கள் பாரதி. பாராட்டுக்கள். நிழலையும் மாற்றி கொஞ்சம் நகாசு வேலை செய்தேன்!
படம் கிடைக்கவில்லை
17 மார்ச் 2008
அடுத்ததாக மூன்றே நிமிடங்களில் இது போன்ற படம் தயாரிப்பது எப்படி என்று காண்போமா?
படம் கிடைக்கவில்லை
முதலில் கீழ்க்கண்டவாறு இரண்டு படங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்
2 படங்கள் கிடைக்கவில்லை
இப்படங்கள் இரண்டையும் ஜிம்ப்பில் இரண்டு அடுக்குகளாகக் (Layers) கீழ்க்கண்டவாறு மலர்களைக் கீழாகவும், குழந்தையின் படத்தினை மேலாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்
படம் கிடைக்கவில்லை
இப்போது மலரின் மையத்தையும், குழந்தையின் முகத்தையும் நேராக்க வேண்டுமல்லவா? அதற்காக குழந்தையின் லேயரின் ஒளி ஊடுருவும் தன்மை (Transparency) அதிகரியுங்கள். கீழ்க்கண்டவாறு Opacity என்றிருக்கும். அதை 60 என்று தேர்ந்தெடுக்கவும்.
படம் கிடைக்கவில்லை
கீழ்க்கண்டவாறு நகர்த்தும் கருவியைத் தேர்ந்தெடுக்கவும்.
படம் கிடைக்கவில்லை
முகத்தை மலரின் மையத்துக்குத் தேவையான அளவு நகர்த்தவும். தேவைப்பட்டால் அடுக்கின் நீள அகலத்தைக் குறைத்தோ அதிகப்படுத்தியோ செய்ய முடியும். இப்போதைக்கு அப்படியே நகர்த்துகின்றோம்.
படம் கிடைக்கவில்லை
இப்போது தான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கின்றோம். குழந்தை அடுக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, Layer -> Mask -> Add Layer Mask தேர்ந்தெடுக்கவும்.
படம் கிடைக்கவில்லை
கீழ்க்கண்டவாறு கறுப்பைத் தேர்ந்தெடுத்து மூடவும்.
படம் கிடைக்கவில்லை
இனி கீழ்க்கண்டவாறு எண்களின் வரிசைப்படி கருவிப்பட்டையில் கருவிகளைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது அழிக்கும் கருவியைத் (Eraser) தேர்ந்தெடுத்து, அதில் கீழே தூரிகையைத் (Brush) தேர்ந்தெடுத்து அதில் கீழே இருக்கும் Sparkler என்னும் தூரிகையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்!
படம் கிடைக்கவில்லை
இப்போது சுட்டை மலரின் நடுவில் கொண்டு சென்றால் கீழ்க்கண்டவாறு தூரிகை தோன்றும்.
படம் கிடைக்கவில்லை
நாம் முன்பு மாற்றிய Opacity 60 ஐ மீண்டும் 100ல் வைத்து விடவும். அப்படியே மலரின் நடுவே நமது அழிப்பானை வைத்து அழிக்க அழிக்க குழந்தையின் முகம் தெரியக் காணலாம்!
2 படங்கள் கிடைக்கவில்லை
நமக்குத் தேவையான அளவுக்குத் திரையை விலக்குவதன் மூலம் கீழ்க்கண்ட படத்தை எளிதாய்ப் பெறலாம்!
படம் கிடைக்கவில்லை
இந்த அடுக்கு மறைப்பான் (Layer Mask) ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். இன்னும் அதை எப்படியெல்லாம் உபயோகப்படுத்த இயலும் என்று அடுத்தடுத்த பாடங்களில் பார்ப்போம். இனி வீட்டுப்பாடம். யாரேனும் ஒருவர் உடலுக்கு வேறொருவரின் தலையை இந்த முறை மூலம் வைத்துக் காட்டுங்களேன்!
18 மார்ச் 2008
மிக எளிது தான் சகோதரி. GIMPல் பல அடுக்குகளில் படங்களை அடுக்கி, அதன் மூலம் நமக்கு வேண்டிய படத்தை அழகாய்ப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். படங்களை அடுக்குகளில் ஏற்ற மூன்று வழிகள் (எனக்குத் தெரிந்தவை!) இருக்கின்றன. ஒவ்வொன்றாய்க் காண்போம்.
- ஒரு படத்தைத் திறந்ததும், இன்னொரு படத்தைத் திறக்க, படம் இருக்கும் சாளரத்தில் File -> Open as Layers என்று கீழ்க்கண்டவாறு இருக்கும் வசதியை உபயோகித்துத் திறத்தல்.
படம் கிடைக்கவில்லை
- இழுத்துப் போடும் முறை (Drag and Drop)
கீழே கண்டவாறு ஒரு படத்தின் ஐகானை சுட்டி மூலம் இழுத்து அடுக்குகள் பகுதியில் இடுவதன் மூலம் அந்தப் படம் ஒரு அடுக்காக வந்துவிடும். இதே முறையில் இன்னொரு GIMP திறக்கப்பட்ட படத்திலிருந்த அடுக்கையும் இவ்வாறே இழுத்துப் போடுவதன் மூலம் கொண்டு வர இயலும்.
படம் கிடைக்கவில்லை
- படியெடுக்கும் முறை (Copy Paste)
இணைய தளத்தில் வலது சொடுக்கிட்டு படத்தைப் படியெடுத்து (Copy Image) அல்லது எந்த மென்பொருளில் இருந்தும் படியெடுத்து கீழ்க்கண்டவாறு இங்கே ஒட்டினால் போதும்.
படம் கிடைக்கவில்லை
அப்போது கீழ்க்கண்டவாறு வரும்.
படம் கிடைக்கவில்லை
பின்னர் புது அடுக்கு பட்டனை அழுத்தினால் போதுமானது ஆகும்.
படம் கிடைக்கவில்லை
கீழ்க்கண்டவாறு படம் படியெடுத்து புது அடுக்கில் ஒட்டப்பட்டு விடும்.
படம் கிடைக்கவில்லை
19 மார்ச் 2008
இனி நமது அடுத்த பாடமாக வேறு மென்பொருள் உதவியின்றி சமீபத்தில் முருகா தந்த அலைகளை உருவாக்குவோமா? இதோ மாதிரி
படம் கிடைக்கவில்லை
20 மார்ச் 2008
நல்லது. இதோ ஆரம்பித்து விடலாம்! முதலில் கீழ்க்கண்டது போன்ற ஒரு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
2 படங்கள் கிடைக்கவில்லை
இப்போது கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். இதில் குறிப்பிட்ட விஷயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். முதலில் எண் 4ல் வட்டமிட்டுக் காட்டியிருப்பதைக் கண்ணுறுங்கள். இந்தப் படத்தின் அகலம் மற்றும் உயரம் (362 x 600) என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இப்போது நமக்குத் தேவை ஒரு பிரதிபலிப்பு. அதற்கு படத்தின் பாதிக்கும் கீழ் இருக்கும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இனி படத்தில் காட்டியுள்ளவாறு:
- படத்தினை நம் வசதிக்கேற்ற அளவில் சுருக்கி வைத்துக் கொள்ளுங்கள். இங்கே 50% ஆக சுருக்கி வைத்துள்ளேன்.
- செவ்வகத் தேர்வுக் கருவி (Rectangle Selection Tool) தேர்ந்தெடுங்கள்.
- கீழிருந்து மேலாக தேர்ந்தெடுக்கும் கருவி மூலம் சுட்டியைப் பயன்படுத்தி இழுங்கள். (Drag)
- படத்தின் மொத்த உயரம் 600 பிக்செல்கள். எனவே நமக்கு பாதி படம் வேண்டுமாயின் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது 362 பிக்செல்கள் அகலம் (இதில் மாற்றமில்லை) மற்றும் 300 பிக்செல்கள் உயரம் (அதாவது படத்தின் உயரத்தில் பாதி)
- அதை நீங்கள் கீழே இருக்கும் நிலவர பட்டையில் (Status Bar) காணலாம். எனவே 362 x 300 வந்ததும் நிறுத்தி விடுங்கள். பாதிப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விடும்.
படம் கிடைக்கவில்லை
இனி பிரதிபலிப்பு காலுக்குக் கீழே தெரியவேண்டுமல்லவா? அதற்கு இடம் கொடுக்க நம் படத்தைப் பெரிதாக்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்டவாறு Image -> Canvas Size தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
கீழ்க்கண்ட சாளரம் வரும். அதில் குறிப்பிடப்ப்ட்டிருப்பது போல், இணைப்புச் சங்கிலியைப் பிரித்தெடுங்கள் (இதனால் படத்தின் அகலம் அல்லது உயரத்தை மட்டும் மாற்ற முடியும். இல்லாவிடில் உயரம் மாற்றினால் அதற்குத் தகுந்த வாறு அகலமும் மாறும்) பின்னர் உயரத்தை மட்டும் 900 என்று தேர்ந்தெடுங்கள் (நமது பிரதிபலிப்பின் உயரம் 300 என்பதால் ஏற்கனவே இருந்த 600 உடன் இந்த 300ஐயும் கூட்டி 900 ஆகின்றதல்லவா?) பின்னர் Resize ஐ அழுத்துங்கள். அப்போது படத்தின் கீழே காலி இடம் தோன்றக் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
இனி நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்த பகுதியை மட்டும் Ctrl+C அல்லது Edit -> Copy என கீழே காட்டியிருப்பது போல் படியெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
பின் Ctrl+V அல்லது Edit -> Paste உபயோகித்து ஒட்டுங்கள். அப்போது கீழ்க்கண்டவாறு ஒரு மிதக்கும் அடுக்கு (Floating Layer) உருவாகும்.
படம் கிடைக்கவில்லை
இப்போது அந்த அடுக்கை நிரந்தரமாக்க, கீழே இருக்கும் கருவிப்பட்டையின் மூலமோ அல்லது வலது சொடுக்கைப் பயன்படுத்தியோ புதிய அடுக்கைத் தேர்ந்தெடுங்கள். (New Layer)
படம் கிடைக்கவில்லை
இப்போது புதிய அடுக்கில் நமது பிரதிபலிப்பு மட்டும் இருக்கக் காணலாம். அந்த அடுக்கைத் தேர்ந்தெடுத்து, நகர்த்தும் கருவியின் மூலம் சரியாகக் கீழே நகர்த்துங்கள். அப்போது Move 0,300 என்று இருப்பதன் மூலம், உயரம் மட்டும் 300 நகர்த்தியிருக்கின்றோம் என்பதை அறியலாம்!
படம் கிடைக்கவில்லை
இப்போது பிரதிபலிப்பு தலைகீழாய் இருக்க வேண்டுமல்லவா? எனவே Layer -> Transform -> Flip Vertically என்று கீழே காட்டியிருப்பது போல் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
இப்போது கீழே காட்டியுள்ளவாறு பிரதிபலிப்பு தலைகீழாகி விடும்!
படம் கிடைக்கவில்லை
இப்போது தலைகீழான பிரதிபலிப்பு அடுக்கைத் தேர்ந்தெடுத்து வலது சொடுக்கிட்டு, Merge Down என்று அதாவது கீழே இருக்கும் நமது படத்துடன் இணையச் செய்யுங்கள்!
படம் கிடைக்கவில்லை
இப்போது மீண்டும் முன்போலவே செவ்வகத் தேர்ந்தெடுக்கும் கருவியைத் தேர்ந்தெடுத்து கீழிருந்து 362 x 300 அளவுக்கு அதாவது நமது பிரதிபலிப்பு மட்டும் தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்ததாக Filters -> Animation -> Waves தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
வரும் சாளரத்தில் Ok கொடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
கீழ்க்கண்டவாறு நமது படம் உருவாகக் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
அதில் வரிசையாக பல அடுக்குகள் இருப்பதைக் காணுங்கள். அப்படியே அசைபடமாக இதைச் சேமிக்க முடியும் எனினும், படத்தின் நினைவக சேமிப்பு அளவு அதிகமாக இருக்கும். எனவே, அதைக் குறைக்க, கீழ்க்கண்டவாறு Filters -> Animation -> Optimize for Gif என்று தேர்ந்தெடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
இப்போது நமது படத்தில் அசையாத பகுதியான மேல்பகுதி ஒரு அடுக்காகவும், அசையும் பகுதிகள் அனைத்தும் சேர்ப்பு (Combine) என்ற விகுதியுடன் இருப்பதையும் காணலாம்!
படம் கிடைக்கவில்லை
இனி File -> Save என்று கொடுங்கள். கோப்புக்கு ஏதேனும் ஒரு பெயரிட்டு (உதாரணம் mouse.gif) என்று சேமியுங்கள். வரும் சாளரத்தில் கீழ்க்கண்டவாறு Save as Animation தேர்ந்தெடுத்து Export அழுத்துங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுத்து வரும் சாளரத்தில் Ok கொடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அவ்வளவு தான் நமது பிரதிபலிப்பு அசைபடம் தயார்!
படம் கிடைக்கவில்லை
இன்னும் பல விதங்களில் இதை மெருகேற்ற இயலும். அதையும் காணலாம். நீங்களும் இது போன்று தயாரிக்கலாமே!?
5 ஏப்ரல் 2008
முதலில் இப்படி இருந்த படம்
படம் கிடைக்கவில்லை
பின்னர் இப்படி ஆக்குவது எப்படி?
படம் கிடைக்கவில்லை
முதலில் படத்தைக் கீழ்க்கண்டவாறு திறந்து கொள்ளுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அடுக்குகள் பகுதியில் (Layers) படத்தின் அடுக்கில் வைத்து வலது சொடுக்கிட்டு கீழ்க்கண்டவாறு அதைப் பிரதி எடுங்கள்.
படம் கிடைக்கவில்லை
இது தான் முக்கியமான கட்டம்! பிரதியிட்ட அடுக்கின் தன்மை (Mode)யை Overlay என்று தேர்ந்தெடுத்து பரவுமாறு செய்யுங்கள்.
படம் கிடைக்கவில்லை
அவ்வளவே தான்! நமது படம் எத்தனை பளிச்சென்று ஆகி விட்டது என்று பாருங்கள்!
படம் கிடைக்கவில்லை
இனி வரும் பாடங்கள் எல்லாம் இந்தத் தன்மைகளை வைத்துத் தான்! நீங்களும் சில படங்கள் செய்து பாருங்கள். ஆச்சரியப்படுங்கள்!
13 அக்டோபர் 2008
இந்த மாதம் ஆரம்பத்தில் ஜிம்ப்பின் புதிய பதிப்பு 2.6.1 வெளியிடப்பட்டது. பல்வேறு அருமையான அம்சங்களைக் கொண்டு கலக்கலாக வெளிவந்துள்ளது ஜிம்ப். இவ்வளவு நல்ல மென்பொருளில் இது மட்டும் பிரச்னையாக இருக்கின்றதே என்று எண்ணிய அனைத்தும் நீக்கப்பட்டதுடன், இது இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிய பல வசதிகளைக் கொண்டு சிறப்பாக வெளி வந்துள்ளது. தொழில்முறை மென்பொருளில் கூட இல்லாத வசதிகள் இப்போது ஜிம்ப்பில். அடுத்த பதிப்பான 2.8ல் இப்போதே எழுத்துக்களை நினைத்த படி அமர்க்களம் செய்யும் வசதி வர இருக்கின்றதாம். இப்போதே சொல்லிவிட்டனர். மிக அருமையான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி மகிழுங்கள். http://www.gimp.org (15 எம்.பி.)
13 டிசம்பர் 2008
அத்தனையும் அருமையாக இருக்கின்றது சிவஹரி. பிரதிபலிப்பு அசைபடத்தில் அனைத்து சட்டங்களிலும் Replace என்று இருக்கின்றது. அதற்குப் பதில் Combine என்று இட்டு விடுங்கள். கீழ்க்கண்டவாறு ஆகிவிடும்.
படம் கிடைக்கவில்லை
முன்புல, பின்புலத் தேர்வுக் கருவியைத் திரும்பக் கொண்டு வர கீழ்க்கண்டவாறு இருக்கும் ஐகானை அழுத்தினால் இரண்டாவது படத்தில் இருப்பது போன்று காணக் கிடைக்கும். அதில் காட்டியுள்ளவாறு தேர்ந்தெடுங்கள்.
2 படங்கள் கிடைக்கவில்லை
4 ஜூலை 2009
படம் கிடைக்கவில்லை
இப்படி இருக்கும் படத்தை
படம் கிடைக்கவில்லை
இப்படி
படம் கிடைக்கவில்லை
அல்லது
படம் கிடைக்கவில்லை
இப்படி மாற்றுவது எப்படி என்று காண்போமா?
முதலில் மாற்ற வேண்டிய படத்தை GIMP மென்பொருளில் திறந்து கொள்ளுங்கள். படம் - 1
படம் கிடைக்கவில்லை
இடதுபுறம் இருக்கும் அடுக்குகளை (Layers) நிர்வகிக்கும் பகுதியில் படத்தின் அடுக்கைத் தேர்ந்தெடுத்து வலது சொடுக்கிட்டு படத்தில் காட்டியுள்ளவாறு அடுக்கை நகலெடுங்கள் படம் - 2
படம் கிடைக்கவில்லை
உடனே கீழ்க்கண்டவாறு ஒரு புதிய அடுக்கு உருவாக்கப்படும். அந்த அடுக்கைத் தேர்ந்தெடுத்து மேலே வண்ணங்கள் வசதியைத் தேர்ந்தெடுத்து தெவிட்ட நீக்கத்தைத் தேர்ந்தெடுங்கள். படம் - 3
படம் கிடைக்கவில்லை
வருகின்ற சட்டத்தில் Average என்பதைத் தேர்ந்தெடுத்துச் சரி என்பதை அழுத்திடுங்கள். படம் - 4
படம் கிடைக்கவில்லை
அவ்வாறு செய்தவுடன் நாம் தேர்ந்தெடுத்த மேலிருக்கும் அடுக்கு கருப்பு வெள்ளையாக மாறி விடும். பின் அதனூடே ஒளிபுகச் செய்தல் வேண்டும். அப்போது நாம் பின்புறம் இருக்கும் வண்ணங்களாலான குறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்ட இயலும்! இதற்கு அடுக்கை வலது சொடுக்கிட்டு அடுக்கு மறைமூடியைச் சேர்க்கவேண்டும். படம் - 5
படம் கிடைக்கவில்லை
அப்போது வரும் சட்டத்தில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் White (full opacity) என்பதை மாற்றாமல் சரி என்று அழுத்தவும். படம் - 6
படம் கிடைக்கவில்லை
இப்போது அந்த அடுக்கின் வலது புறத்தில் முழுதும் வெள்ளையான ஒரு சதுரம் சேர்க்கப்படும். இப்போது வண்ணம் பூசும் தூரிகையைப் படத்தில் காட்டியுள்ளது போல் தேர்ந்தெடுக்கவும். படம் - 7
படம் கிடைக்கவில்லை
தூரிகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர், தூரிகையின் பண்புகள் பெட்டியில், Circle Fuzzy எனப்படும் மெல்லிய வண்ணமிடும் தூரிகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். படம் - 8
படம் கிடைக்கவில்லை
கருப்பு வண்ணத்தில் தூரிகையின் வடிவத்தை நமது படத்தின் அளவுக்குத் தக்கவாறு பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றிக் கொள்ளவும். நான் எடுத்துக் கொண்ட படம் சற்றே பெரியதென்பதால் 10.00 என்ற அளவை இட்டிருக்கின்றேன். படம் - 9
படம் கிடைக்கவில்லை
இனி நமது படத்தில் எங்கே வண்ணம் தேவையோ அங்கே தூரிகை கொண்டு இடது சொடுக்கிட்டு வண்ணம் பூசவும். :) இப்போது சிறிது சிறிதாகப் பின்புறமிருக்கும் வண்ணம் தோய்ந்த படம் தெரியக் காணலாம். நமக்குத் தேவையான பகுதிகள் யாவையும் இவ்வாறு தூரிகை மூலம் தேர்ந்தெடுக்கலாம். படம் - 10
படம் கிடைக்கவில்லை
இவ்வாறு முடிவடைந்தவுடன், நாம் தேர்ந்தெடுத்த அடுக்கு மறைமூடியில் சதுர வடிவத்தில் சில பகுதிகள் மட்டும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இது போதுமென்றால் அப்படியே படத்தைச் சேமிக்கலாம். படம் - 11
படம் கிடைக்கவில்லை
இப்போது முன்புறமிருக்கும் கருப்பு வெள்ளைப் படத்தின் நிறத்தை மாற்றுவதன் மூலம் சில மாயாஜாலங்களைச் செய்ய இயலும். இனி அடுக்கு மறைமூடியைத் திருத்தத் தேவையில்லாததால், அடுக்கின் மீது வலது சொடுக்கிட்டு, "அடுக்கு மறைமூடியைத் திருத்து" என்பதில் இடப்பட்டிருக்கும் குறியீட்டை நீக்கவும். படம் - 12
படம் கிடைக்கவில்லை
பின்னர் வண்ணங்கள் பட்டையிலிருந்து நிறச்சமன் எனப்படும் வசதியைத் தேர்ந்தெடுங்கள். படம் - 13
படம் கிடைக்கவில்லை
வரும் சட்டத்தில் Highlights என்ற வசதியைத் தெரிவு செய்து கொண்டு, படத்தில் சிகப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய வண்ணங்களை நோக்கி விசையைச் சொடுக்கி நகர்த்துங்கள். இதன் மூலம் பழங்காலப் படம் போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும். படம் - 14
படம் கிடைக்கவில்லை
அல்லது கீழ்க்காட்டியிருப்பது போன்று நீலத்தை முழுமையாக்கிப் பச்சையை நடுமையாக்கி இரவில் படமெடுத்தது போன்ற தோற்றத்தையும் உருவாக்க இயலும்! படம் - 15
படம் கிடைக்கவில்லை
அல்லது வடிப்பியைத் (Filters) தேர்ந்தெடுத்து நமது விருப்பம் போல முன் அடுக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். வண்ணத்துடன் கூடிய மலர் மட்டும் அப்படியே இருக்கும். இது நாம் இங்கே (http://muthamilmantram.com/viewtopic.php?p=437133#p437133) ஏற்கனவே கண்ட பாடத்துடன் தொடர்புடையதே. அங்கே இரு வேறு படங்களை உபயோகித்துச் செய்தோம். இங்கே அதே படத்தில் சில பகுதியை மட்டும் மாற்றம் செய்ய இந்த வசதி பெரிதும் உதவிகரமாக இருக்கின்றது.
படம் கிடைக்கவில்லை